சவால்

மோட்டார் விகடன் டீம் கே.கார்த்திகேயன்

யார் மைலேஜ் கிங்?

1 லிட்டர் பெட்ரோலை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?

மோட்டார் விகடன் டீமுக்கு எழுந்த கேள்விக்கான பதில் என்ன?!

சென்னை ஸ்பென்ஸர் பிளாஸா அருகே இருக்கும் 'மோட்டார் விகடன்' அலுவலகத்தில் இருந்து 1 லிட்டர் பெட்ரோலில் சோழவரத்தில் உள்ள ரேஸ் டிராக்குக்குச் சென்று

திரும்ப வேண்டும் என்பதுதான் சவால்! ஹோண்டா யூனிகார்ன், டிவிஎஸ் அப்பாச்சி 180, பஜாஜ் பல்ஸர் 180 என மூன்று பைக்குகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்!

மூன்று பைக்குகளிலுமே இருந்த பெட்ரோல் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டு, தலா 1 லிட்டர் பெட்ரோல் மட்டுமே ஊற்றப்பட்டது! ரோடு டெஸ்ட் போல இல்லாமல், டிராஃபிக் நெருக்கடிகள் இல்லாத சாலைகளையே தேர்ந்தெடுத்தோம். அதேபோல், அதிகமாக பிரேக்குகளைப் பயன்படுத்தாமல், கிளட்ச்சின் பயன்பாட்டையும் குறைத்து, மேடு பள்ளங்களில் அதிகம் பயணிக்காமல், அடக்கமாகவே மூன்று பைக்குகளையும் ஓட்டுவது என முடிவு செய்தோம்.

மோட்டார் விகடன் அலுவலகத்தில் இருந்து சோழவரம் ரேஸ் டிராக் சரியாக 30.8 கி.மீ தூரத்தில் இருக்கிறது! புது ஆவடி சாலை, பாடி மேம்பாலம், புழல், செங்குன்றம் வழியாக சோழவரம் ரேஸ் டிராக்கை அடைந்தோம். மூன்று பைக்குகளுமே நல்ல பிள்ளைகளாக சோழவரம் ரேஸ் டிராக்குக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வந்துவிட்டன.

சோழவரம் ரேஸ் டிராக்கில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு மீண்டும் வந்த ரூட்டிலேயே மோட்டார் விகடன் அலுவலகத்துக்குப் புறப்பட்டோம். சரியாக சோழவரத்தில் இருந்து 16.4 கி.மீ தாண்டியதும் அப்பாச்சியில் இருந்த பெட்ரோல் தீர்ந்துபோனது. 1 லிட்டர் வைத்துக்கொண்டு அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180-ல் பயணம் செய்த தூரம் 47.2 கி.மீ.

இப்போது பல்ஸருக்கும், யூனிகார்னுக்கும் இடையே சவால் துவங்கியது! ஆனால், அதிக மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட யூனிகார்னிலும் பெட்ரோல் தீர்ந்து போனது. ஹோண்டா யூனிகார்னின் மைலேஜ் 52.8 கி.மீ.

வியக்கவைத்த பல்ஸர்!

அப்பாச்சிக்கு அடுத்தபடியாக பெட்ரோல் தீர்ந்துவிடும் என எதிர்பார்த்த பல்ஸரின் மைலேஜ் வியக்கவைத்தது. 'இப்போது நின்றுவிடுமா? எங்கே நிற்கப் போகிறது?' என எதிர்பார்த்து எதிர்பார்த்து அலுத்துப் போக... ஒரு லிட்டர் பெட்ரோலில் மீண்டும் மோட்டார் விகடன் அலுவலகத்துக்கே வந்துவிட்டது பஜாஜ் பல்ஸர் 180.

61.6 கி.மீ தூரத்தை 1 லிட்டர் பெட்ரோலில் கடந்துவிட்டது பஜாஜ் பல்ஸர்!