எஸ்.ஷக்தி

தி.விஜய்

கார்களைப் பந்தாடும் மலைப்பாதை!

இரண்டு நாட்கள் அஸைன்மென்ட்டாக கோவையிலிருந்து ஊட்டி கிளம்பினோம். ஒவ்வொரு முறையும் நீலகிரிக்கு செய்தி சேகரிக்கச் செல்லும்போது, மலைப் பாதையைத் தொட்டதுமே மனசு லேசாக ஆரம்பிக்கும். அந்த ஜிலீர் சூழலில் எங்கள் பைக்கின் இன்ஜின்கூட இதமாகத்தான் இயங்கும். ஆனால், அன்றைய பயணம் நேர் எதிர்மாறாக இருந்தது. மலைப் பாதையை நெருங்க நெருங்க மனதுக்குள் கடும் நெருடல்... பாதை முழுக்க சகிக்க முடியாத சரிவுக் காட்சிகள்...

கோத்தகிரியிலிருந்து வண்டிச்சோலை வழியாக குன்னூரைத் தொட்டபோது மனம்

கலங்கிவிட்டது. 500 அடி உயரத்திலிருந்து பொத்துக்கொண்டு சரிந்த மண், பெரிய பெரிய பாறைகளையே நகர்த்தியிருந்தது. குன்னூர் அருகே அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் 6 கார்கள் உருக்குலைந்து கிடந்தன. 'வேற வழியில்லையாம். பழைய இரும்புக்குத்தான் போடோணும்னு சொல்றாங்கடா!' - உடல் சுருங்கிக் கிடந்த தனது மாருதியின் மீது படிந்திருந்த சேற்றைத் துடைத்தபடியே யாரிடமோ விசும்புகிறார் அதன் ஓனர். அருவங்காடு, மந்தாடா, ஊட்டி வரை இப்படிப்பட்ட சோகம்தான்.

இரண்டாம்
நாள் பிற்பகலில் மஞ்சூர் வனச்சாலை வழியாக காரமடை நோக்கி இறங்க ஆரம்பித்தோம். பள்ளத்துக்குள், கவிழ்த்துப்போட்ட ஆமை போல ஒரு கார் தலை குப்புறக் கிடந்தது. கிரேனிலிருந்து இறங்கிய இரும்புக் கயிற்றை காரின் சேஸியில் கட்டி இருந்தார்கள். 'யேய் முருகா! ஓகேடா... இழுக்கலாம்டா' என்றதும் கிரேன் தனது இரும்பு நாக்கை இழுக்க ஆரம்பித்தது. பெரும் மரக் கிளைகளுக்கு நடுவிலிருந்து கடுமையாகச் சரசரத்த படியே வெளியே எழும்ப ஆரம்பித்தது கார். அப்போது 'பார்த்து இழுங்க பாஸ¨... ரொம்ப ஸ்க்ராட்ச் ஆகிடப் போவுது' என்றொரு குரல். திரும்பிப் பார்த்தால் சற்றே கலங்கிய கண்களுடன் காரின் சொந்தக்காரர்.

'என்னாச்சுங்ணா?' என்று கேட்டால், ''அது என்னோட சொனாட்டா கார். குன்னூர் ரூட் பிளாக் ஆகிட்டதால இந்த வழியா ஊட்டிக்கு ஏறலாம்னு பார்த்தோம். நேத்து நைட்ல இந்த இடத்துக்கு வந்தப்ப காரை ஓரங்கட்டி நிறுத்திட்டு, நாலு பேரும் கீழே இறங்கி ஒன்ஸ் அடிக்கப் போனோம். காரை ஓட்டிக்கிட்டு இருந்த நண்பர், அவசரத்துல நியூட்ரல்ல அதுவும் ஹேண்ட் பிரேக்கூட போடாம விட்டுட்டு வந்துட்டான். நாங்க இறங்குன ரெண்டு நிமிஷத்துல திடீர்னு கார் மூவ் ஆக ஆரம்பிச்சுடுச்சு. தடதடன்னு பின்னாடியே ஓடுனோம். ஆனாலும், கண்ணு முன்னாடியே சரிவுல கார் இறங்கிடுச்சு. ஒரே இருட்டா இருந்ததால என்ன நடந்துச்சு, ஏதாச்சுன்னே புரியலைங்க. விடிஞ்சதும் பார்த்தா இப்படி கவுந்து கிடக்குது. நல்லவேளை காருக்குள்ளே யாரும் இல்லை. ஆனா, 15 லட்ச ரூபா கார் இப்படி உருண்டு கிடக்குறதைப் பார்த்தா உயிரே போற மாதிரி இருக்குது'' என்றார்.

''இந்த மாதிரியான காட்சிகளை நீலகிரி மலைப் பகுதியில் அடிக்கடி பார்க்கலாம். அதிலும், கல்லட்டி சாலையில் இப்படி நடக்காத நாட்கள் அபூர்வம். இதில் பல விபத்துகள் உயிர்ப் பலியோடு முடிவதுதான் பெரும் சோகம்.

''தண்ணியடிச்சுட்டு மலையேறுறவங்களும், இறங்குறவங்களும் இப்படித்தானுங்ணா குழிக்குள்ளே விழுந்துடுவாங்க. சில பேர் ஃபேமிலியோட பள்ளத்துக்குள்ளே பாய்ஞ்சுடுவாங்க. உயிர்ச் சேதமில்லாம ஆளுங்களைக் காப்பாத்தித் தூக்கிட்டு வர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடும். காரை இழுக்கப்போன எங்க பசங்க, காரோடவே பள்ளத்துக்குள்ளே சரிஞ்ச கொடுமையும் நடந்திருக்கு. உடம்புல கயித்தக் கட்டிக்கிட்டு உயிரைப் பணயம் வெச்சு இதைச் செய்றோம். ஆனாலும் காரை எடுத்த பிறகு பேசுன பணத்தைக் கொடுக்குறதுக்குப் போராட வைக்கிறாங்க'' என்கிறது இந்த ரெஸ்க்யூ க்ரூ. ஆனால், 'பாதாளத்தில் சின்ன தூரத்தில் விழுந்து கிடக்கும் காரை வேண்டுமென்றே அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு, கொள்ளைப் பணம் சார்ஜ் பண்ணுகிறார்கள்' என்று இந்த டீம் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

இதெல்லாம் போக, நீலகிரியில் அடிக்கடி வாகனங்கள் உருளும் அபாயகர இடங்களுக்குள் இறங்கி, நொறுங்கிக் கிடக்கும் பாகங்களைக் கொண்டு வந்து விற்று பிழைப்பு நடத்தும் ஏழை பாழைகளும் இருக்கிறார்கள். அதிலும், பள்ளத்தாக்கின் அடியிலிருக்கும் காட்டாறுக்கே போய் அங்கே புதைந்து கிடக்கும் பாகங்களைத் தூக்கி வருகிறவர்கள்கூட உண்டாம்!