முனைகளில் கம்ப்ரஷன் லீக் ஆகாமல் இருக்க பிளேடுகள் பொருத்தப்பட்டன. இந்த இன் ஜினுக்குள் 2 ஸ்ட்ரோக் இன்ஜின் போல பெட்ரோலுடன் ஆயிலும் கலக்க வேண்டும். பிளேடுகள் சீக்கிரமே தேய்ந்துவிடும் சிக்கல் இதில் இருந்தது. இதுதான் இந்த இன்ஜினின் பாதகமான அம்சம்.
இதே காலகட்டத்தில், இந்த இன்ஜினைக் கொண்டு ரேஸ் பைக்கு களை வடிவமைத்தது நார்ட்டன். இதில், மூன்றாவது ஜெனரேஷனான 'என்.ஆர்.எஸ் 588' எனும் லிக்விட் கூல்டு ரேஸிங் பைக், ஸ்டீவ் இஸ்லப் எனும் ரேஸ் வீரரால், 1992-ல் ஐல் ஆஃப் மேன் மற்றும் பிரிட் டீஷ் சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் ஆகிய விருதுகளைத் தட்டிச் சென்றது. ஒரு காலகட்டத்தில், சூப்பர் பைக் போட்டி விதிமுறைகள் முற்றிலும் மாற்றப்பட்டதால், தொடர்ந்து நார்ட்டனால் பங்கு பெற முடியாமல் விலகியது.
காலப்போக்கில் இந்த இன்ஜின் மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் மறைந்துவிட்டாலும், மஸ்டா நிறுவனம் மட்டும் தன்னுடைய 'ஆர்.எக்ஸ்' எனும் கார் மாடல்களில் இந்த இன்ஜினை பலமடங்கு மேம்படுத்தி இன்றுவரை பயன்படுத்தி வருகிறது. தற்போது, இன்றைய நவீன தொழில்நுட்பத்துடன் 'நார்ட்டன் என்ஆர்வி 588' எனும் புதிய பைக்கை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது நார்ட்டன் நிறுவனம். இந்த பைக் குறிப்பிட்ட எண்ணிக் கையில் மட்டுமே தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், இது விற்பனைக்கு வரும்போது, சுமார் 45 ஆயிரம் அமெரிக்க டாலர் களாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
|