Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
 ##~##

ஆர்.லாவண்யா, சென்னை. 

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் தினமும் காரில்தான் அலுவலகம் சென்று வருவேன். என்னுடைய வீட்டில் இருந்து அலுவலகம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். நான் தொடர்ந்து கார் ஓட்டிக் கொண்டு அலுவலகம் செல்லலாமா?

கர்ப்பமாக இருக்கும்போது கார் ஓட்டுவதைத் தவிர்ப்பதே நல்லது. குறிப்பாக, டிராஃபிக் நெருக்கடி நேரங்களில் கார் ஓட்டுவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள். கர்ப்பமாக இருக்கும்போது ரிலாக்ஸாக இருப்பது அவசியம். டிராஃபிக் நெருக்கடிகளில் கார் ஓட்டுவது டென்ஷனைக் கூட்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நீங்கள்தான் கார் ஓட்ட வேண்டும் என்றால், ஸ்டீயரிங்கில் இருந்து கூடுமான வரை தொலைவில் இருந்து கார் ஓட்டுவது நல்லது. சீட் பெல்ட் அணிய வேண்டியது கட்டாயம். மேடு-பள்ளமான சாலைகளில் கார் ஓட்டுவதைத் தவிர்ப்பதும் நல்லது!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

அபிமன்யு, சேலம்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறேன். புதிதாக பைக் வாங்கலாமென திட்டமிட்டிருக்கிறேன். ஹீரோ ஹோண்டா கரீஸ்மா ZMR, அப்பாச்சி 180 ஆர்டிஆர், யமஹா FZ , யமஹா R-15 - இந்த நான்கில் எந்த பைக்கை வாங்குவது எனக் குழப்பமாக இருக்கிறது. எனக்கு ஸ்போர்ட்டியான பைக்தான் வேண்டும். எந்த பைக் வாங்கலாம்?

ஸ்போர்ட்டியான பைக் என்றால், யமஹா ஆர்-15 தான் பெஸ்ட். பர்ஃபாமென்ஸ், ரேஸிங் அனுபவம், சூப்பர் பைக் தோற்றம் என அனைத்தும் கலந்த பைக்காக இருக்கிறது ஆர்-15. மைலேஜும் ஓகே. இன்னும் ஸ்போர்ட்டியான பைக் வேண்டுமென்றால், நீங்கள் புதிதாக வெளிவந்திருக்கும் ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக்கை வாங்கலாம். ஆனால், இதன் விலை கொஞ்சம் அதிகம் என்பதோடு, நீண்ட நாள் காத்திருக்க வேண்டும்.

பரமேஸ்வரன், திண்டுக்கல்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

டிஸ்கவர் பைக் வாங்கலாமென முடிவெடுத்திருக்கிறேன். 100 சிசி பைக் வாங்குவதா அல்லது 125 சிசி பைக் வாங்குவதா எனக் குழப்பமாக இருக்கிறது?

மைலேஜ் அதிகமாக இருக்க வேண்டும்; விலை குறைவாக இருக்க வேண்டும் என்றால், பஜாஜ் டிஸ்கவர் 100 சிசி பைக் வாங்கலாம். 100 சிசி பைக்கைவிட பர்ஃபாமென்ஸ் இன்னும் அதிகமாக வேண்டும் என்றால், நீங்கள் டிஸ்கவர் 125 சிசி பைக் வாங்கலாம்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ரஹீம், சென்னை.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

எட்டு லட்ச ரூபாய் விலைக்குள் புதிய எம்பிவி கார் வாங்கலாமெனத் திட்டமிட்டிருக்கிறேன். எனக்கு மஹிந்திரா ஸைலோ, டாடா சுமோ ஆகிய கார்கள் வாங்குவதில் விருப்பம் இல்லை. டொயோட்டா நிறுவனம் புதிதாக எம்பிவி கார் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக இன்டர்நெட்டில் படித்தேன். இது உண்மையா? அல்லது வேறு கார் ஏதும் இந்த பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறதா?

நீங்கள் டொயோட்டா அவான்ஸா காரைப் பற்றிச் சொல்கிறீர்கள். இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பிடிக்கும். இந்த கார் எட்டியோஸ் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கும் 5 பேர் உட்காரக்கூடிய எம்பிவி. நீங்கள் சொல்லும் பட்ஜெட்டில் மாருதி ஆர்-3 என்னும் எம்பிவியை வெளியிட இருக்கிறது. இது, இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும். விலைக்கேற்ற தரமான காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், நீங்கள் இந்த ஆண்டு இறுதி வரை பொறுத்திருந்தால் நல்ல எம்பிவியை வாங்கலாம்!

ஆனந்த், ஈரோடு.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

மாருதி கார் வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம். மாருதி எஸ்திலோ, வேகன்-ஆர், ரிட்ஸ் - இந்த மூன்று கார்களில் எந்த காரை வாங்கலாம்?

மூன்று கார்களில் ரிட்ஸ்தான் நல்ல சாய்ஸ். இதன் இடவசதி அதிகம் என்பதோடு, பர்ஃபாமென்ஸும் சிறப்பாக இருக்கிறது. மற்ற கார்களைவிட சிறப்பம்சங்களும் அதிகம். அதற்கேற்றபடி இரண்டு கார்களையும்விட ரிட்ஸின் விலையும் அதிகம்.

விஜயகுமார், சென்னை.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். முதல் கார் வாங்கப்போகிறேன். தினமும் அலுவலகம் சென்று வருவதற்காகத்தான் காரை அதிகம் பயன்படுத்துவேன். அதனால், சின்ன கார்தான் வேண்டும். ஃபோர்டு ஃபிகோ, போக்ஸ்வாகன் போலோ - இந்த இரண்டு கார்களில் எந்த காரை வாங்கலாம்?

ஃபோர்டு ஃபிகோ, போக்ஸ்வாகன் போலோ ஆகிய இரண்டு கார்களுமே நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ற சிறந்த கார்கள். மைலேஜைப் பொறுத்தவரை இரண்டு கார்களுமே ஒரே மாதிரியான மைலேஜையே தருகின்றன. ஆனால், விலைதான் இரண்டு கார்களுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விடுகிறது. சென்னையில் போர்டு பிகோவுக்கும், போலோவுக்கும் இடையே கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் விலை வித்தியாசம் இருக்கிறது. மேலும், போக்ஸ்வாகனில் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட உதிரி பாகங்களை வெளியே வாங்கிப் பொருத்த முடியாது. வாரன்டி சலுகைகள் பறிபோய்விடும் என்கிறது ஃபோக்ஸ்வாகன். விலையைப் பற்றிய கவலை இல்லை. ஜெர்மன் கார்தான் வேண்டும் என்றால் போக்ஸ்வாகன் போலோ வாங்கலாம். இல்லையென்றால், போர்டு பிகோவை வாங்குவதே நல்ல சாய்ஸ்!

வேல்முருகன், திண்டிவனம்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

டாடா நானோ வாங்கலாமா? குழப்பாமல் பதில் சொல்லுங்கள்...

டாடா நானோ விலை குறைவான கார் என்பதோடு, அதிக மைலேஜ் தரும் காரும்கூட! இது நகருக்குள் லிட்டருக்கு 15-16 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 24-25 கி.மீ-யும் மைலேஜ் தரும். இடவசதியைப் பொறுத்தவரை டாடா நானோ பெஸ்ட் என்றே சொல்லலாம். காருக்குள் நான்கு பேர் தாராளமாக உட்கார முடியும். ஆனால், சீட்டுகளில்தான் சொதப்பிவிட்டது டாடா. நீண்ட நேரம் உட்கார்ந்து பயணிக்கும்போது, இருக்கைகள் வலியை ஏற்படுத்துகின்றன. மேடு-பள்ளங்களில் பயணிக்கும்போது அதிகப்படியான அலுங்கல் குலுங்கல்கள், இன்ஜின் சத்தம், பிக்-அப் ஆகியவற்றில் நானோ பின்தங்கிவிடுகிறது. மற்றபடி நகருக்குள் மழை, வெயிலில் இருந்து தப்பித்து தினமும் அலுவலகம் சென்று வர குறைந்த விலையில் கிடைக்கும் கார் டாடா நானோ. விலை குறைவான கார் வேண்டும் என்றால் மட்டுமே நானோ வாங்கலாம்!

உதயகுமார், வேலூர்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஸ்கூட்டர் வாங்கலாமென இருக்கிறேன். யமஹாவில் இருந்து ஏதும் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கிறதா?

யமஹா நிறுவனம் அடுத்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவின் போது ஸ்கூட்டர்களை நம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது. ஸ்கூட்டர் தயாரிப்புக்காக சுராஜ்பூரில் உள்ள தொழிற்சாலையில் தனியாக பாடி அசெம்பிளி யூனிட்டை அமைத்து வருகிறது யமஹா. முதலில் 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை நம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது யமஹா. இது தவிர, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது.