Published:Updated:

இது ஸ்டோனர் சீசன்!

இது ஸ்டோனர் சீசன்!

இது ஸ்டோனர் சீசன்!

இது ஸ்டோனர் சீசன்!

Published:Updated:

>>சார்லஸ்  

 ##~##

ந்த ஆண்டின் பந்தயக் குதிரைகளில் முன்னணிக் குதிரை ஹோண்டாதான்! யமஹா, டுகாட்டி, சுஸ¨கி என எல்லோருக்கும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறது ஹோண்டா. நடந்து முடிந்திருக்கும் ஆறு மோட்டோ ஜீபி ரேஸ்களில், ஐந்தில் வெற்றி பெற்று வேகத்தில் நம்பர் ஒன் என நிரூபித்து வருகிறது ஹோண்டா. முன்னாள் சாம்பியனும் இந்த ஆண்டு ஹோண்டா பைக்கில் உறுமும் கேஸி ஸ்டோனர், இந்த ஆண்டு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்றே தெரிகிறது!

மோட்டோ ஜீபி- ஸ்பெயின்

மோட்டோ ஜீபி பைக் ரேஸ் பந்தயத்தின் ஐந்தாவது சுற்று, ஸ்பெயினில் உள்ள காட்டலுன்யா ரேஸ் மைதானத்தில் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 28 லேப்புகள், 118.175 கி.மீ தூரம் கொண்டது காட்டலுன்யா சர்க்யூட். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்க தகுதி பெற்றார், ஹோண்டா அணியின் மார்க்கோ சைமன்செல்லி. கேஸி ஸ்டோனர் இரண்டாவது இடத்தில் இருந்தும், யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். டுகாட்டி அணியின் வாலன்டினோ ராஸி ஏழாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

இது ஸ்டோனர் சீசன்!

ஜார்ஜ் லாரன்சோவின் சொந்த ஊரில் நடக்கும் ரேஸ் என்பதால், ரசிகர்களின் கூட்டம் முழுக்க முழுக்க ஜார்ஜ் லாரன்சோவுக்கு ஆதரவாக இருந்தது. ரேஸ் துவங்கியதுமே சீறிப் பறந்தார் ஜார்ஜ் லாரன்சோ. ஆனால், ஜார்ஜ் லாரன்சோவின் வேகம் முதல் லேப் வரைதான். இரண்டாவது லேப்பில் இருந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த கேஸி ஸ்டோனரை ஜார்ஜ் லாரன்சோவால் இறுதி வரை தடுத்து நிறுத்த முடியவில்லை. பந்தய தூரத்தை 43 நிமிடங்கள் 19 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார் ஹோண்டாவின் கேஸி ஸ்டோனர். ஸ்டோனரைவிட 2.4 விநாடிகள் பின்தங்கி இரண்டாவது இடம் பிடித்தார் ஜார்ஜ் லாரன்சோ. யமஹா அணியின் மற்றொரு வீரர் பென் ஸ்பீஸ் மூன்றாவது இடம் பிடிக்க, முன்னாள் உலக சாம்பியன் வாலன்டினோ ராஸி ஐந்தாவது இடம் பிடித்தார்.

இது ஸ்டோனர் சீசன்!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஹோண்டா அணியின் முன்னணி வீரரான டேனி பெட்ரோஸா, பிரான்ஸ் ரேஸின்போது காயமடைந்ததால் இந்த ரேஸில் கலந்து கொள்ளவில்லை. 125 சிசி பிரிவில் 'பாரிஸ் ஹில்டன் ரேஸிங்’ என்ற பெயரில் ரேஸ் அணியை நடத்தி வரும் அமெரிக்காவின் முன்னணி மாடல் அழகி பாரிஸ் ஹில்டன் ரேஸைக் காண வந்திருந்ததால், ஸ்பெயினில் கூட்டம் அலைமோதியது. வாலன்டினோ ராஸி உட்பட அனைத்து ரேஸ் வீரர்களுமே பாரிஸ் ஹில்டனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆவலாகப் பறந்தார்கள்!

மோட்டோ ஜீபி - இங்கிலாந்து

மோட்டோ ஜீபி ரேஸின் 6-வது சுற்று, இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் ரேஸ் மைதானத்தில் ஜூன் 12-ம் தேதி நடைபெற்றது. கேஸி ஸ்டோனர் கலந்து கொண்ட 150-வது மோட்டோ ஜீபி ரேஸ் போட்டி இது என்பதால், கூடுதல் 'லைம் லைட்’டில் இருந்தார் ஸ்டோனர். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார் ஹோண்டாவின் கேஸி ஸ்டோனர். மார்க்கோ சைமன்செல்லி இரண்டாவது இடத்தில் இருந்தும், ஜார்ஜ் லாரன்சோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துக்கினார்கள். மொத்தம் 20 லேப்புகள் கொண்ட இந்த பிரிட்டீஷ் கிராண்ட் ப்ரீ பந்தயம், மழை மற்றும் பலத்த காற்றின் குறுக்கீடுகளுடன் நடைபெற்றது. ஆரம்பத்தில் கேஸி ஸ்டோனரும், ஜார்ஜ் லாரன்சோவும் முதலிடத்தைப் பிடிக்க கடுமையாகப் போராடிக் கொண்டிருக்க... ரேஸ் சூடுபிடித்தது. ஆனால், மிகவும் ஈரமாக இருந்த ரேஸ் டிராக்கில் மின்னல் வேகத்தில் பறந்துகொண்டிருந்த ஜார்ஜ் லாரன்சோ, பன்னிரண்டாவது லேப்பின் போது பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து ரேஸ் டிராக்கில் சறுக்கிக்கொண்டு கீழே விழுந்தார். இதனால், கேஸி ஸ்டோனருக்குப் போட்டியே இல்லாமல் போனது. கிட்டத்தட்ட 15 விநாடிகள் வித்தியாசத்தில் வெற்று பெற்றார் கேஸி ஸ்டோனர். ரேஸை இரண்டாவது இடத்தில் இருந்து துவக்கிய மார்க்கோ சைமென்செல்லியும் விபத்துக்குள்ளானதால், ஹோண்டா அணியின் மற்றொரு வீரர் டோவிஸியோஸோ இரண்டாவது இடமும், யமஹா டெக்-3 அணியின் காலின் எட்வர்ட்ஸ் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

இது ஸ்டோனர் சீசன்!

முன்னாள் உலக சாம்பியன் வாலன்டினோ ராஸி சீனில் இல்லை! வெற்றி பெற்ற கேஸி ஸ்டோனரைவிட 1 நிமிடம் 4 விநாடிகள் தாமதமாக வந்து ஆறாவது இடம் பிடித்தார் ராஸி.

இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், கேஸி ஸ்டோனர் 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ 98 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டொவிஸியோஸோ 83 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். வாலன்டினோ ராஸி 68 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

மோட்டோ ஜீபியின் அடுத்த சுற்று இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன் ஜூன் 25-ம் தேதி நெதர்லாந்தில் நடந்து முடிந்திருக்கும்!

இது ஸ்டோனர் சீசன்!

20-3-11

கத்தாரில் துவங்கிய முதல் ரேஸில் வெற்றி பெற்று, ஹோண்டாவின் பலத்தை நிரூபித்தார் கேஸி ஸ்டோனர். யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ இரண்டாவது இடத்தையும், ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

3-4-2011

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஜெரஸ் நகரில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று, யமஹாவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார் ஜார்ஜ் லாரன்சோ. இதில் டேனி பெட்ரோஸா இரண்டாவது இடத்தையும், நிக்கி ஹேடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்!

01-05-2011

போர்ச்சுகலில் நடைபெற்ற மூன்றாவது சுற்றில் வெற்றிபெற்று அசத்தினார் டேனி பெட்ரோஸா. காயம் ஆறாத நிலையில் வலியுடன் ரேஸ் ஓட்டி வெற்றி பெற்ற பெட்ரோஸாவை மற்ற அணி வீரர்களும் பாராட்டினர்!

15-05-2011

பிரான்ஸில் மீண்டும் ஃபார்முக்கு வந்தார் கேஸி ஸ்டோனர். நான்காவது சுற்றில் ஸ்டோனர் வெற்றி பெற டோவிஸியோஸோ இரண்டாவது இடமும், வாலண்டினோ ராஸி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.