Published:Updated:

சில விபத்து... பல பாடங்கள்!

சில விபத்து... பல பாடங்கள்!

சில விபத்து... பல பாடங்கள்!

சில விபத்து... பல பாடங்கள்!

Published:Updated:

>>கா.பாலமுருகன்,  >> க.நாகப்பன்  

 ##~##

மீப காலமாக தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளில், கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பலியாவது அன்றாடச் செய்தியாகி விட்டது. இதில் வேதனை என்னவென்றால், அந்த விபத்துகள்  அனைத்தும் சாலை விதி மீறல்களால் நடந்தவை என்பது அதிர்ச்சியான உண்மை. குறிப்பாக... மிதமிஞ்சிய வேகமும், தவறாக முந்திச் செல்ல முயற்சிப்பதும்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம்.

முன்பு, இரு வழிச் சாலையில் முன்னே செல்லும் வாகனத்தை முந்த முயற்சிக்கும்போது, எதிரே வரும் வாகனம் மீது மோத நேர்ந்துதான் விபத்துகள் நடந்தன. ஆனால், நான்கு வழிச் சாலைகள் வந்துவிட்ட நிலையில் தற்போது எதிரே வருவதற்கு வாகனம் இல்லை என்றாலும், முன்னே செல்லும் வாகனத்தில் மோதுவது, அதிகரித்து விட்டது. இதற்குக் காரணம், சாலை விதிமுறைப்படி ஓவர்டேக் செய்யாமல் இஷ்டம் போல ஓவர் டேக் செய்வது தான்.

சில விபத்து... பல பாடங்கள்!

சாலை விதிமுறையின்படி... நான்கு வழிச் சாலையில், கன ரக வாகனங்கள் இடது பக்க லேனில் மட்டுமே செல்ல வேண்டும். முன்னே செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே, வலதுபுற லேனுக்கு வந்து ஓவர் டேக் செய்ய வேண்டும். அதேபோல், மெதுவாகச் செல்லும் வாகனங்களும் இடது புற லேனில் மட்டுமே செல்ல வேண்டும். வலது புற லேன், வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கும், ஓவர் டேக் செய்வதற்கும் மட்டுமானதே! வேகமாக வலது புற லேனில் செல்லும் வாகனங்கள், தனக்கு முன்னே செல்லும் வாகனத்தை முந்த வேண்டுமென்றால், அதை முன் செல்லும் வாகனத்துக்கு உணர்த்தி, அந்த வாகனம் இடது புற லேனுக்கு மாறிய பிறகே செல்ல வேண்டும். இடது பக்கமாக ஒருபோதும் ஓவர்டேக் செய்யக் கூடாது என்பதுதான் சாலை விதி. ஆனால், அதை இங்கு யாரும் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.

மேலும், 'தடைகளே இல்லையே!’ என்ற நினைப்பில் மிக வேகமாகச் செல்வதும் ஆபத்துதான்.

சில விபத்து... பல பாடங்கள்!

சட்டென்று குறுக்கே வரும் வாகனங்கள், பாதசாரிகள், விலங்குகள் நம் நெடுஞ்சாலையில் சர்வ சாதாரணம். அதனால், எப்போதும் அந்த உணர்வுடனேயே செல்வதுதான் சிறந்தது. அதிகபட்ச வேகத்தில் செல்லும்போது திடீர் குறுக்கீடுகளால், பிரேக் அடித்தால் நிச்சயம் வாகனம் காட்டுப்பாட்டில் இருக்காது. அமைச்சர் மரியம் பிச்சை மரணமடைந்த கார் விபத்தில் மிதமிஞ்சிய வேகமும், முன்னால் சென்ற லாரி தவறாக முந்த முயன்றதும்தான் விபத்துக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

அதேபோல், வேலூர் அருகே 22 உயிர்களை எரித்து காவு வாங்கிய பஸ் விபத்தும், தவறான ஓவர்டேக் முயற்சியில் நடந்ததுதான் என்கிறார்கள். ஆனால், பஸ்சில் இருந்த எரிபொருளே அப்பாவிப் பயணிகளுக்கு எமனாக மாறியதுதான் மிகப் பெரிய கொடுமை. 'தடம் மாறி பஸ் சென்றது. பஸ்சில் உதவியாளர்கூட இல்லை’ என விபத்துக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ''டீசலில் ஃப்ளாஷ் பாயின்ட் அளவு குறைந்திருப்பதுதான் டீசல் தீப்பிடிக்கக் காரணம். இந்த ஃப்ளாஷ் பாயின்ட் அளவை உயர்த்த வேண்டும். அப்போதுதான் இது போன்ற விபத்துகளில் இருந்து காத்துக் கொள்ள முடியும்'' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் நுகர்வோர் உரிமைகளுக்காகப் போராடும் தேசிகன்.

இந்த விபத்து குறித்து அவர் மேலும் பேசியபோது, ''டீசலின் பிளாஷ் பாயின்ட் அளவு உலக நாடுகளில் வேறுவிதமாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டிலோ விசித்திரமாக இருக்கிறது. டீசலைச் சூடுபடுத்தும்போது வெப்பமாகி தீப்பற்றிக் கொள்ளும் தருணம்தான் பிளாஷ் பாயின்ட். உலக நாடுகளில் இந்த பிளாஷ் பாயின்ட் அளவு 60 டிகிரி சென்டிகிரேடில் இருந்து 66 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்க... நம் நாட்டில் 38 டிகிரி சென்டி கிரேடுதான் இருக்கிறது. அதனால்தான், வாகனம் ஏதாவது சின்ன விபத்தில் சிக்கினால் கூட டீசல் எரிந்து பெரிய விபத்தாக மாற்றிவிடுகிறது. உடனடியாக நம் நாட்டில் டீசலின் பிளாஷ் பாயின்ட் அளவை வெளிநாடுகளைப் போல 60 டிகிரி சென்டிகிரேடாக மாற்ற வேண்டும்'' என்கிறார் தேசிகன்.

சில விபத்து... பல பாடங்கள்!

வால்வோ இல்லை!

கடந்த மாதம் வேலூர் அருகே நடந்த ஆம்னி பஸ் விபத்து குறித்து, கேபிஎன் டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பி.நடராஜனிடம் பேசினோம். '' 'விபத்துக்குள்ளான வால்வோ பேருந்து, 100 கி.மீ வேகத்துக்கும் அதிகமாகச் சென்றது. அதில் பின் பக்கம் இன்ஜினும், அருகிலேயே டீசல் டேங்கும் இருக்கும். கண்ணாடிகள் அனைத்தும் லேமினேட் செய்யப்பட்டவை. அதனால்தான் அதைப் பயணிகளால் உடைத்துக் கொண்டு வெளியே வர முடியவில்லை’ என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. அது தவறு. அது வால்வோ பஸ் அல்ல... அசோக் லேலாண்ட் தயாரிப்பு. புதிய பஸ் என்பதால், வாரன்டி காலகட்டத்தில் இருக்கிறது. அதில், அதிகபட்சம் மணிக்கு 85 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியாது. அதிலுள்ள ECU இன்ஜின் புரோக்ராமை நம் இஷ்டத்துக்கு மாற்றவும் முடியாது. அதனால், அந்த விபத்து அதிக வேகத்தால் உண்டானது அல்ல. தவறாக ஓவர்டேக் செய்யும் வாகனங்களினால்தான் இந்த விபத்து நடந்துள்ளது. பின்னால் வந்த லாரி எங்கள் பஸ் மீது மோதியதில், பஸ் கட்டுப்பாடு இழந்து பள்ளத்தில் விழுந்ததில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. வட இந்திய நான்கு வழிச் சாலைகளில், இடது பக்கம் ஓவர்டேக் செய்யும் வாகனங்ளைப் பிடித்து ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கிறார்கள். இதைக் கண்காணிப்பதற்காகவே பல மாநிலங்களில் 4 கி.மீ-க்கு ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு, 'கன ரக வாகனங்கள் இடது புறமாகச் செல்லவும்’ என்ற போர்டு மட்டும்தான் வைத்திருக்கிறார்கள். அதையும் கண்காணிப்பதில்லை. இதனால், எதிரே வரும் வாகனம் மீது மோதும் விபத்துகள் குறைந்து, ஒரே திசையில் செல்லும் வாகனங்களின் விபத்து பெருகிவிட்டது'' என்று குறைப்பட்டுக் கொண்டார்.