Published:Updated:

ஹமாகுச்சி... செம தூள் மச்சி!

ஏசியன் ஜீபி

ஹமாகுச்சி... செம தூள் மச்சி!

ஏசியன் ஜீபி

Published:Updated:

>>சார்லஸ்  

 ##~##

மாகுச்சியின் அதிரடியால் ஆசிய பைக் ரேஸில் கலக்குகிறது மோட்டோ ரெவ் இந்தியா அணி. இந்தியா உட்பட 6 ஆசிய நாடுகளில் நடைபெறும் ஆசியாவின் நம்பர் ஒன் ரேஸ் போட்டியான 'ஆசிய பைக் ரேஸ் சாம்பியன்ஷிப்’ பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஒரே இந்திய அணியான மோட்டோ ரெவ் இந்தியாவுக்கு, வெற்றிகளால் வலிமையைக் கூட்டியிருக்கிறார் ஹமாகுச்சி!

ஆசிய ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் இரண்டாவது சுற்று இந்தோனேசியாவில் உள்ள சென்டூல் ரேஸ் மைதானத்தில் ஜூன் 12-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 16 லேப்புகள் 56.140 கிமீ தூரம் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கினார் கவாஸாகி அணியின் ஃபாட்லி. தாய்லாந்து யமஹா அணியின் டெச்சா இரண்டாவது இடத்தில் இருந்தும், அதே அணியின் மற்றொரு வீரர் போலாமாய் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ஹமாகுச்சி, ஏழாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க தகுதி பெற்றார். மலேசியாவில் நடைபெற்ற இரண்டு ரேஸ்களிலும் வெற்றி பெற்று அசத்திய கட்ஸுவாக்கி ஃபுஜிவாரா ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

ஹமாகுச்சி... செம தூள் மச்சி!

மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ரேஸ் வீரர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுமான தேசிய பைக் ரேஸ் சாம்பியன் கிருஷ்ணன் ரஜினியும், இளம் ரேஸ் வீரர் கௌதம் மயில்வாகனனும் இந்த ரேஸில் கலந்து கொள்ளவில்லை!

ரேஸ்-1

ஹமாகுச்சி... செம தூள் மச்சி!

ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கிய ஃபாட்லிக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தினார் மலேசியாவைச் சேர்ந்த ஹோண்டா அணி வீரரான அஸ்லான் ஷா. சில லேப்புகள் கடந்த நிலையில் ஃபாட்லியை முந்திச் சென்று முதலிடத்துக்கு முன்னேறினார் அஸ்லான் ஷா. மூன்றாவது இடத்தில் வந்து கொண்டிருந்த கட்ஸ¨வாக்கி ஃபுஜிவாரா முதலிடத்துக்கு முன்னேற நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார். அஸ்லானும், ஃபுஜிவாராவும் முதலிடத்துக்கு முந்திக்கொண்டிருக்க... மோட்டோ ரெவ் இந்தியாவின் ரேஸ் வீரரும், 6 முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவருமான ஹமாகுச்சி, ஃபுஜிவாராவை நெருங்க ஆரம்பித்தார். இதனால் ரேஸ் பரபரப்பானது. கடைசி மூன்று லேப்புகள் இருந்தபோது இரண்டாவது இடத்தில் இருந்த அஸ்லானை முந்திய ஹமாகுச்சி, ஃபுஜிவாராவைத் துரத்த ஆரம்பித்தார். அஸ்லானும் விடவில்லை. ரேஸ் இறுதிக் கட்டத்தை நெருங்கியதும் ஃபுஜிவாரா வெற்றி பெற, ஹமாகுச்சியை முந்திச் சென்று இரண்டாவது இடம் பிடித்தார் அஸ்லான். 07 விநாடிகள் வித்தியாசத்தில் ஹமாகுச்சி மூன்றாவது இடம் பிடித்தார்.

ஹமாகுச்சி... செம தூள் மச்சி!

ரேஸ் 2

இரண்டாவது ரேஸில் முதலிடத்தில் இருந்து துவக்கிய ஃபாட்லி எளிதில் விடுவதாக இல்லை. ஃபாட்லி, ஃபுஜிவாரா, அஸ்லான் என மும்முனைப் போட்டி நிலவியது. இதற்கிடையே முதல் ரேஸில் மூன்றாவது இடம் பிடித்த மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ஹமாகுச்சியின் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், துரதிருஷ்டவசமாக ரேஸில் இருந்து வெளியேறும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். நான்காவது லேப்போடு மோட்டோ ரெவ் இந்தியா அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. இதற்கிடையே 16 லேப்புகள் கொண்ட பந்தய தூரத்தை கட்ஸுவாக்கி ஃபுஜிவாரா 24 நிமிடங்கள் 37 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். அஸ்லான் ஷா இரண்டாவது இடமும், பாட்லி மூன்றாவது இடமும் பிடித்தனர்.

36 வயதான கட்ஸ¨வாக்கி, இதுவரை நடந்து முடிந்திருக்கும் நான்கு ரேஸ்களிலும் வெற்றி பெற்றதால், சாம்பியன்ஷிப் பட்டியலில் 100 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஹோண்டா அணியின் அஸ்லான் ஷா 72 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ஹமாகுச்சி 33 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

ஆசிய பைக் ரேஸ் பந்தயத்தின் அடுத்த சுற்று, சென்னையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்கில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற உள்ளது. 'மலேசியா, இந்தோனேசியா என இரண்டு நாடுகளிலும் வெற்றி பெற்றிருப்பதால், சென்னையிலும் வெற்றி பெறுவீர்களா’ என ஃபுஜிவாராவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். ''இதுவரை சென்னை ரேஸ் டிராக்கில் நான் ரேஸ் ஓட்டியதில்லை. ஆனால், பவர்ஃபுல்லான கவாஸாகி பைக் என்னிடம் இருப்பதால், நான் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்!'' என்றார்.

கவாஸாகி வெற்றி பெறுமா அல்லது சொந்த மண்ணில் ரேஸ் நடைபெறுவதால் மோட்டோ ரெவ் இந்தியா, கவாஸாகியின் ஓட்டத்தை நிறுத்துமா என்பதைக் காண ஆகஸ்ட் 7-ம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும்! 

ஹமாகுச்சி... செம தூள் மச்சி!

பட்ஜெட் இல்லை!

மலேசியாவில் நடைபெற்ற முதல் ரேஸில், சிறப்பாக ரேஸ் ஓட்டிய இந்திய வீரர்கள் கிருஷ்ணன் ரஜினி மற்றும் கௌதம் மயில்வாகனன் இருவரும், இந்தோனேசிய ரேஸில் பங்கேற்காதது குறித்து மோட்டோ ரெவ் இந்தியா அணியின் உரிமையாளர் பாலவிஜயிடம் பேசினோம். ''ஸ்பான்ஸர்கள் யாரும் கிடைக்காததால் பட்ஜெட் காரணமாக இந்தோனேசிய ரேஸில் ரஜினிக்கும், கௌதமுக்கும் வாய்ப்பு அளிக்க முடியவில்லை. ஆனால், அடுத்த ரேஸில் நிச்சயம் இருவரும் பங்கேற்பார்கள். சென்னையில் ரேஸ் நடைபெறுவதால், மோட்டோ ரெவ் இந்தியா அணி தனது முழு பலத்துடன் மோதும். நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்!'' என்றார் பாலவிஜய்.