Published:Updated:

டபுள்ஸ்!

டபுள்ஸ்!

டபுள்ஸ்!

டபுள்ஸ்!

Published:Updated:

>>சார்லஸ்,>>ம.பிருந்தா  >>தி.விஜய்

 ##~##

ந்தியாவின் ஃபார்முலா-1 ரேஸான ஜே.கே.டயர் தேசிய கார் ரேஸ் போட்டிகள், கடந்த மாதம் கோவையில் துவங்கியது. ஆரம்பமே அதிரடி என்பது போல அனைத்துப் பிரிவுகளின் இரண்டு ரேஸ்களிலும் ஒரே வீரர் வெற்று பெற்று அசத்தினர்.

தொடர்ந்து 14-வது ஆண்டாக நடைபெறும் ஜே.கே.டயர் தேசிய பைக் ரேஸ் போட்டிகளின் முதல் சுற்று, கடந்த ஜூன் 19-ம் தேதி கோவை கரி மோட்டார் ஸ்பீடு வே-யில் நடைபெற்றது. எல்ஜிபி ஸ்விஃப்ட், இந்தியன் டூரிங் கார்ஸ், இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ், ஃபோக்ஸ்வாகன் போலோ ஆர் கப் என மொத்தம் நான்கு பிரிவுகளில் ரேஸ் போட்டிகள் நடைபெற்றன. தேசிய ரேஸ் போட்டிகளில் கடந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த செவர்லே ரோல்-ஆன் ரேஸ் போட்டிகள் இந்த ஆண்டு இல்லை.

டபுள்ஸ்!
டபுள்ஸ்!

இந்தியன் டூரிங் கார்ஸ் ரேஸ் போட்டியில் சலூன் ரேஸில் முடிசூடா மன்னனான சென்னையைச் சேர்ந்த ராதா செல்வராஜ் வெற்றி பெற்றார். முதல் ரேஸில் ஈஸியாக வெற்றி பெற்ற ராதா செல்வராஜுக்கு இரண்டாவது ரேஸில் கடுமையான போட்டியை ஏற்படுத்தினார் ராஜ்விர்தன். 6 லேப்புகள் வரை முதலிடத்தில் இருந்த ராஜ்விர்தனை 7-வது லேப்பில் முந்திச் சென்று வெற்றி பெற்றார் ராதா செல்வராஜ்.

ரேஸர் மட்டும் அல்லாமல், ரேஸ் ட்யூனருமான ராதா செல்வராஜின் வெற்றிக்குக் காரணமே அவரது மெக்கானிக் மூளைதான். ''ஐந்தாவது லேப்பின்போதே ராஜ்விர்தனின் கார் அன்டர் ஸ்டீயர் ஆகிறது என்பதைக் கண்டுபிடித்து விட்டேன். அப்போதே என்னுடைய வெற்றி உறுதியாகிவிட்டது'' என்றார்.

ராஜ்விர்தன், ரேஸ் வீரரும் - எல்ஜிபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் டூரிங் கார் ரேஸ் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றார் பாலவிஜய். நடப்பு சாம்பியனான மோட்டோ ரெவ் அணியின் பாலவிஜய் மற்ற ரேஸர்களை விடவும் மிகவும் வேகமாக இருந்தார். பின்னால் வந்த தில்ஜித் ஷாஜியால் இரண்டு ரேஸ்களிலுமே பாலவிஜய்யை முந்த முடியவில்லை. ஜூனியர் டூரிங் கார் ரேஸில் ஒரு அபூர்வமாக முதல் ரேஸில் முதல் 6 இடங்களைப் பிடித்த வீரர்களே இரண்டாவது ரேஸிலும் முதல் 6 இடங்களைப் பிடித்தனர்.

டபுள்ஸ்!
டபுள்ஸ்!

எல்ஜிபி ஸ்விஃப்ட் ரேஸின் ஹீரோ தீபக். இரண்டாவது ரேஸில் 5-வது இடத்தில் ரேஸைத் துவக்கிய தீபக், முதல் லேப்பிலேயே மற்ற வீரர்கள் அனைவரையும் முந்திச் சென்றார். ஆனால், ரேஸ் முடிய ஒரு லேப்பே மீதம் இருந்த நிலையில் தவறான முடிவால், சரியான வளைவின் ஓரத்தில் செல்லாமல் வேறு பக்கம் போக... முதல் இடத்தை இழந்தார் தீபக். ஆனால், ரேஸின் இறுதிக் கட்டம் வரை விடாமல் போராடிய தீபக் இறுதியில் வெற்றி பெற்று அசத்தினார்.

ஃபோக்ஸ்வாகன் போலோ கப்பின் இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்றார் விஷ்ணு பிரசாத். இரண்டு ரேஸ்களிலுமே மற்ற ரேஸ் வீரர்களைவிட விஷ்ணு பிரசாத்தின் கார் மிகவும் வேகமாக இருந்ததால், போட்டியின் முடிவு ஆரம்பத்திலேயே உறுதியாகிவிட்டது. இரண்டு ரேஸ்களிலுமே போட்டியே இல்லாமல் வெற்றி பெற்றார் விஷ்ணு பிரசாத். ரிவர்ஸ் கியர் முறைப்படி நடைபெற்ற இரண்டாவது ரேஸில் சென்னையைச் சேர்ந்த பெண் ரேஸர் அலிஷா அப்துல்லா மூன்றாவது இடம் பிடித்தார்.