Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

என்ட்ரி லெவல் ஸ்கார்ப்பியோ!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மஹிந்திராவிலிருந்து 'என்ட்ரி லெவல்’ ஸ்கார்ப்பியோ என்ற பெயரில் புதிய ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு வந்திருக்கிறது. 75 bhp சக்தியைக் கொடுக்கும் 2.5 லிட்டர் திறன் படைந்த இந்த 'என்ட்ரி லெவல்’ ஸ்கார்ப்பியோ

மோட்டார் நியூஸ்

7.21 லட்சத்துக்கு (எக்ஸ் ஷோரூம் மும்பை) விற்பனை செய்யப்படுகிறது. இது 0-100 கி.மீ வேகத்தை 11.2 விநாடிகளில் கடக்கிறது. தேவைப்படாத நேரத்தில் இன்ஜின் இயங்கிக்கொண்டிருந்தாலும் 'ஸ்டேண்ட் பை மோட்’க்கு மாறிவிடும் மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம் இதன் ஹை லைட்!

மோட்டார் நியூஸ்

வந்து விட்டது ஃபெராரி!

மோட்டார் நியூஸ்

கடைசிக் கடைசியாக எஞ்சியிருந்த ஒரே நிறுவனமான ஃபெராரியும், நம் நாட்டின் தலைநகரான டெல்லிக்கு வந்துவிட்டது. இனிமேல் 'கஸ்டம்ஸ்’ கஷ்டமில்லாமல் நம் நாட்டிலேயே ஃபெராரி காரை வாங்கிக் கொள்ளலாம். கலிஃபோர்னியா (2.2 கோடி), இட்டாலியா (2.57 கோடி), 599 GTB (3.57 கோடி) மற்றும் FF (3.41 கோடி)  என்று தனது முக்கிய மாடல்கள் அனைத்தையும் ஃபெராரி விற்பனைக்காக வைத்திருக்கிறது. இந்த ஆண்டு 24 கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கில் ஃபெராரி ஏற்கனவே 50 சதவிகிதத்தை எட்டிவிட்டது. ஆம், ஏற்கெனவே 14 கார்கள் புக் செய்யப்பட்டு விட்டன. ஆர்டர் கொடுத்து செய்யப்படும் கார்கள் என்பதால், டெலிவரி கிடைக்க 3-ல் இருந்து 12 மாதங்கள் வரை ஆகும். அடுத்த ஆண்டு மும்பையில் தனது இரண்டாவது ஷோரூமை ஆரம்பிக்க இருக்கிறது ஃபெராரி!

மோட்டார் நியூஸ்

விற்பனையில் தூள் பறக்கும் டாப் 10 கார்களின் பட்டியலைப் பார்த்தால், அதில் மாருதியின் ஆல்ட்டோ, ஸ்ஃவிப்ட், வேகன் ஆர், ஆம்னி, ஸ்விஃப்ட் டிசையர் ஆகிய ஐந்து கார்கள் இடம் பிடித்திருக்கும். ஏ ஸ்டாரை எப்படியும் இந்தப் பட்டியலில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மாருதி முடிவு செய்திருக்கிறது.

ஏ ஸ்டார் அறிமுகமானபோது, இந்தியாவுக்கான காராக மட்டும் அதை அறிமுகப்படுத்தாமல், உலக சந்தைக்கான காராகவே மாருதி அதை அறிமுகப்படுத்தியது. 'அடுத்த தலைமுறைக்கான கார்’ என்றுதான் மாருதி ஏ ஸ்டாரை இளைஞர்கள் முன் நிறுத்தியது. இதற்காகவே சினிமா தியேட்டர், ராக் ஷோ அரங்கம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் எல்லாம் ஏ ஸ்டார் ஸ்டைலாக நின்றது.

கூடிய விரைவில் சரித்திரம் திரும்ப இருக்கிறது. ராக் ஷோ, டிவி விளம்பரங்கள், வினைல் பேனர்கள்... என்று இன்னொரு ரவுண்டு விளம்பர வெளிச்சத்துக்கு வர ஏ ஸ்டார் இப்போது தயாராகிவிட்டது.

'கே சீரியஸ் இன்ஜின், ஏரோ டைனமிக் டிசைன், இளமை கொப்புளிக்கும் ஸ்போர்ட்டிவான தோற்றம், ஏபிஎஸ், ஆட்டோமேட்டிங் டிரான்ஸ்மிஷன் என்று சின்ன காராக இருந்தாலும், சகல வசதிகளும் நிறைந்த காராக இருக்கும் ஏ ஸ்டாரை, இளைஞர்களின் அடையாளமாக மாற்றுவதுதான் எங்களுடைய நோக்கம்’ என்று சொல்லும் மாருதியின் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா, அதற்கான காரணத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். ''இன்று மாருதியிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கார்களில் ஏ ஸ்டாருக்குத்தான் முதலிடம். காரணம், அதன் இளமைத் துடிப்பு மிக்க வடிவமைப்பு. உலகத்திலேயே இளமையான தேசம் என்றால், அது நம் நாடுதான். இங்கே நூற்றுக்கு 70 பேர் 35 வயதுக்குக் குறைவானவர்கள். இவர்களில் கணிசமான அளவு இளைஞர்கள். கை நிறைய சம்பாதிக்கிறவர்கள். இவர்களைக் கவர்வதுதான் எங்கள் நோக்கம். இவர்களைக் கவர்ந்திழுக்கும் டிசைன், அருமையான பிக்-அப், சிட்டிக்குள் வளைத்து நெளித்து ஓட்ட வசதியான உருவம்... எல்லாவற்றுக்கும் மேல் நல்ல மைலேஜ். இவை அனைத்தும் இருப்பதால், ஏ ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஆவது நிச்சயம்'' என்றார்!

மோட்டார் நியூஸ்

புதிய கரோலா ஆல்டிஸ்

மோட்டார் நியூஸ்

கரோலா ஆல்டிஸின் புதிய வெர்ஷன் இப்போது ரிலீஸாகி யிருக்கிறது. புதிய தோற்றம் கொண்ட ஹெட் லைட்ஸ், பம்ப்பர், க்ரில் டெயில் லைட்ஸ் என உருமாறி வந்திருக்கும் ஆல்டிஸின் இன்ஜின் சக்தியும் 7 bhp அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதாவது, இப்போது இதன் இன்ஜின் சக்தி 138 bhp. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இருந்த இடத்தில், இப்போது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வந்திருக்கிறது. விலை உயர்ந்த டாப் எண்ட் வேரியன்டில் 7 கியர்களைக் கொண்ட CVT கியர் பாக்ஸை ஆப்ஷனலாகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், டீசல் மாடலில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் இருக்கும்!

மோட்டார் நியூஸ்

சென்னை ஆட்டோ வேர்ல்ட் எக்ஸ்போ!

மோட்டார் நியூஸ்

சென்னை ஆட்டோ வேர்ல்டு கண்காட்சி, நந்தம்பாக்கம் டிரேட் சென்ட்டரில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் அனைத்து ரக மோட்டார் சைக்கிள்கள், கார்கள் தவிர பேட்டரியில் இயங்கக்கூடிய கார்களும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியின் ஹை லைட்டாக விளங்கியது ஹோண்டாவின் சிபிஆர் 250 ஆர் பைக். இது விலை குறைந்த 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக். இதையடுத்து எல்லோரையும் கவர்ந்தது மோட்டார் விகடன் அறிமுகம் செய்த மரத்தால் ஆன கார். போரூரை சேர்ந்த லட்சுமணன் தயாரித்த அந்த காரில் இதயமாக இருந்தது மாருதி 800 இன்ஜின். கண்காட்சி அரங்கின் வெளியே இளைஞர்கள் பைக் ஸ்டன்ட்ஸ் செய்து கண்காட்சிக்குக் கூட்டம் சேர்த்தனர்!

- அ.இராமநாதன்

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்