Published:Updated:

டெர்ரர் ரவி!

டெர்ரர் ரவி!

டெர்ரர் ரவி!

டெர்ரர் ரவி!

Published:Updated:

>>வேல்ஸ்  

 ##~##

சாலைகளில் 'விர்ர்ர்ரூம்’ என புழுதி பறக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களைப் பார்த்தால், எல்லோருமே வெறுத்து ஒதுக்குவார்கள். இதுபோல பைக் ஓட்டுபவர்கள் சாலையில் விபத்துக்குள்ளாகி விழுந்தால் கூட கை கொடுத்துத் தூக்கிவிட யாரும் வரமாட்டார்கள். 'சங்கிலித் திருடர்கள், ரவுடிகள்’ என்றுதான் ஊரும் உலகும் அவர்களை வெறுத்து ஒதுக்கும். மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்பவர்களின் மீது படிந்திருக்கும் கறைகளைத் துடைத்தெடுக்கவும், அவர்களை ஹீரோக்களாக மாற்றவும் பஜாஜ் பல்ஸரோடு இணைந்து 'பல்ஸர் ஸ்டன்ட் மேனியா’ என்ற பெயரில் குலை நடுங்கும் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது எம்டிவி. இப்போது இந்த பல்ஸர் ஸ்டன்ட் மேனியாவின் சீசன் 3 அதகளமாகத் துவங்குகிறது.

டெர்ரர் ரவி!
டெர்ரர் ரவி!

முன் சக்கரத்தைத் தூக்கிக்கொண்டு வேகமாக பைக் ஓட்டுவது, பின் சக்கரத்தை வான் நோக்கி தூக்கிக் கொண்டு முன்னே செல்வது, வேகமாக வந்து 'க்ரீரீச்’ என்று டயர் பொசுங்க பிரேக் போட்டு, அதே வேகத்தில் சங்குச் சக்கரம் மாதிரி தரையில் சுத்துவது என்பது மாதிரியான ஸ்டன்ட்டுகள் எல்லாம் இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்பவர்களுக்கு ஜுஜுபி மாதிரி! வேகமாக வந்து பைக்கை தரையோடு தரையாகப் படுக்க வைத்தே ஓட்டிக் கொண்டு ஹெலிகாப்டருக்குக் கீழே புகுந்து வருவது; நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் டிரக் மீது பல்ஸரை ஏற்றி, வேறு பக்கமாக பைக்கோடு வெளியே குதிப்பது என கதிகலங்க வைக்கிறார்கள் போட்டியாளர்கள். ரன் வேயில் டேக்-ஆப் ஆகும் விமானத்தையே தாவிக் குதித்து தாண்டும் ஒரு காட்சிகூட இந்த ரியாலிட்டி ஷோவில் இடம் பெற்றிருக்கிறது. இந்த ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளரான ரான் விஜய்யும் ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் தான்.

இந்த ரியாலிட்டி ஷோ போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு ஒரு பல்ஸர் பைக்கை பரிசாகத் தரப்போகிறார்கள். கூடுதல் பரிசாக வெற்றியாளர்களுக்கு பிரான்ஸில் இருக்கும் ஸ்டன்ட் வித்தகர், குரு, சூப்பர் மேன் ஜோரியனிடம் பயிற்சி பெறும் வாய்ப்பையும் பெறுவார்!