Published:Updated:

பஞ்சர் போலீஸ்!

பஞ்சர் போலீஸ்!

பஞ்சர் போலீஸ்!

பஞ்சர் போலீஸ்!

Published:Updated:

>>எஸ்.ஷக்தி

 ##~##

சிங்கிள் எஸ்.எம்.எஸ் கொடுத்தால், வீடு தேடி வந்து பஞ்சரை சரி செய்து கொடுக்குமளவுக்கு யூஸர் ஃப்ரெண்ட்லி காலமிது. ஆனால், கோவையின் புறநகர் பகுதியில் இரவு வேளையில் வீடு தேடி வந்து கார்களின் டயர்களை பஞ்சர் செய்து கொண்டிருக்கிறது ஒரு டீம். காலையில் ட்ரெயின், ஃப்ளைட்டைப் பிடிக்கப் போகிறவர்கள் இந்த பஞ்சர் பிரச்னையால் நொந்து நூலாகிறார்கள், நள்ளிரவில்

பஞ்சர் போலீஸ்!

அவசர சிகிச்சைக்காக ஆளை அள்ளிப் போட்டுவிட்டு காரை எடுப்பவர்களும் இந்தப் பிரச்னையால் கந்தலாகிறார்கள். 'சரி இந்த பஞ்சர் பேர்வழிகளைப் பற்றி போலீஸிடம் புகார் தெரிவிக்கலாமே!?’ என்கிறீர்களா... ஹிஹி! இந்த கைங்கர்யத்தைப் பண்ணுவதே போலீஸ்தான்! 

கோவை அருகிலுள்ள துடியலூர் காவல் நிலையக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் லட்சுமி நகர், அன்பு நகர், ஆட்டோ நகர் மற்றும் டி.வி.எஸ் நகர்களில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 80 கார்களின் டயர்கள் பஞ்சராக்கப்பட்டு இருக்கின்றன! கருக்கலில் காரை பார்க் செய்துவிட்டு, வெளுத்ததும் நான்கு டயர்களும் சப்பிய நிலையில் கிடக்கும் கார்களைப் பார்த்து உரிமையாளர்களுக்கு ரத்தக் கண்ணீர் வந்திருக்கிறது. 'சைக்கோ கொலையாளி போல இது ஏதேனும் சைக்கோ பஞ்சராளியின் வேலையோ?’ என்று அலறியவர்கள், தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையை நடத்தியிருக்கிறார்கள். கூடவே, இரவு நேரங்களில் மொட்டை மாடிகளில் நின்று கொண்டு வீதியில் நிறுத்தப்படும் கார்களை ஷிஃப்டு போட்டுக் கவனிக்கவும் செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, இரவில் ரோந்து சுற்றி வரும் போலீஸார், வீட்டுக்கு வெளியே நிற்கும் கார்களாகப் பார்த்து பஞ்சர் செய்வதைக் கவனித்து டெர்ரராகி இருக்கிறார்கள்.

இந்த பஞ்சர் பஞ்சாயத்து துடியலூர் ஸ்டேஷனுக்குச் சென்றபோது, ''இந்த ஸ்டேஷனோட லிமிட் ரொம்ப பெரிசு. ஆனா, அந்த அளவுக்கு போலீஸ் ஸ்ட்ரென்த் இல்லை. இது திருட்டுப் பசங்களுக்கு தோதா போயிடுது. இடையர்பாளையம் ஏரியாவுல மட்டும் போன மாசம் குவாலிஸ், இண்டிகான்னு ஐந்து கார்கள் திருடு போயிருக்கு. இது அத்தனையும் போர்டிகோவில் இல்லாம வீட்டுக்கு முன்னாடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள். முப்பது, நாற்பது லட்சம் போட்டு வீட்டைக் கட்டுறவங்க, போர்டிகோ கட்டுறதுக்கு முன் வர்றதில்லை. பல தடவை சொல்லியும் மக்கள் திருந்த மாட்டேங்கிறாங்க. அதே நேரத்துல கார் திருடு போயிட்டா மட்டும் எங்களை சாடுறாங்க. 'வீட்டுக்கு வெளியில காரை நிறுத்தாதீங்க’ன்னு பல தடவை எச்சரிச்சும் பல பேர் கண்டுக்கிறதில்லை. அதனாலதான் இந்த அதிரடி ட்ரீட்மென்ட். காரை நாங்க பஞ்சராக்கிட்டா எந்தத் திருட்டுப் பசங்களும் காரை அபேஸ் பண்ண முடியாதில்லையா!'' என்று அசராமல் 'பஞ்சிங்’ விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.

ஆனாலும் போலீஸாரின் நடவடிக்கைகளை, பாதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!