Published:Updated:

வி.ஐ.பி. பேட்டி: சுதிர் ராவ்

மஹிந்திராவுக்கு நேர் எதிரில் ரெனோ!

வி.ஐ.பி. பேட்டி: சுதிர் ராவ்

மஹிந்திராவுக்கு நேர் எதிரில் ரெனோ!

Published:Updated:

>>சார்லஸ்

 ##~##

ந்தியாவில் ரெனோவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டது. மஹிந்திராவுடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் கணக்கைத் துவக்கிய ரெனோவுக்கு, இரண்டு ஆண்டுகளில் கூட்டணி கசந்துவிட்டது. அதனால், தன்னுடைய குளோபல் பார்ட்னரான நிஸானுடன் இணைந்து சென்னையில் தொழிற்சாலையைத் துவக்கிவிட்டது ரெனோ. ஒரகடத்தில் இருந்து ரெனோவின் முதல் காராக ஃப்ளூயன்ஸ் வெளிவந்திருக்கும் நிலையில், தமிழகத்தின் முதல் ஷோ-ரூமாக சென்னை அண்ணா சாலையில் டீலர்ஷிப்பைத் துவக்கியிருக்கிறது ரெனோ. தற்செயலா அல்லது திட்டமிட்டுத் துவங்கப்பட்டதா எனத் தெரியவில்லை. அண்ணா சாலையில் மஹிந்திரா ஷோ ரூமுக்கு நேர் எதிரில் ரெனோ தனது டீலர் ஷிப்பைத் துவக்கியிருக்கிறது. இதன் துவக்க விழாவுக்காக சென்னை வந்த ரெனோ இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சுதிர் ராவ்-விடம் பேசினோம்! 

வி.ஐ.பி. பேட்டி:  சுதிர் ராவ்

இந்தியாவில் ரெனோவின் திட்டம் என்ன?

2012 இறுதிக்குள் ஐந்து கார்கள், இந்தியா முழுக்க 75 நகரங்களில் 100 டீலர்ஷிப்புகள் என்ற இலக்கை நிர்ணயித்திருக்கிறோம். முதல் கட்டமாக ஜூன் மாதத்தோடு 14 நகரங்களில் 14 ஷோ ரூம்களைத் திறந்திருக்கிறோம். டிசம்பர் மாதத்துக்குள் அதாவது, எங்களது இரண்டாவது கார் விற்பனைக்கு வரும் நேரத்தில், 30 நகரங்களில் 40 ஷோ ரூம்கள் திறக்கப்படும். விற்பனையில் ஹை-குவாலிட்டி சர்வீஸுக்கு நாங்கள் கியாரான்டி. இந்திய கார் மார்க்கெட்டில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரெனோ நிலையான இடத்தைப் பிடித்துவிடும்.

மும்பையில் டிசைன் சென்டர், சென்னையில் கார் தயாரிப்பு தொழிற்சாலை, அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி மையம், புனேவில் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் ஆகியவை அமைத்திருப்பதன் மூலம், நாங்கள் குறுகிய கால வியாபாரத்துக்காக இந்தியாவுக்குள் வரவில்லை என்பது புரிந்திருக்கும். இந்திய கார் மார்க்கெட் வளர வளர, நாங்களும் வளர்வோம்.

லோகனால் ரெனோவின் பிராண்ட் இமேஜ் கொஞ்சம் பாதிப்புக்குள்ளானது உண்மைதானே?

லோகன் சிறப்பான கார். ஸ்டைலாக இல்லை என்ற குறைதான் சொல்லப்பட்டதே தவிர பர்ஃபாமென்ஸிலும், மைலேஜிலும் குறை சொல்ல முடியாது. லோகன் காரைத் தயாரித்த நிறுவனம்தான் ஃப்ளூயன்ஸ் காரையும் தயாரிக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஸ்டைலான ஃப்ளூயன்ஸ் காரைக் களம் இறக்கி இருக்கிறோம்.

உலகம் முழுக்க ரெனோ தயாரிக்கும் 12 கார்களும் பாதுகாப்புக்காக NCAP ரேட்டிங்கில் 5 ஸ்டார்கள் பெற்றவை. கார் தயாரிப்பில் ரெனோ நிறுவனம் 113 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்டது. திடீரென கார் தயாரிப்பில் நாங்கள் இறங்கி விடவில்லை. தற்போது, 118 நாடுகளில் ரெனோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், ரெனோவின் பிராண்ட் இமேஜுக்கு எந்தச் சரிவும் இருக்காது.

மஹிந்திராவுடன் கூட்டணி முறிந்துவிட்டது. மஹிந்திராவுடான கூட்டணி காலத்தில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் எப்படியிருக்கிறது என்பதைக் கற்று கொண்டோம். உதிரி பாகத் தயாரிப்பாளர்கள் யார்? எங்கே எதை வாங்க வேண்டும், இன்ஜினீயரிங், கார் தயாரிப்பு, டீலர்ஷிப் மேனேஜ்மென்ட் என பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம்.

உங்களுடைய கூட்டணி நிறுவனமான நிஸான், முதலில் மைக்ரா என்ற சின்ன காரை அறிமுகப்படுத்தியது. நீங்கள் பெரிய காரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இருவரின் செயல் திட்டமும் என்ன?

நிஸானின் மார்க்கெட் ஸ்ட்ராடெஜிக்கும், ரெனோவின் ஸ்ட்ராடெஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் ஐந்து கார்களில் ரெனோ ஃப்ளூயன்ஸ் ஸ்டைலான கார் என்பதால், முதலில் ஃப்ளூயன்ஸை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்த ஆண்டு இறுதியில் சின்ன காரை விற்பனைக்குக் கொண்டு வருவோம்'' என்றார்!