Published:Updated:

திருப்பூரில் தயாராகும் ஏடிவி

திருப்பூரில் தயாராகும் ஏடிவி

திருப்பூரில் தயாராகும் ஏடிவி

திருப்பூரில் தயாராகும் ஏடிவி

Published:Updated:

>>எஸ்.ஷக்தி    >> இரா.கலைச்செல்வன்  

 ##~##

ஆஃப் ரோடிங் வாகனங்களிலேயே செம த்ரில்லிங் வாகனம் 'ஆல் டெரைன் வெஹிக்கிள்’ எனப்படும் ஏடிவி! கடற்கரையில் ஆரம்பித்து பாலைவனம், காடு மேடு, வயல் வரப்பு என்று சவாலான பாதைகளையே தனது ஆடுகளமாகக் கொண்டது இந்த வாகனம். ஏடிவிக்கு கோ-கார்ட் போல பரந்துபட்ட ரசிகப் பட்டாளம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் ஏடிவி அசௌம்ப்ளிங் துறையில் ஒரு டீம் பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா!.

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் அருகே 'ஈகோ இம்பெக்ஸ்’ (Eco Impex) என்ற ஏடிவி அசௌம்ப்ளிங் நிறுவனம்ஒன்றை நடத்தி வருகிறார்கள் செந்தில்குமார் மற்றும் நந்தகுமார் எனும் இருவர். நாடெங்கிலுமிருந்து கணிசமான வாடிக்கையாளர்கள் இவர்களுக்கென்று உருவாகி இருக்கிறார்கள். 'ஏ.டி.வி.யில என்ன பாஸ் விசேஷம்?’ என்று செந்தில்குமாரைக் கேட்டபோது, ''என்னோட கஸின் அர்ஜென்டினா, சிலி தீவுகள்ல இந்த ஃபீல்டுல இருக்கார். அவர்கிட்டே இருந்துதான் இதைக் கத்துக்கிட்டேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி இங்கே யூனிட்டை ஆரம்பித்தோம். ஏடிவிக்கான பார்ட்ஸ்கள் அத்தனையையும் சீனாவுல இருந்து இறக்குமதி பண்றோம். பேட்டரி மட்டும் நம் நாட்டுத் தயாரிப்பு. 150 சிசி இன்ஜின், டிஸ்க் பிரேக்ஸ், ஹெவி ட்யூட்டி டயர்கள்னு செம மிரட்டலா இதை உருவாக்குறோம். ஏடிவி இன்ஜினோட புல்லிங் பவர் ரொம்ப அதிகம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இருபத்தஞ்சுல இருந்து முப்பது கிலோ மீட்டர் வரை கிடைக்கும்.

திருப்பூரில் தயாராகும் ஏடிவி

இறக்குமதி உட்பட அத்தனை செலவுகளையும் சேர்த்து ஒரு ஏடிவியோட விலை ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும். பெங்களூரு, சென்னை, மும்பை ஆகிய ஊர்கள்ல இருந்து எங்ககிட்டே ஹோல் சேலா வாங்கிக்குறாங்க. தோப்பு, பண்ணைகளைச் சுத்திப் பார்த்து மெயின்டெய்ன் பண்ணுறவங்களும் இதை வாங்க ஆரம்பிச்சு இருக்காங்க.

வெறும் விற்பனை நோக்கத்தோட இல்லாம ஏடிவியை பக்காவா ஜனரஞ்சகப் படுத்தணும்ங்கிறதுதான் எங்க ஆசை. இதுக்குன்னு ஸ்பெஷலா டிராக்கெல்லாம் போட்டு பண்ணினா நிச்சயம் நிறைய பேர் ரசிகர்களாவாங்க. சென்னையில ஈசிஆர் ஏரியாவுலேயும், ஏற்காட்டுலேயும் டிராக் இருக்குது. கொடைக்கானல்ல இப்போ ரெடி பண்ணிட்டு இருக்கிறாங்க. ஏடிவியோட மவுசு ஸ்லோவா பரவினாலும், கூடிய சீக்கிரத்துல ஸ்டெடியான ஒரு மார்க்கெட்டைப் பிடிக்கும்னு நம்புறோம்'' என்கிறார்.