சரிகமே பதநிஸே...

ஐ லவ் மியூஸிக்

இனிதான கார் பயணத்துக்கு... முதல் தேவை, இனிமையான இசை. காரின் நான்கு ஜன்னல்களையும் நன்றாக மூடிவிட்டு, கார் முழுக்க இசையை அதிரவிடும்போது, ஒருவிதமான பரவச அனுபவம் நம் உடல் முழுவதும் ஊடுருவுவதை உணர முடியும்.

‘பவர் ஸ்டீயரிங்கூட தேவையில்லை. ஆனால், பவர்ஃபுல்லான ஸ்பீக்கர்கள் வேண்டும்’ என்று கேட்கிற இசைப் பிரியர்கள் நம் நாட்டில் அதிகம்.

சென்னை, மகாலிங்கபுரத்தில் இருக்கும் ‘டெக்னோகிராட்ஸ்’ என்ற நிறுவனம் இந்த விஷயத்துக்காகவே, பிரபலம்.

இங்கே சாதாரண விலையில் ஆரம்பித்து அதிக விலையுள்ள லேட்டஸ்ட் மியூஸிக் சிஸ்டம் வரை எல்லாம் கிடைக்கிறது. நாம் சென்ற நேரம் - ஒரு கறுப்பு ஹோண்டா சிஆர்வி-யில் மியூஸிக் சிஸ்டத்தின் உச்சகட்ட உபகரணங்கள் அனைத்தையும் பொருத்திக்கொண்டு இருந்தார்கள். ‘‘மியூஸிக் சிஸ்டத்தில் இத்தனை அம்சங்களா? அதுவும் ஒரே காரிலா?’’ என வியந்தபோது, ‘‘இது நடிகர் சிம்புவின் கார். அவரது ரசனைக்கேற்ப, இதில் வீடியோ சிஸ்டம், கம்ப்யூட்டர், ஊஃபர், ப்ளூடூத், ஆல்ப்பைன் மியூஸிக் சிஸ்டம் என ஒரு மினி ஆடியோ ஸ்டூடியோவையே பொருத்திக்கொண்டு இருக்கிறோம்’’ என்றார்கள்.

‘‘ஒரு நல்ல மியூஸிக் சிஸ்டம் வாங்க முதலில் என்ன செய்ய வேண்டும்? அதை எப்படித் தேர்ந்தெடுப்பது?’’ என்று கேட்டதும், பொறுமையாக விளக்க ஆரம்பித்தார்கள் டெக்னோகிராட்ஸ் நிர்வாகிகளான விஜய் ஆனந்தும் பாலாஜியும்.

ஹெட்யூனிட்

‘‘சிறந்த மியூஸிக் சிஸ்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முதலில் ஒரு நல்ல ஹெட்யூனிட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹெட்யூனிட் என்பது டிஸ்ப்ளே, சிடியை உள்ளே செலுத்தும் பகுதியாகும். இதில்தான் சிடி, எஃப்.எம் ரேடியோ, கன்ட்ரோல் வசதிகள் இருக்கும். குறைந்த விலைக்கு ஹெட்யூனிட் வேண்டும் என்றால், அதில் சிடி-க்குப் பதிலாக கேஸட் பிளேயர் மட்டும்தான் இருக்கும். ஒரு ஹெட்யூனிட்டின் குறைந்தபட்ச விலை 2,000 ரூபாய். சிடி சேஞ்சர், எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகள் கொண்ட மாடலின் விலை 4,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய்க்கும் மேல் கிடைக்கிறது.

இந்த ஹெட்யூனிட்டைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. தரமான தயாரிப்பாகப் பார்த்து வாங்குவதே நல்லது. அடுத்ததாகக் கவனிக்கவேண்டிய விஷயம், காரை பூட்டிவிட்டுச் செல்லும்போது ஹெட்யூனிட்டை மட்டும் தனியாக எடுக்க வசதி இருக்கிறதா என்று பார்க்க

வேண்டும். தரமான நிறுவனத்தின் தயாரிப்பு ஹெட்யூனிட்டுகள் என்றால், இந்த வசதி நிச்சயம் இருக்கும். இது இருந்தால்தான் ஹெட்யூனிட் திருடு போகாமல் காப்பாற்ற முடியும். அடுத்து, இந்த ஹெட்யூனிட் நம் காரின் டேஷ்போர்டுக்குப் பொருந்துகிறதா என்றும் பார்க்க வேண்டும்.

மேலும், உங்கள் ஹெட்யூனிட்டில் என்னென்ன வசதிகள் எல்லாம் வேண்டும் என்று தேர்ந்தெடுங்கள். வசதிகள் கூடக்கூட விலையும் கூடும். இதில் கன்ட்ரோல் பட்டன்கள் குறைவாக இருப்பது நல்லது. அதிகமாக இருந்தால், வாகனம் ஓட்டும்போது எதை அழுத்துவது என்ற குழப்பத்தில் கவனம் சிதறும்.

வீடியோ சிஸ்டம்

கடந்த ஒரு வருடமாக கார் வீடியோ சிஸ்டம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. டிராவல்ஸ்

கார்கள்கூட இப்போது ஃபிளாட் எல்சிடி ஸ்கிரீனுடன் ஜொலிக்கின்றன. வீடியோ சிஸ்டத்தை வாங்கும் முன் அதில் டிவிடி பிளேயர், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், ஜிபிஎஸ் என நமக்கு என்னென்ன வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்துவிட வேண்டும்.

அதன் பிறகு, அதை காரில் எந்த இடத்தில் பொருத்த வேண்டும் என முடிவு செய்யுங்கள். பொதுவாக முன் பகுதியின் மேற்கூரையிலும், முன்பக்க இருக்கைகளின் தலைப் பகுதியின் பின் பக்கத்திலும் பொருத்துவார்கள். கூடுமானவரை முன் பக்கத்திலோ அல்லது டேஷ் போர்டிலோ வீடியோ சிஸ்டத்தைப் பொருத்துவதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், ஓட்டுநரின் கவனம் திசை திரும்பாமல் இருக்கும்.

ஸ்பீக்கர்

காரில் எத்தனை ஸ்பீக்கர்கள் வைத்து இருக்கிறோம் என்பதுதான் இளைஞர்களுக்கிடையே நடக்கும் போட்டி. மியூஸிக் சிஸ்டத்தின் முக்கிய அம்சமே லவுட் ஸ்பீக்கர்கள்தான். பொதுவாக பக்கத்துக்கு ஒன்று என்ற அளவில் இரண்டு லவுட் ஸ்பீக்கர்களே போதுமானதாக இருக்கும். ஆனால், சத்தம் அதிகமாக வேண்டும் என்பதற்காக ஸ்பீக்கர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போவார்கள். மெல்லிய சத்தம்கூட துல்லியமாகக் கேட்பதற்காக லவுட் ஸ்பீக்கர்களோடு சப்-ஊஃபர்களும் பொருத்தப்படுகின்றன. சகலவிதமான விலைகளிலும் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இவைதான் மியூஸிக் சிஸ்டத்தின் மதிப்பைக் கூட்டும்.

ஸ்பீக்கர் வாங்கும்போது நீங்கள் அடிக்கடி கேட்கும் பாடல்களின் சிடியையும் கையோடு எடுத்துச்செல்லுங்கள். அந்தப் பாடல்களைப் புது ஸ்பீக்கர்களில் கேட்கும்போது ஸ்பீக்கர் சரியாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க உதவும். ஸ்பீக்கர்களை எந்த இடத்தில் பொருத்தப்

போகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏற்கெனவே காரில் இருக்கும் ஸ்பீக்கரின் அளவுக்கேற்ப புது ஸ்பீக்கர்களை வாங்குங்கள். அதிக அளவிலான ஸ்பீக்கரை கதவுக்கிடையில் வைக்கும்போது, கண்ணாடிகளை இயக்குவதில் பிரச்னை ஏற்படும். சப்-ஊஃபர்கள் பொதுவாக எட்டு இன்ச் அளவுக்கு இருப்பதால் அதிகமான ஆம்ப்ளிஃபயர் பவரையும் இழுக்கும். உங்கள் காருக்குள் இருக்கும் இடத்தைப் பொறுத்து எத்தனை சப்-ஊஃபர்கள் தேவை என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

கோக்ஸியல்  (Coaxial)  ஸ்பீக்கர்கள்,பொதுவாக குறைவான விலையுடன் அளவிலும் சிறிதாக இருப்பதால் காரில் பொருத்துவது சுலபம். அதேசமயம், இதில் சத்தம் அதிகமாகக் கேட்காது என்கிற குறையும் இருக்கிறது. பொதுவாக ஸ்பீக்கர்கள் டேஷ்போர்டு, கதவுகள், பூட் ஆகியவற்றில் வைக்க வேண்டும்.

ஆம்ப்ளிஃபயர்ஸ்

ஆம்ப்ளிஃபயரின் பணியே, குறைந்த அளவில் வரும் சத்தத்தை அதிக அளவாக்கி ஸ்பீக்கர்களுக்குத் தருவதுதான். 20 வாட்டில் ஆரம்பித்து 1000 வாட் வரை ஆம்ப்ளிஃபயர்கள் இருக்கின்றன. திறனுக்கேற்ப இதன் விலையும் சில ஆயிரங்களில் இருந்து பல ஆயிரங்களுக்கு அதிகரிக்கும். ஆம்ப்ளிஃபயரின் அளவு, எடையை வைத்தே அதன் தரத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். பொதுவாக, தரமான ஆம்ப்ளிஃபயர்கள் எடை அதிகமாகவும் அளவில் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்.

முக்கியமாக, இவற்றைப் பொருத்தும்போது தரமான ஒயர்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், மியூஸிக் சிஸ்டம், ஸ்பீக்கர்கள் பொருத்தும்போது, காரின் அழகு குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார்கள்.

உங்கள் வசதி எப்படி?

சார்லஸ்
படங்கள்: பொன்.காசிராஜன்