கசமுசா கார்செஷட்!

‘‘பொல்லாதவன் படம் பாத்தியா..?’’ என்று பைக் டைசனை பார்த்து கேட்டபடியே உள்ளே வந்தார் கார்மேகம். ‘‘நான் இரண்டு தடவைப் பார்த்தேன்...’’ என்று சொல்லிக்கொண்டே ஆர்வமாக ஸ்டூலை அருகில் எடுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தவரைப் பார்த்து, ‘‘என்ன சன் டி.வி.யில விமர்சனம் பண்ணப் போறவங்க மாதிரி பெரிய பில்டப் கொடுக்கிறே...’’ என்று கலாய்த்தார் கார்மேகம்.

‘‘நான் சொல்ல வந்த விஷயமே வேற. ‘நான்தான் அந்தத் தொழிற்சாலையைக் கொண்டு வந்தேன், இதைக் கொண்டு வந்தேன். ஆனா, மத்த கட்சிக்காரங்க தொழில் வளர்ச்சி வேகம்பிடிக்க முட்டுக்கட்டையா இருக்காங்க’ன்னு ஆட்சியில இருக்கிறவங்க பேசுறாங்க இல்லையா..?’’ என பைக் டைசன் சொல்லிக்கொண்டே போக...

‘‘உனக்கென்ன மனசுக்குள்ள ‘கழுகு’னு நினைப்பா?’’ என்று மீண்டும் கலாய்த்தார் கார்மேகம்.

‘‘கிட்டத்தட்ட அது மாதிரி மேட்டர்தான். புது கார் தொழிற்சாலையை கட்டி வெச்சுகிட்டு, ‘திறந்துவைக்க வாங்க’ன்னு ஆட்சியில இருக்கிறவங்ககிட்ட தேதி கேட்டா, அப்பாயின்ட்மெண்ட் கிடைக்க மாட்டேங்குதாம். என்னத்தைச் சொல்றது’’ என்று வருத்தப்பட்டார் பைக் டைசன்.

‘‘சரி, ரொம்ப ஃபீல் பண்ணாதே. பள்ளிக்கூடத்துல ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ன்னு பரீட்சையில் கேட்பாங்க இல்லையா? அது மாதிரி உனக்கு ஒரு பரீட்சை வைக்கிறேன். பாஸ் ஆயிடுவியான்னு பார்க்கலாம்’’ என்று சொல்லிவிட்டு, பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தார் கார் மேகம்.

‘------------- எலெக்ட்ராவில் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ---------- ஊரில் உள்ள தொழிற்சாலையில் தயாராகும் இந்த பைக் அறிமுகமாகவுள்ளது, இந்தியாவில் அல்ல; இங்கிலாந்தில்’ என்று எழுதிவிட்டு பைக் டைசனை ஏறிட்டார் கார்மேகம்.

‘‘எனக்கு புரிஞ்சு போச்சு. நான் இப்ப அதே மாதிரி உனக்கு ஒரு வாக்கியத்தை எழுதி காட்டுறேன். நீ கண்டுபிடிக்கிறயான்னு பார்க்கலாம்’’ என்று பைக் டைசனும் எழுத ஆரம்பித்தார்.

‘தான் தயாரிக்கப்போகும் லட்ச ரூபாய் காரை மற்றவர்கள் காப்பியடிக்காமல் தடுக்க காப்புரிமை வாங்க இருக்கிறது -------- நிறுவனம்’ இதைப் படித்த கார்மேகம், ‘‘ ‘டாடா’ காட்டத் தெரியாத கைப்புள்ளைகூட இதுக்கு பதிலைச் சொல்லிடும். போவியா...’’ என்று பைக் டைசனை செல்லத் தட்டு தட்டினார்.

‘‘சரி, கடைசியா ஒரு நியூஸ் சொல்றேன். இதாவது உனக்கு புரியுதான்னு பார்க்கலாம். ஜனவரி மாசம் டெல்லியில் நடக்கப் போற ஆட்டோ எக்ஸ்போவில, யார் யார் என்னென்ன கார், பைக்குகளை அறிமுகப்படுத்துவாங்கன்னு ஒரு யூக வெளையாட்டுதான் ஆட்டோமொபைல் ரிப்போர்ட்டருங்க மத்தியில நடக்குதாம். ஆனா, இதுல புது செய்தி என்ன தெரியுமா? சென்னையில் இருக்குற ஒரு பரபரப்பான கார் கம்பெனி, இந்தக் கண்காட்சிக்கு ‘ஷாக்’ அடிக்கிற மாதிரி, புதிசா எந்த காரையும் அறிமுகப்படுத்தப்போறதில்லையாம்’’ என புதிர் போட்டார் பைக் டைசன்.

‘‘நீ யாரைச் சொல்றேன்னு எனக்கு நல்லா புரிஞ்சுபோச்சு’’ என்றபடியே கார்மேகம் ஸ்பேனரை கையில் எடுக்க, பைக் டைசனுக்கு லேசாக ஜெர்க் அடித்தது!