ரிஸ்க்கு எடுக்கறது எங்களுக்கெல்லாம் ரஸ்க்கு சாப்பிடுறது மாதிரி!

என்னா கூட்டம்... என்னா கூட்டம்... எப்பப் பாத்தாலும் சர்ர்ரு சர்ருன்னு பறக்குறாய்ங்களேண்ணே. அப்படி எங்கதான் போவாய்ங்க, என்னதான் பண்ணுவாய்ங்க..!

பாவம் அந்தக் கெழவி, தலையில பானையை வெச்சுக்கிட்டு ‘மோர் மோரு’னு வித்துக்கிட்டு வந்துச்சுண்ணே.தாகமா இருக்குதேன்னு மோர் வாங்கப் போனேன். அந்தக் கெழவி பக்கத்துல போனதுதாண்ணே தாமசம். பின்னாடியே பைக்ல வந்தவன் நரி ஊளை வுட்டது மாதிரி ‘பொய்ங்’குனு ஒரு ஹாரன அடிச்சுப்புட்டான்.

கெழவி, பதறி பானையப் போட்டு உடைச்சுப்புட்டு, ‘பாவி உன்னாலத்தாண்டா பானை உடைஞ்சுது’னு அனத்த ஆரம்பிச்சுருச்சு. என்ன செய்ய? கெழவிகிட்ட குங்ஃபூவா போட முடியும். வழக்கம்போல தெண்டத்த கட்டிட்டு நடையக் கட்டுனேன்.

இப்படித்தேன் ஒருநா டீக்கடையில இருந்த ஓசி பேப்பர்ல ஈராக் செய்தியைப் படிச்சுப்புட்டு, நான் பாட்டுக்கு ரோட்டு ஓரமா போய்க்கிட்டே இருந்தேன். திடீர்னு பட... படன்னு ஒரே

சத்தம். அட நாசமா போறவய்ங்க இங்கேயும் குண்டு போட ஆரம்பிச்சுட்டாங்களான்னு பதறி ஓடுனதுல, கால் தடுக்கி பிளாட்பாரத்துல விழுந்தேன். அப்புறந்தேன் அது குண்டு கிடையாதுன்னு தெரிஞ்சுது. ஒரு சண்டாளன் பைக்கு சைலன்சரக் கழட்டிட்டு வண்டி ஓட்டுனதுல வந்த சத்தம். எனக்கு வந்துச்சு பாருங்க கோவம்... கைப்புள்ள கெணக்கா விருட்டுன்னு பிளாட்பாரத்துல இருந்து எந்திரிச்சு, மண்ணையெல்லாம் தட்டி விட்டுப்புட்டு பஸ்ல ஏறிப் போயிட்டேன். வேற என்ன செய்ய முடியும் நம்பளால!

ஆங், பிளாட்பாரம்னதுதேன் எனக்கு ஞாபகத்துக்கு வருது. போன வாரம் இது மாதிரிதான், சிக்னல்ல செவப்பு போட்டுட்டாய்ங்க... வாலு புடிச்ச மாதிரி நெட்டுக்கு வண்டிக ரோட்ல நிக்குது. எல்லாம் ஒழுங்காத்தேண்ணே நின்னுக்கிட்டு இருந்தாய்ங்க. திடீர்னு ஒருத்தன் பைக்கைத் தூக்கி பிளாட்பாரத்துல வெச்சு ஓட்ட ஆரம்பிச்சுட்டான். அட, என்னடா இது அக்கிரமா இருக்குன்னு பாத்துக்கிட்டு இருக்கேன். பூராப் பயலுவளும் அவன மாதிரியே பைக்க பிளாட்பாரத்துல ஓட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க. ஒருத்தன் கோடு போட்டா, ரோடே போட்றாய்ங்களேண்ணே. அப்படி இருக்கு நெலம!

சரி, இதக் கேளுங்க. அன்னிக்கு சிநேகிதன்கூட பைக்ல போய்க்கிட்டு இருந்தேன். எங்களுக்கு முன்னாடி ஒரு பஸ்ஸு, ரோட்டு நடுவுல இருக்குற சுவத்த ஒட்டுனாப்ல போயிக்கிட்டு இருந்துச்சு. அது வரைக்கும் ஒழுங்காத்தேண்ணே ஓட்டிக்கிட்டு இருந்தான் நண்பன். பஸ்ஸு இப்படி கொஞ்சம் விலகுச்சு பாருங்க, பயபுள்ள கிடைச்ச இம்புட்டுக்கானு கேப்ல பூந்து புகையாக் கிளம்புறான்.

எனக்கு ஈரக்கொலயே ஆடிப்போயிருச்சு. சோலி முடிஞ்சுதுடா சுந்தரபாண்டியான்னு நெனச்சுக்கிட்டேன். எந்த சாமி புண்ணியமோ தப்பிச்சேன். இடுக்குல பூந்ததுமில்லாம பஸ்ஸுக்கு முன்னாடி போய் டிரைவரை வையிராண்ணே. ‘என்னடா மாப்ள, இப்படிப் பண்ணிப்புட்டே?’ன்னு கேக்கறேன்... ‘ஈ’னு இளிச்சுக்கிட்டே, ‘சும்ம உலு உலுவாய்க்கு’னு சொல்றான். சரி, நமக்குத்தேன் ரிஸ்க்கு எடுக்குறதுன்னா ரஸ்க்கு சாப்புடற மாதிரியாச்சேனு வாயை மூடிட்டு இருந்துட்டேன். இல்லாட்டி இறக்கிவிட்டுப் போயிருவானே. இப்படி நண்பனே நயவஞ்சகமா நம்மளக் கொல்லப் பாக்குறான். அதனால, அடுத்த நாளு வெனையே வேணாம்னு பஸ்லயே போகலாம்னு பஸ்ஸுக்கு நின்னேன்.

நிக்கிறேன்... நிக்கிறேன். பஸ் வந்தபாடக் காணோம். ஒண்ணே கால் மணி நேரமா கால மாத்தி கால மாத்தி நின்னுக்கிட்டு இருந்தேன். ஒரே ஒரு நல்லவன் வந்தான். நல்ல வேளைக்கு வந்தானேன்னு ஏறப்போற சமயத்துல சரேல்னு ஒரு ஆட்டோக்காரன் குறுக்க புகுந்து நிக்குறான்.

அட என்னாட எழவு, 12 ஙி கதை மாதிரி ஆயிருமோன்னு பயந்துபோயி, ஆட்டோவச் சுத்தி போய் ஏறுறதுக்குள்ள பஸ்ஸ எடுத்துப்புட்டான். என்னாடா இது... சின்னப்புள்ளத்தனமா இருக்கேனு, கோவம் தலைக்கு ஏறிடுச்சு. ‘ஏன்டா அறிவு கெட்டவனே... இப்படியாடா ஆட்டோவக் கொண்டு வந்து நிறுத்துவாய்ங்க... எனக்கு மட்டும் ஏன்டா இப்படி கௌம்பி வர்றீங்க?’ன்னு மனசுக்குள்ளே அவனத் திட்டிப்புட்டு ஓரமா நின்னுக்கிட்டேன். வேறென்ன பண்றது... சத்தமாத் திட்டினாதேன் பொசுக்குனு கோவப்பட்டு அடிச்சுபுடுறாய்ங்கண்ணே!

அனுபவம் - கற்பனை:
அ.கணேஷ்ராஜ்