மக்காச்சோளத்தில் ஒரு மந்திர கார்!

ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து வெளிவரும், ‘வீல்ஸ்’ என்ற பத்திரிகை நடத்திய கார் டிஸைனிங் போட்டியில், சென்னையைச் சேர்ந்த ஹர்ஷா ரவி என்ற இளைஞர், ‘இந்த ஆண்டின் தலைசிறந்த கார் டிஸைனர்’ விருதை அள்ளியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மோனாஷ் பல்கலைக்கழகத்தில் டிஸைன் அண்டு டெக்னாலஜி படிக்கும் இவரது சாதனையைக் கவனித்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இவரை ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது தொழிற்சாலையில் பணியாற்ற அழைத்துக்கொண்டது. விடுமுறைக்காக சென்னை வந்திருந்த ஹர்ஷாவைச் சந்தித்தோம்.

‘‘கார் டிஸைனிங்கில் உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது?’’

‘‘சின்ன வயசில இருந்தே படம் வரைவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை குடும்பத்தோட ஆஸ்திரேலியாவுக்குப் போன சமயத்தில், அங்கே ஒரு ஹோண்டா காரைப் பார்த்தேன். அந்த காரின் டிசைன் பிடிக்கவே, வீட்டுக்குப் போனதும் அந்த கார் மாதிரியே ஒரு ரஃப் ஸ்கெட்ச் போட்டேன். அதே மாதிரி அடுத்தடுத்தும் நிறைய கார்களை வரைந்து

பார்த்தேன். இப்படித்தான் எனக்கு ஆட்டோமொபைல் டிஸைனிங் ஆர்வம் வந்தது. அப்போது நான் எட்டாவது படிச்சுட்டு இருந்தேன். பிறகு, டிசைனிங்கில் என்ன மாதிரியான கோர்ஸ் இருக்கு, எந்த யுனிவர்சிட்டி பெஸ்ட் என்று தேடி அலைந்து, எனக்குப் பிடித்த டிஸைனிங் கோர்ஸிலேயே சேர்ந்து இப்ப படிச்சுட்டு இருக்கேன்.’’

‘‘விருது பற்றி?’’

‘‘எனக்கு இந்த விருதை வாங்கிக் கொடுத்த டிஸைனைப் பற்றி முதலில் சொல்கிறேன். இந்த கார் டிஸைனைத் தீர்மானிக்கும் விஷயங்களில் முக்கியமானது எடை. காரின் எடை 500 கிலோதான் இருக்கணும் என்பது முக்கியமான விதிமுறை. அதனால், எடையை அதிகப்படுத்தும் விஷயங்களைக் குறைக்க வேண்டி இருந்தது. டிஸைன்படி முன்பகுதியில் இரண்டு இருக்கையும் பின்பகுதியில் ஒரு இருக்கையும் இருக்கும்.

பின்பகுதியில் இன்ஜினும் ஃப்யூவல் டேங்க்கும் வருகிறது என்பதால், ஒரே ஒரு ஸீட்! இதை பேட்டரி கார் என்றுகூடச் சொல்லலாம். காரணம், இந்த காரில் இருக்கும் இன்ஜினின் தேவை, பேட்டரியின் சார்ஜ் குறையும்போது மட்டுமே. ஆம், இந்த காரில் இன்ஜின் ஒரு ஜெனரேட்டராகத்தான் பயன்படும். இந்த இன்ஜின் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகி, அதன் மூலம்தான் கார் செயல்படும்.’’

‘‘டீசல் இன்ஜினைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?’’

‘‘டீசல் இன்ஜினில் பவர் ஃப்ளெக்சுவேஷன் இருக்காது. அதிலிருந்து வரும் பவர் சீராக இருக்கும். காரோட பேஸ் (அடிப்பாகம்) முழுவதுமே ஒரு பேட்டரியாகச் செயல்படும். அதாவது, நேனோ பேப்பர் பேட்டரி. இந்த பேப்பர் அடுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு காரின் பயணத் தூரமும் அதிகரிக்கும். இந்த காரின் வெளிப்புறத்தில் நேனோ பெயின்ட் ஸ்ப்ரே செய்யப்பட்டிருக்கும். காரின் மீது படும் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி பேட்டரிக்கு அனுப்பிவிடும்.’’

‘‘வண்டியின் தோற்றம் பற்றி...’’

‘‘இந்த காரை நீண்ட நேரம் வெயிலில் நிறுத்திவிட்டு, காருக்குள் அமர்ந்தால்கூட குளுமையாகத்தான் இருக்கும். வெளியே உள்ள இந்த பாடி பேனல் மக்காச்சோளத்தால் உருவாக்கப்பட்டது. அதேசமயம், காரின் உறுதியிலும் குறையிருக்காது.

இந்த காரில் ‘ஸிப்-அப்’ கதவுகள் உள்ளன. அதாவது, ஸிப்பை அவிழ்த்து ஒரு துணியைப் போல கார் கதவைக் கழட்டி மூடலாம். காரின் எடையைக் குறைக்க மற்றொரு சிறப்பம்சம், ‘ஒயர் ட்ரிவன் சிஸ்டம்’. கார்களில் டிரைவ் ஷாஃப்ட் போன்ற பல மெக்கானிக்கல் பாகங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ஒயர் ட்ரிவன் சிஸ்டம் முறையில், சிக்னல்கள் ஒயரின் மூலம் அனுப்பப்பட்டு கார் செயல்படுவதால், மெக்கானிக்கல் பாகங்கள் தவிர்க்கப்பட்டு எடை குறைகிறது.’’

‘‘பாதுகாப்பு பற்றி...’’

‘‘பொதுவாக காரின் உள்ளேதான் ஏர் பேக்ஸ் இருக்கும். இந்த காரில் உள்ளேயும் வெளியேயும் ஏர் பேக்ஸ் இருக்கிறது’’ என ஹர்ஷா ரவி, தான் வடிவமைத்த காரின் மகத்துவங்களைச் சொல்லச் சொல்ல, வியப்பாகவே இருக்கிறது.

கங்கிராட்ஸ் ஹர்ஷா!

அ.கணேஷ்ராஜ்