இது சி.எம். கார்!

முதலமைச்சர் கான்வாய் தொடங்கி, தொழிற்சாலைகள், உயிரியல் பூங்காக்கள் என இன்னும் ஆறு மாதத்துக்குள் பார்க்கும் இடமெல்லாம் எலெக்ட்ரிக் கார்களாகத் திரியப்போகின்றன. தமிழக முதல்வர்கூட இந்த கார்களைத்தான் பயன்படுத்துகிறார். இவற்றை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இருக்கிறது.

‘கேரியால் கார் கம்பெனி’-க்கு நாம் சென்றபோது, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஷ்வரா

இன்ஜினீயரிங் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை மாணவர்களும் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். எலெக்ட்ரிக் கார்களைப் பற்றி மாணவர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்க... விடை அளித்துக்கொண்டு இருந்தார், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபி.

‘‘இந்த காரில் இருக்கும் பேட்டரியை நீங்களே தயாரிக்கிறீர்களா அல்லது இறக்குமதி செய்கிறீர்களா?’’ என்ற மாணவி நந்தினியின் கேள்விக்கு, ‘‘எலெக்ட்ரிக் கார்களுக்குத் தேவையான பேட்டரியை இந்தியாவில் யாரும் தயாரிப்பதில்லை. எல்லோரும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றின் சார்ஜ், பேட்டரியின் திறன் ஆகியவை, காரின் வேகம் மற்றும் அளவுகளைப் பொறுத்து மாறுபடும். வீல், பாடி பேனல்கள், சஸ்பென்ஷன் ஆகியவற்றை நம்மூர் நிறுவனங்களில் வாங்கி, இங்கே அசெம்பிள் செய்கிறோம்’’ என்றார்.

‘‘எத்தனை வகையான மாடல்கள் உங்களிடம் உள்ளன?’’ என்று கேட்டார் பரத்.

‘‘ஒருவர் அமர்வது முதல் ஆறுபேர் வரை இருக்கிறது. மேலும், மினி ஆம்புலன்ஸ், காய்கறி வாகனம், ஐஸ்க்ரீம் வாகனம்கூட எங்களிடம் இருக்கின்றன’’ என்ற கோபியிடம், ‘‘நம் முதல்வர் கருணாநிதி பயன்படுத்துகிறாரே... அது என்ன மாடல்?’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் மாணவி திவ்யா.

‘‘முதல்வர் பயன்படுத்துவது, நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வசதி கொண்டது. இது 18 முதல் 24 கி.மீ வேகம் வரை செல்லும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 45 கி.மீ வரை இந்த

காரில் பயணம் செய்யலாம். இதன் விலை 3.75 லட்சம். முதலமைச்சரின் தேவைக்காக தமிழக அரசு எங்களிடம் இரண்டு கார்களை வாங்கியுள்ளது’’ என்று ஒரு எக்ஸ்ட்ரா தகவலையும் அளித்தார்.

‘‘இந்த விலைக்கு ஆல்ட்டோ, சான்ட்ரோ போன்ற கார்களையே வாங்கிவிடலாமே?’’ என்று அனுஷியா கேட்க... ‘‘நீங்கள் சொல்லும் கார்களுக்கு பேட்டரி கார்கள் போட்டியே இல்லை. காரணம், அந்த கார்கள் சாலைகளில் ஓடுவதற்காக தயாரிக்கப்பட்டவை. அவற்றை தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் ஓட்டினால், அது பெரும் சத்தத்தைக் கிளப்புவதுடன் அடுத்தவர்களுக்குத் தொந்தரவையும் ஏற்படுத்தும். அதுபோன்ற இடங்களில் பேட்டரி கார்கள் சத்தமும் புகையும் இல்லாமல் வலம் வரும். இந்த கார்களுக்கான பேட்டரி, மோட்டார் ஆகியவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, இதன் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த கார்களின் தரத்தை ஒப்பிடும்போது விலை குறைவுதான்’’ என்றார் கோபி.

‘‘தமிழக முதல்வருக்கு மட்டுமல்ல, சென்னை மெரீனாவையும் அண்ணாசாலையையும் சுத்தம் செய்வதற்காகவும் எங்களிடம் பேட்டரி கார்களைக் கேட்டுள்ளது சென்னை மாநகராட்சி. மேலும், வண்டலூர் விலங்கியல் பூங்காவிலும் இன்னும் சில மாதங்களில் எங்களது பேட்டரி கார்கள் இருக்கும். இது தவிர, டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பயன்படுத்துவதற்கும் எங்களிடம் பேட்டரி கார்களைத் தயாரித்துத் தரச்சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்’’ என்று பெருமிதத்துடன் சொன்ன கோபியிடம், ‘‘இதை சர்வீஸ் செய்வது எப்படி? வாங்கிய பிறகு ஏதாவது பிரச்னை என்றால் என்ன செய்வது?’’ என்று கேட்டார் மாணவர் அருண்.

‘‘நாங்கள் 2000-ம் ஆண்டில் இருந்தே பேட்டரி கார்களைத் தயாரித்துக்கொண்டு இருக்கிறோம். எங்களது கார்கள் பெங்களூரில் உள்ள பயோகான், தாஜ் குரூப் ஹோட்டல்கள், ரிலையன்ஸ் குரூப் என்று பல பிரபல நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வீஸைப் பொறுத்தவரை நாங்கள் வாடிக்கையாளர்களின் வாசலுக்கே சென்று செய்து கொடுத்துவிடுவோம். ஆகையால், குறையன்றும் இல்லை கோவிந்தா!’’ என்றார் கோபி!

சார்லஸ்
படங்கள்: என்.விவேக், எம்.உசேன்