e-scooter  ஃபேக்டரி விசிட்!

மின்சாரக் கண்ணா!

சத்தம் இல்லாமல் சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டு இருப்பது ‘சத்தமே எழுப்பாத’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள். இதன் எதிர்காலத்தைப் புரிந்துகொண்டு ஹீரோ, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் கோதாவில் இறங்கிவிட்டன. இன்னொரு பக்கம் சீனாவின் உதவியோடு புதிய உற்பத்தியாளர்களும் களம் புகுந்துள்ளனர்.

இதில் மிகக் குறுகிய காலத்தில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை அடைந்திருக்கும் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த விஜயா வேல்யூ எலெக்ட்ரிக்ஸ். இந்தியா முழுவதும் சுமார் 80 டீலர்கள்

உள்ளனர். எடுத்த எடுப்பிலேயே 3,000 இ-ஸ்கூட்டர்கள் விற்பனை என்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறிவரும் இந்த நிறுவனம் கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கால்களைப் பதித்து வெற்றிக் கணக்கை ஆரம்பித்திருக்கிறது.

‘‘புகை இல்லை, சத்தம் இல்லை, ரெஜிஸ்ட்ரேஷன் இல்லை, லைசென்ஸ் இல்லை என இ-ஸ்கூட்டர்களினால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் இவற்றின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மனதில் இன்னும் ஒரு தயக்கம் இருக்கிறதே?’’ என்று இந்த நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதரிடம் நமது சந்தேகத்தை முன்வைத்தோம்.

‘‘முதன்முதலில் இ-ஸ்கூட்டர்கள் அப்படியே முழுவதுமாக இறக்குமதியாகி விற்பனை செய்யப்பட்டன. சிலர் இதைக் கள்ளத்தனமாகவும் இறக்குமதி செய்து விற்பனை செய்தனர்.

அப்போதைய சூழ்நிலையில் சீன ஸ்கூட்டர்கள் மீது இருந்த மோகத்தால், நிறைய பேர் வாங்கினார்கள்.ஆனால் தில்லுமுல்லு மூலம் இறக்குமதி செய்து விற்றவர்களிடம் நம்பகத்தன்மையையும் சர்வீஸ் வசதிகளையும் எப்படி எதிர்பார்க்க முடியும்.

இப்போது இந்தியாவிலேயே இ-ஸ்கூட்டர்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இதன் தரம் குறித்து புனேவில் உள்ள  ARAI  சான்று அளித்த பிறகுதான் விற்பனை செய்கிறோம். மேலும், எங்கள் நெட்வொர்க்கை தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி உள்ளோம். அதனால், இ-ஸ்கூட்டர்களைக் குறித்த பயம் இனி தேவையில்லை’’ என்கிறார்!

‘‘பஞ்சர் போடுவது கஷ்டமா?’’

‘‘இல்லை. சாதாரண ஸ்கூட்டர்களை எப்படி பஞ்சர் போடுகிறோமோ அப்படித்தான் இதற்கும்.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், வீலுக்குள்ளே மோட்டாருக்குச் செல்கிற எலெக்ட்ரிக் ஒயர்களை மட்டும் சரியாக ‘டிஸ்கனெக்ட்’ செய்துவிட்டு பஞ்சர் போடவேண்டும். அது தெரியாததால்தான் ‘பஞ்சர் போடுவது கடினம்’ என்ற பேச்சிருக்கிறது. புதிய வாகனத்தை வாங்கும்போது எப்படி ஒயர்களை டிஸ்கனெக்ட் செய்து, மீண்டும் இணைப்பது என்பதைத் தெரிந்துகொண்டால், பஞ்சர் போடும் மெக்கானிக்குகளுக்குச் சொல்லித்தரலாம்.’’

‘‘அதிக எடையுள்ளவர்கள் பயணம் செய்தால் சார்ஜ் குறையுமா?’’

‘‘ஆமாம். அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் சுமையை ஏற்றினால் சார்ஜ் கொஞ்சம் சீக்கிரமாகக் குறையும்.’’

‘‘நீண்ட நாட்களாக சார்ஜ் போடாமல் அப்படியே வைத்திருந்தால் பாதிப்பு ஏற்படுமா?’’

‘‘பேட்டரியை தினமும் சார்ஜ் செய்ய வேண்டும். வெளியூர் செல்கிறோம் என்றால், போவதற்கு முன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். ஊரிலிருந்து திரும்பியதும் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு, மீண்டும் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்ய வேண்டியது அவசியம்.’’

‘‘அதிக மைலேஜ் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?’’

‘‘டயரில் காற்று சரியான அளவு இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். டிராஃபிக் சிக்னல்களில் ஆஃப் செய்துவிடுவது நல்லது.’’

‘‘பேட்டரியின் ஆயுள்காலம் எவ்வளவு?’’

‘‘ஒரு பேட்டரி பொதுவாக ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் வரை உழைக்கும். அதாவது, 400 முதல் 500 முறை சார்ஜ் செய்ய முடியும். அதன் பிறகு பேட்டரியை மாற்றிக்கொள்ள வேண்டும்.’’

‘‘மழைக் காலத்தில் ஓட்டும்போது ஈரத்தினால் ஷாக் அடிக்குமா?’’

‘‘பேட்டரி முழுவதுமாக சீல் செய்யப்பட்டிருக்கும் என்பதால், மழைக் காலத்தில் ஷாக் அடிக்கும் என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. மேலும், இது 48 வோல்டேஜ் மின்சாரம் மட்டுமே கொண்டது என்பதால், அந்த அச்சமே தேவையற்றது.’’

சார்லஸ்
படங்கள்: பொன்.காசிராஜன்