கிரேட் எஸ்கேப்

சென்னை  to  ஏலகிரி

குட்டி ஊட்டி!

இன்று போய் நாளை திரும்ப, சென்னை வாசிகளுக்கு வசதியான மலை வாசஸ்தலம், ஏலகிரி. இதை ‘குட்டி ஊட்டி’, ‘மைக்ரோ கொடைக்கானல்’ என்று எப்படி வர்ணித்தாலும் பொருத்தமாக இருக்கும்.

ஏலகிரி செல்ல, நமது வாசல் தேடி வந்த ரதம்... புதிய டாடா சஃபாரி டிகார்.

3000 சிசி ஆக இருந்த இன்ஜின் கொள்ளளவை 2200 சிசி ஆகவும் 4810 மி.மீ ஆக இருந்த காரின் நீளத்தை 4650 மி.மீ ஆகவும் குறைத்திருக்கிறார்கள். ஆனால், 115 பிஹெச்பி திறனை 140 பிஹெச்பி ஆக அதிகரித்திருக்கிறார்கள்.

பார்வைக்கு ஆஜானுபாகுவாக இருந்தாலும், இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைக்கிறது டாடா

சஃபாரி டிகார். குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிக்க வசதியான இந்த காரில், ஏறி உட்கார்ந்தவுடன் கனரக வாகனத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், இதன் பவர் ஸ்டீயரிங், ஓர் சிறிய காரைச் செலுத்துவது போன்ற அனுபவத்தைத் தந்து பிரமிக்கவைக்கிறது.

அலுங்காமல் குலுங்காமல்...

போக்குவரத்து நெருக்கடியால், சென்னை அண்ணாசாலையிலிருந்து பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை எட்ட இரண்டு மணி நேரம் ஆகிறது. ஸ்ரீபெரும்புதூரைக் கடந்துவிட்டால், சாலை விமான ஓடு பாதையாக மாறிவிடுகிறது. இந்தச் சாலையில் இன்ஜினின் முழுத் திறனையும் சோதித்தோம். ஸ்பீடோ மீட்டர் 100-ஐ கடந்துவிட்டது என்பதை மீட்டரைப் பார்த்தால்தான் தெரியும். 120, 140 என ஸ்பீடோ மீட்டரின் முள் எகிறியபோது கார் அலுங்காமல் குலுங்காமல் செல்கிறது. ஆனால், 140-ஐ தொட்டதும், காரிலிருந்து அதிர்வுகள் கிளம்புவதை உணர முடிகிறது.

சுலபமான கியர் ஷிஃப்ட், சற்று உயரமாக இருந்தாலும் இயக்க வசதியாக இருக்கும் பெடல்கள், அதிகச் சத்தம் எழுப்பாத டுயூவல் ஏ.ஸி என சொகுசு கார்களுக்கான அத்தனை அம்சங்களுடனும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். காரின் உள்பக்கம் இருக்கிற சில பிளாஸ்டிக் சமாசாரங்களின் தரம் மட்டும் கொஞ்சம் கண்ணை உறுத்துகிறது.

திடீர் வாகனங்கள்

இருங்காட்டுக்கோட்டையைக் கடந்தால், இரு வழிப் பாதையின் தடுப்புச் சுவரை உடைத்து, ஆங்காங்கே வழிகள் ஏற்படுத்தி வைத்திருப்பதை பார்க்க முடியும். எனவே, சாலையின் குறுக்கே திடீர் திடீரென்று தோன்றும் வாகனங்களைக் கவனமாக எதிர்கொள்வது சவாலாகவே இருக்கிறது. காஞ்சிபுரம், வேலூர் ஆகிய ஊர்களைக் கடந்து ஆம்பூரை அடைந்ததும் காரின் வேகத்தைக் குறைத்து, ஏலகிரி செல்லும் பிரிவுச் சாலையைத் தேடினோம். சென்னை - பெங்களூர் தங்க நாற்கரச் சாலையில் வலதுபுறம் ஒதுங்கி இருக்கிறது வாணியம்பாடி. இந்த இடத்திலிருந்து இடதுபுறம் பிரிகிற திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி என்ற ஊரிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது ஏலகிரி. இதை வேலூர் மாவட்டத்தின் கொடை எனப் புகழ்கிறார்கள்.

பெருக்கெடுத்து ஓடும் தமிழ்!

தரையிலிருந்து மலை உச்சி வரை 14 கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொரு வளைவுக்கும் பாரி, ஓரி என கடை ஏழுவள்ளல்கள், தமிழ்ப் புலவர்களின் பெயர் களைச்சூட்டி இருக்கிறார்கள்.

இந்த மலைச் சாலை குறுகலான நீரோடை போல வளைந்து நெளிந்து செல்கிறது. எதிரே வாகனம் வந்தால் நின்று நிதானித்துச் செல்வது நல்லது. கொண்டை ஊசி வளைவுகளின் எதிரே வாகனம் வந்துவிட்டால், பெரிய உருவமாகத் தோன்றும் சஃபாரி டிகார் ஒத்துழைக்குமா எனச் சந்தேகமாக இருந்தது. ஆனால், கவலைப்படாமல் தாராளமாய் அதைத் திருப்ப முடிந்தது.

தரையிலிருந்து பார்க்கும்போது மரங்கள் அதிகமில்லாத மொட்டை மலை போல் காட்சியளிக்கிறது. இதன் உச்சியை நோக்கிச் செல்லச் செல்ல... மரங்களும் செடிகொடிகளும் அடர்த்தியாக இருக்கிறது. இருபதே நிமிடங்களில் 1410 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஏலகிரி மலைக்குச் சென்றுவிட்டோம். 29.2 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட இந்த மலை குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் காட்சியளிக்கிறது.

ஊருக்குள் நுழைவதற்கு முன்னாலேயே தொலைநோக்கி மையம் இருக்கிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே இது இயங்குமாம். அதற்கடுத்து நம்மை வரவேற்பது சுற்றுலாத் தகவல் மையம். ஏலகிரி மலையின் முழு விவரத்தையும் மூச்சுவிடாமல் சொன்னார் சுற்றுலாத் தகவல் மைய அலுவலர் சுதாகர்.

காக்கா பிடிக்க முடியாது!

‘‘ஏலகிரியில் ஏலக்காய் விளைகிறதா?’’ என்று கேட்டால், ‘‘இல்லை. சாமை என்ற தானியம் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. புரதச்சத்து நிறைந்த இதை, பிஸ்கட் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பகுதியிலேயே ஜவ்வாது மலையிலும் ஏலகிரி மலையிலும்தான் இது அதிகம் பயரிடப்படுகிறது’’ என்றார்.

நாம் தங்கியிருந்த ஓட்டல் ரிதம்ஸின் ஊழியர் ஒருவர், ‘‘சார் ஒரு முக்கியமான விஷயம், ஏலகிரியில் யாரும் காக்கா பிடிக்க முடியாது’‘ என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தவர், ‘‘ஏனென்றால், இங்கு காக்காவே கிடையாது’’ என்றார்.

சூரியன் மறையத் துவங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக குளிர் ஊடுருவுகிறது. உடல், கம்பளி ஆடையைத் தேடுகிறது. மனமோ, உடம்புக்கு மறுப்பு சொல்கிறது. ஏனெனில், ஊட்டி, கொடைக்கானல் போன்று இங்கே குளிர் ஊசியால் குத்துவது போல கடுமையாக இல்லாமல், மயிலிறகால் வருடிவிடுவது மாதிரி இதமாக இருக்கிறது. இங்கு குளிரை ரசிக்க முடிகிறது.

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

ஏலகிரி மலையில் கொட்டையூர், அத்தனாவூர், நிலாவூர், பொங்களூர், மங்கலம் என 14 சிறு மலைக் கிராமங்கள். இதில், அத்தனாவூரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் நிலாவூர், முழுக்க முழுக்க பழங்குடியினர் வசிக்கும் கிராமம். கான்க்ரீட் காடுகளில் வாழ்பவர்களுக்கு பெருமூச்சை வரவழைக்கின்றன ரம்யமான குடிசைகள். இங்கு புதிதாக படகுக் குழாம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். ஆக, ஏலகிரி மலையில் இப்போது இரண்டு படகு குழாம்கள். இவற்றை ஒட்டிய பூங்காவும் ஏரியைச் சுற்றிவர அமைக்கப்பட்டு இருக்கும் நடைபாதையும் நந்தவனமாகக் காட்சியளிக்கின்றன. அடுத்த கோடை விழாவுக்காக புதிய பொட்டானிக்கல் கார்டனை உருவாக்கிவிடுவது என்று துரிதகதியில் வேலைகள் நடக்கின்றன.

மங்கலம் என்ற ஊரிலிருந்து சுவாமிமலை பகுதிக்கு டிரக்கிங் செல்ல ஒரு தனிப் பாதை அமைத்திருக்கிறார்கள். இந்தச் சுவாமி மலைதான் ஏலகிரியின் உயரமான பகுதியாம். மலையிலிருந்து வழியும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியும் இங்கே உண்டு. ஆனால், இங்கு செல்ல திருப்பத்தூர் போய், அங்கிருந்து 13 கி.மீ பயணம் செய்ய வேண்டும்.

எப்படிச் செல்வது?

சென்னை டு ஏலகிரிக்கு 233 கி.மீ தூரம். மூன்றரை மணி நேரத்தில் செல்லலாம். ஹோட்டல் வசதிகளுக்கும் பஞ்சமில்லை. 200 ரூபாயிலிருந்து 4000 வரை வசதிக்கேற்ப ஹோட்டல்களில் ரூம்கள் கிடைக்கின்றன. மத்திய அரசின் ‘யாத்ரி நிவாஸ்’ தங்கும் விடுதியும் இருக்கிறது.

இங்கு சுற்றிப் பார்க்க அதிக இடங்கள் இல்லாவிட்டாலும் மாசற்ற இயற்கைச் சூழலில் இரண்டு நாட்கள் தங்கினாலே புத்துணர்ச்சி பிறக்கும். பெங்களூரிலிருந்து இரண்டு மணி நேரத்தில் இங்கு வந்துவிட முடியும். அதாவது ஏலகிரி மலைக்கும் பெங்களூருக்கும் உள்ள தூரம் 145 கி.மீ-தான். அதனால், கர்நாடகா சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருகிறார்கள். அதேபோல், ஜோலார்பேட்டை ஜங்ஷனில் இருந்து ஏலகிரி மலைக்கு 21 கி.மீ.தான். அதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கும் குறைச்சலில்லை. இங்கே மே, ஜூன் மாதங்களில் கூட்டம் களை கட்டுமாம்.

முதல்நாள் சில்லென்று வீசியக் காற்றுடன் தெளிவாக இருந்த சூழல், அடுத்தநாள் அதிகாலை பெய்த மழையில் முற்றிலும் மாறிவிட்டது. எங்கும் பனி மூட்டம் நிரம்பி இருக்க... காலை 10 மணிக்கே காரின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டுக்கொண்டு மலையிலிருந்து இறங்கினால், கீழே சுட்டெரிக்கிறது சூரியன். தரையிலிருந்து மலையைப் பார்த்தால் நம்பவே முடியவில்லை...

‘இந்த மலையிலா இத்தனை அழகும் குளுமையும் கொட்டிக் கிடக்கிறது!’

கா.பாலமுருகன்
படங்கள்: கே.ராஜசேகரன்