சட்டம் நம் கையில்

(10)

அசின் முகமும்... அசிங்கமான முகமும்...!

‘கார், பைக்’ வாங்குவதற்குப் பணம் வேண்டுமே என்று கவலைப்பட்ட காலம் கப்பலேறிப் போய்விட்டது. ‘புதிய வாகனம் வாங்கலாமா?’ என்று நீங்கள் கனவு கண்டால்கூடப் போதும். அதை மோப்பம் பிடித்துவிடும் வங்கிகள், உங்கள் கனவு கலைவதற்குள் செல்போன் கதவை இடைவெளியே இல்லாமல் தட்டத் துவங்கிவிடுவார்கள்.

“மற்ற வங்கிகளைவிட எங்களிடம் குறைவான வட்டி, சுலபமான தவணைகள்’’ என வார்த்தைகளில் தேன் தடவிப் பேசுவார்கள். “ஒரே ஒரு ரூபாயை முன்பணமாகச் செலுத்தி, புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்கள்’’ என்று கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுப்பார்கள். ‘வாடிக்கையாளர்கள் கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களைத் தேடி அலையக் கூடாது’ என்று

கார், பைக் விற்பனை செய்யும் ஷோரூமிலேயே அவர்களும் மேஜை, நாற்காலி போட்டு உட்கார்ந்து விடுகிறார்கள்.

கடன் கொடுக்கும் வரை அசின் மாதிரி சிரிக்கும் நிதி நிறுவனங்கள், நீங்கள் தவணை கட்ட தவறும்போது, தங்கள் அசிங்கமான முகத்தைக் காட்டுவார்கள்.

கடன் தரும் நிறுவனங்கள், வங்கிகள் இந்த அளவுக்குப் போட்டி போட்டுக்கொண்டு வாகனக் கடன் கொடுப்பதற்கு முக்கியக் காரணம் என்ன? வாகனக் கடன் கொடுக்கும் போது, அதைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளில் மோட்டார் வாகனச் சட்டத்தில் நிதி நிறுவனங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பதுதான்!

கடன்கள் - மூன்று வகை!

பைக், கார், லாரி என்று எந்த வாகனமானாலும் மூன்று வகையான கடனுதவிகள் சட்டத்தில் இருக்கின்றன. அவை தவணை விற்பனை உடன்படிக்கை  (Hire Purchase)  , குத்தகை விற்பனை

உடன்படிக்கை  (Lease Agreement)  , அடமான உடன்படிக்கை  (Hypothication Agreement)  . இந்த மூன்றுமே சட்ட நுணுக்கங்களின்படி வெவ்வேறு வகையானவை. ஆனால், வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை வாங்கிய கடனை, மாதத் தவணை முறையில் வட்டியுடன் திரும்பச் செலுத்துகிறோம் என்பது மட்டும்தான். தவணையைத் தவறாமல் செலுத்தும் வரையில், எந்த நிதி நிறுவனத்தில், எந்த முறையில் நாம் பணம் பெற்றிருந்தாலும் பிரச்னை இல்லை. ஆனால், தவணை தவறுகிறபோது தவணை முறை, குத்தகை முறை, அடமான முறை ஆகியவற்றில் எந்த முறையில் எடுத்திருந்தாலும் வாகன உரிமையாளருக்குச் சிக்கல்தான். கடனுதவி பெற்றவர்கள் தவணை தவறும்போதோ அல்லது நிதி நிறுவனத்தை ஏமாற்ற நினைக்கும்போதோ, மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 51(5)தான் நிதி நிறுவனங்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவுகிறது.

தனியார் நிதி நிறுவனங்கள் என்னதான் வலிய வந்து, இனிக்கப் பேசி கடனுதவி கொடுத்தாலும் அச்சடிக்கப்பட்ட நிதி உடன்படிக்கைகளில்  (Agreement)  அவர்கள் நம்மிடம் கையெழுத்துப் பெறும்போது, அனைத்துவித உரிமைகளும் அவர்களுக்குச் சாதகமாக இருப்பது போல தயார்

செய்யப்பட்டவையாக இருக்கும். அதோடு, முன் தேதியிட்ட காசோலைகளை செக்யூரிட்டிக்காகப் பெற்றுக்கொள்வார்கள்.

புதிய வாகனம் வாங்க நாம் கடனுதவி பெறும்போது, கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அடுக்கடுக்காகப் பல ஆவணங்களிலும் கையெழுத்துப் பெற்றுக்கொள்வார்கள். அத்துடன் படிவம் 34-ல் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு, புதிய வாகனத்தைப் பதிவு செய்யும்போது அந்த வாகனத்தின் பதிவுப் புத்தகத்தில் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 51-ன்படி ‘மேற்படி வாகனம் இந்த நிதி நிறுவனத்தில் கடன் பெறப்பட்டுள்ளது’ என்று பதிந்தும்  (Endorsement)  விடுவார்கள்.

கடன் தொகை முழுவதையும் கட்டி முடித்த பிறகு, உரிமையாளரும் நிதி நிறுவனமும் படிவம் 35-ல் கையெழுத்திட்டு பதிவுப் புத்தகத்துடன் ரூ.100 செலுத்தி, பதிவு அலுவலகத்தில் தாக்கல் செய்தால், கடனுதவி பதிவு  (Endorsement)  ரத்து செய்யப்படும்.

ஆட்சேபணை இல்லா சான்று!

நாம் எந்த வாகனத்தையும் கடனுதவி தந்த நிறுவனத்தின் ‘ஆட்சேபணை இல்லா சான்று’ மற்றும் ‘கிளியரன்ஸ் சான்று’ இல்லாமல் வாங்கக் கூடாது. அப்படி வாங்கினாலும் அதை நம் பெயருக்கு மாற்ற முடியாது. ஆதலால், பழைய வாகனங்கள் வாங்கும்போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

கடனுதவி பெறப்பட்டு பதிவுசெய்யப்பட்ட எந்த வாகனத்துக்கும், அதன் உரிமையாளர், பிரதி பதிவுப் புத்தகம் பெற வேண்டுமென்றாலும், வாகனத்தின் தன்மையை மாற்ற வேண்டுமென்றாலும், உரிமையாளரின் பதிவு விலாசத்தை புத்தகத்தில் மாற்ற வேண்டுமென்றாலும், வாகனத்தை ரீ-மாடல் செய்து அதைப் பதிவுப் புத்தகத்தில் பதிக்க வேண்டுமென்றாலும், நிதி நிறுவனத்தின் ‘ஆட்சேபணை இல்லா சான்று’ பெற்ற பின்புதான், சம்பந்தப்பட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி ஏதாவது ஒரு மாற்றம் செய்ய உரிமையாளர் நிதி நிறுவனத்திடம் விண்ணப்பித்தவுடன் 7 நாட்களுக்குள் மேற்கண்ட ஆட்சேபணை இல்லா சான்றிதழை உரிமையாளருக்கு வழங்கலாம். அல்லது எழுத்து மூலமாக வழங்க முடியாது என்று மறுக்கலாம். இந்த இரண்டையும் 7 நாட்களுக்குள் நிதி நிறுவனம் செய்யவில்லையெனில், மேற்கண்ட மாற்றத்துக்கு நிதி நிறுவனம் ஆட்சேபணை இல்லா சான்று அளித்துவிட்டதாகக் கருதப்படும். வாகன உரிமையாளர் மாற்றங்களுக்கான மனுவுடன், தான் மனு செய்து 7 நாட்களுக்குள் எந்தவிதப் பதிலும் கிடைக்கவில்லை என்ற ஓர் உறுதிமொழிச் சான்று இணைக்க வேண்டும்.

அதிகாரிக்கு என்ன அதிகாரம்?

ஆனால், வாகனப் பதிவு அதிகாரி அதைவைத்து பெர்மிட்டை நீட்டிக்கலாம் அல்லது நீட்டிக்காமலும் போகலாம். புதிய டூப்ளிகேட் பதிவுப் புத்தகத்தை தரலாம் அல்லது தராமலும் இருக்கலாம். புதிய பதிவையும் மறுக்கலாம். இது பதிவு அலுவலக அதிகாரிகளின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும்.

ஒரு வாகனப் பதிவு அதிகாரி கடனுதவி பெறப்பட்ட வாகனத்தின் பதிவுப் புத்தகத்தில் எந்தவிதப் பதிவுகள் அல்லது மாற்றங்கள் செய்தாலும் அதை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு எழுத்து மூலம் தகவல் தர வேண்டும்.

தலையே போனாலும் தவணையைச் செலுத்திவிடுங்கள்!

கடனுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்துகள் பெறும்போதே, பல படிவங்களில் கையெழுத்துகள் வாங்கிவிடுகிறார்கள். விஷயம் தெரிந்தவர்களேகூட அவற்றைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுவிடுகிறார்கள். நாம் தவணை தவறியவுடன் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வாகனத்தை எடுத்துச்செல்லும் உரிமை, அபராத வட்டி செலுத்துவதற்கு ஒப்புக்கொள்ளும் ஷரத்து, ஒரு முறை நாம் மாதத் தவணைக்கு கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்பினால் அதற்கு ரூ.500 அபராதம், தவணை தவறிய காலங்களில் நம்மை நிதி நிறுவனத்தினர் தேடிவந்தால், ஒவ்வொரு முறைக்கும் ஒரு பெரும் தொகை, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே முழுக் கடன் தொகையையும் அடைக்க நினைத்தால், அதற்குரிய வட்டி, கடனுதவிக்கான ஒப்பந்தச் செலவு - இப்படி ஏகப்பட்ட சில்லறை விஷயங்கள் அடங்கிய படிவத்திலும் உங்களிடம் கையெழுத்துப் பெற்றுவிடுகிறார்கள். ஆதலால், உங்கள் உரிமைகள் பலவும் மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே, வாகனம் வாங்க கடனுதவி பெற்றால், மாதத் தவணையை தவறாமல் செலுத்தி, சிக்கலில் இருந்து தப்பித்து வெளியில் வருவதுதான் புத்திசாலித்தனம்!

சைரன் உஷார்!

அண்மையில் கொடைக்கானல் பிரதான சாலையில் ஒரு கார் சைரன் ஒலி, ரிவால்விங் முகப்பு விளக்குடன் பந்தாவாக வந்துகொண்டு இருந்தது. ஆவலுடன் யாரென்று பார்த்தோம்.

‘மாவட்ட கவுன்சிலர்’ என்று காரின் முகப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாவட்ட கவுன்சிலர்களுக்கெல்லாம் இந்த அனுமதி எப்போது கிடைத்தது என்று குழம்பிவிட்டோம். அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், அதிகாரிகள்கூட இப்படிதான் இருக்கிறார்கள். சில இடங்களில் வருவாய் துறையில் தாசில்தார், ஊரக வளர்ச்சி அலுவலர், காவல் துறையில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள்கூட இந்த விளக்கைப் பொருத்திக்கொள்கிறார்கள். சில எம்.எல்.ஏ-க்களும் இப்படி பயன்படுத்துவதாகத் தெரியவருகிறது. உண்மையில் இந்தச் சிவப்பு சுழல் விளக்கைப் பயன்படுத்தும் அதிகாரம் இவர்களுக்கு உண்டா?

மாநில அரசின் உத்தரவுப்படி மாநிலத்தில் சிவப்பு சுழல் விளக்கு வைத்துக் கொள்ள அதிகாரம் உள்ளவர்கள் கவர்னர், முதல் அமைச்சர், சபாநாயகர், கார்பரேஷன் மேயர்கள், மந்திரிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநகர காவல் ஆணையாளர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், பைலட் மற்றும் எஸ்கார்ட் வாகனங்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், சரக டி.ஐ.ஜி, மாநிலத் தேர்தல் ஆணையாளர், ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் ஆகியோர் மட்டுமே!

சம்பந்தப்பட்ட உயர் பதவியில் இருப்பவர்கள் அந்த வாகனங்களில் பயணம் செய்யும்போது மட்டும்தான் சைரன், சுழல் விளக்கைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் அந்த வாகனங்களில் பயணிக்காத சமயங்களில், அந்த விளக்கை மூடி வைத்திருக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் டிரைவர்கள் மட்டும் செல்லும்போதுகூட இந்த விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். சிவப்பு விளக்கை அதிகாரத்தின் அடையாளமாக, தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்!

(தொடரும்)