ஒரு விபத்து... சில பாடங்கள்!

சபிக்கப்பட்ட இரவு!

‘‘மாநகரச் சாலைகளில் வாகனங்களில் செல்வது என்பது பல சமயங்களில் நிராயுதபாணியாகப் போர்க்களத்துக்குச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. குறுக்கே சீறிப்பாயும் வாகனங்களெல்லாம் விஷம் தோய்ந்த அம்புகளாகத்தான் கண்களுக்குத் தெரிகின்றன. எந்தத் திசையில் இருந்து எப்போது அம்பு பாயும் என்பதைக் கணிக்கவே முடியாது.

கார் ரூபத்தில் என் மீது பாய்ந்த அம்பு ஒன்று, என் உயிரைக் குடிக்கப் பார்த்தது’’ என்கிறார் சரவணன்.

‘‘எனது உறவினர் ஒருவரை ரயில் நிலையத்தில் வழியனுப்பிவிட்டு, இரவு 7.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். அன்று பந்த் என்பதால் சாலை வெறிச்சோடிக்கிடந்தது. சென்னை காசி தியேட்டருக்கு அருகேஉள்ள பாலத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, பின்னாலிருந்து வேகமாக வந்த ஒரு வாகனம் என் மீது மோதியது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான், வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு, பாலத்தின் கீழேயுள்ள ரோட்டில் விழுந்தேன்.

எவ்வளவு நேரம் அங்கே சுயநினைவு இல்லாமல் கிடந்தேன் என்று தெரியவில்லை. அந்த இரவில், திடீரென ஒரு வெளிச்சம் தெரிந்தது. என் முகத்தில் பளிச்சென டார்ச்லைட் பட்டு கண்கள் கூசின. ஒன்றிரண்டு பேர் என்னை நோக்கி வந்தனர். பார்வை மங்கலாகத் தெரிந்தது. அவர்கள் என்னைத் தூக்கி ஒரு ஆட்டோவில் ஏற்றி, அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.

அங்குள்ள மருத்துவர் எனக்கு முதலுதவி சிகிச்சையளித்தார். அன்று நான் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. அதனால், தலையில் பலமான அடி. நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளன. உண்மையில் இடுப்புப் பகுதியில்தான் மிக மோசமாக அடிபட்டிருந்தது. அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால், மியாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.

என் வலது தொடை எலும்புகள் முறிந்துவிட்டன. அங்கே ஓர் எலும்பு உடைந்து, சிறுநீரகப்

பையைத் துளைத்துவிட்டிருக்கிறது. எனவே, உடலுக்குள் ரத்தம் கசிந்துகொண்டே இருந்திருக்கிறது. அறுவை சிகிச்சைக்கும் கசியும் ரத்தத்தை ஈடுசெய்வதற்கும் அதிகப்படியான ரத்தம் தேவைப்பட்டது.

எனக்கு ‘ஓ நெகட்டிவ்’ வகை ரத்தம். மிகுந்த சிரமத்துக்குப் பிறகே அது கிடைத்தது. என்னுடன் பணிபுரிபவர்களில் சிலரும் அதே ரத்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் நான் பிழைத்தேன். இரண்டு மாதம் படுக்கையைவிட்டு எழுந்திருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். இந்த விபத்து ஏற்படுத்திய இழப்பைச் சொல்வதானால் பல லட்சங்கள் இருக்கும். அதுமட்டுமல்ல, என் உற்சாகமான வாழ்க்கையையும் இழந்துவிட்டேன்’’ என்று கண்களில் நீர் கசியச் சொல்லி முடித்தார்.

இந்த வழக்கில் சரவணனுக்கு வழக்கறிஞராக இருந்து உதவிகள் செய்பவர் கார்த்திகேயன். இவரிடம் பேசினோம். ‘‘சரவணன் மீது மோதியவர், முதலில் காவல் நிலையத்துக்குச் சென்று தன்மீது தவறு எதுவும் இல்லை என்று வழக்குப் பதிவு செய்துள்ளார். விபத்து நடந்தவுடன் காவல் நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அளவில் அது சரியான செயல்தான்.

ஆனால், விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். அவர் பக்கம்தான் தவறு என்பதைக் காவலர்கள் புரிந்துகொண்டதால், அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்துவிட்டு, சரவணன் தரப்பில் தரப்பட்ட எஃப்.ஐ.ஆரை இப்போது பதிவு செய்துள்ளனர்.

மருத்துவச் செலவு, சம்பாதிப்பவராக இருந்தால் ஏற்படும் வருமான இழப்பு, அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அதிகம் என்றால், அதற்கான தொகை, அனுபவிக்க நேர்ந்த வலிக்கான நஷ்டஈடு போன்ற அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதன் அடிப்படையில் இழப்பீடு கேட்கலாம்.

இந்த விபத்தில் சரவணனுக்குப் பலத்த அடிபட்டிருக்கிறது. அவருக்கு மருத்துவச் செலவு கிட்டத்தட்ட நான்கு லட்சத்துக்கு மேல் ஆகியிருக்கிறது. ஆனால், அவரது மாத வருமானம் சுமார் 7000 ரூபாய்தான். இவர் முழு ஆரோக்கியம் பெற்று சகஜநிலைக்குத் திரும்ப மூன்று ஆண்டுகள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த மூன்று ஆண்டுகளுக்கான சம்பளத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு நஷ்டஈடாகக் கேட்கலாம். வலிக்கான நஷ்டஈடாக ஒரு தொகை என எல்லாமும் சேர்த்து 40 லட்சம் வரை கேட்கலாம். ஆனால், நாங்கள் 20 லட்சம் நஷ்டஈடு கேட்டுத்தான் வழக்குப் போட்டிருக்கிறோம்’’ என்றார்.

விபத்து நடந்தபோது, சரவணனை பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தவர், கிண்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஜாஹீர் ஹூசேன். அன்று நடந்த அசம்பாவிதத்தை நினைவுகூர்ந்தார்.

‘‘அன்று பந்த் தினம் என்பதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லை. இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும். எனது பீட்டிலிருந்து சிறிது தூரம் சாலையில் நடந்துகொண்டு இருந்தபோது, சாலையில் டயர் அழுந்தித் தேய்த்தபடி போன தடம் தெரிந்தது. அந்த தடத்தைப் பின்தொடர்ந்து நடந்தேன். சற்று தூரத்தில் பாலத்தில் ஒரு பைக் சரிந்து கிடந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரையும் காணவில்லை. ஆனால், ஏதோ சத்தம் மட்டும் கேட்டது.

காதைத் தீட்டிக் கொண்டு கவனித்தேன். யாரோ முனகுவதுபோல் கேட்டதும் கையில் இருந்த டார்ச்சை அடித்து பாலத்தின் கீழே பார்த்தேன். வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். அந்தப் பக்கமாகப் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி, சிலர் உதவியுடன் அந்த வாலிபரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

இதற்குகூட நான் அதிகம் சிரமப்படவில்லை. அடிப்பட்ட சரவணனின் குடும்பத்தாரை தேடிக் கண்டுபிடித்து, விஷயத்தைச் சொல்லத்தான் அதிகச் சிரமமாக இருந்தது.

சரவணனை மருத்துவமனைக்குக் கொண்டு போகும் வழியில் அவரது சட்டைப்பையில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். பர்ஸோ, செல்போனோ எதுவுமே அவரிடம் கிடைக்கவில்லை. அவரது பேன்ட் பாக்கெட்டில் விசிட்டிங் கார்டு இருந்தது. அதை வைத்து அவரது வீட்டுக்கு ஒருவரை அனுப்பினேன். ஆனால், அது அவர் வசித்த பழைய வீட்டு விலாசம் போலிருக்கிறது. புது விலாசம் யாருக்கும் தெரியவில்லை. அந்த அர்த்த ராத்திரியில் அவரது அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். அவர்கள் தந்த முகவரியினால்தான் சரவணனின் பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்ல முடிந்தது.

வாகனத்தின் எண்ணை வைத்தே உரிமையாளரின் முகவரி உட்பட அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்ளும் வசதி, மேலை நாடுகளில் இருக்கிறது. நமது நாட்டிலும் அது வரவேண்டும்’’ என்றார் ஜாஹீர் ஹூசேன்.

விபத்துகள், பல புதிய பாடங்களைக் கற்றுத் தருகின்றன. கற்க, நாம் தயாரா என்பதே கேள்வி!

ரத்த வங்கி சொல்வது என்ன?

ரத்தம் சேமிப்பது தொடர்பாக நம்மிடையே இன்னும் விழிப்பு உணர்வு ஏற்படவேண்டும். ஆர்.சி.புக், வாகன இன்ஷூரன்ஸ் போன்ற மோட்டார் தொடர்பான ஆவணங்களில், கட்டாயமாக அந்த நபரின் ரத்த வகையைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் தன் ரத்த வகை என்ன என்பதைத் தெரிந்து வைத்திருப்பதோடு நண்பர்கள், உறவினர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரில் யாருக்கெல்லாம் அந்த ரத்த வகை இருக்கிறது என்பதையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அவர்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். வீட்டிலும் அந்த விவரங்களைக் குறித்துவைத்திருக்க வேண்டும். அலுவலகங்களில்கூட ஒரு குறிப்பிட்ட ரத்தவகையைச் சேர்ந்தவர்களை ஒரு குழுவாக அடையாளப்படுத்தி வைத்திருப்பது நல்லது. அதிலும், குறிப்பாக அரிதான நெகட்டிவ் ரத்த வகை கொண்டவர்கள், தங்கள் ரத்த வகையைப் போன்ற பத்து நபர்களின் தொலைபேசி எண்களையாவது கட்டாயம் குறித்துவைத்திருப்பது நல்லது. ஆபத்துக் காலங்களில் இது பேருதவியாக இருக்கும்!

மரணச் சாலைகள்!

டாக்டர் மோகன்தாஸ்
(மியாட் மருத்துவமனை)

விபத்து நிகழ்ந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

‘‘விபத்தில் அடிபட்டு விழுந்தவரைச் சுற்றி கூட்டம் கூடக் கூடாது. அவர் சுயநினைவு இழந்து இருந்தால், தட்டி எழுப்ப முயலக் கூடாது. சோடா, காபி, தண்ணீர் என எதுவும் கொடுக்கக் கூடாது. உடனடியாக, ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இடுப்பு, கால் போன்ற இடங்களில் காயம்பட்டிருந்தால், ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து ஆம்புலன்ஸில் கொண்டு வருவதுதான் உத்தமம். சரியான மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை என்றால், நேர விரயம் ஏற்பட்டு விபத்தில் சிக்கியவரின் நிலைமை மேலும் மோசமாகக்கூடும். விபத்து நடந்த இடத்துக்கு முதலில் வந்து சேருவது, டிராஃபிக் போலீஸ் என்பதால், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை பற்றி தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களில் ஆர்.சி.புக், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றுடன் பிளட் குரூப் போன்ற விவரங்களை வைத்திருப்பதும் நல்லது.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, விபத்தில் சிக்கியவரிடம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளவேண்டும். அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளில் ரவுடிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அடிபட்டவரிடம் இருந்து மோதிரம், சங்கிலி ஆகியவற்றைத் திருடிச் சென்றுவிடுகின்றனர். மோதிரத்தைக் கழட்ட முடியவில்லை என்றால் விரலை வெட்டி எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. சாலை விபத்தில் சிக்கி, எங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுபவர்களில் பெரும்பாலானோரிடம் செல்போனோ, பணமோ, ஆவணமோ, தங்க அணிகலனோ எதுவுமே இருப்பதில்லை. எனவே, கொள்ளையர்களிடமிருந்து விபத்தில் சிக்கியவரைக் காப்பதும் அவசியம்!

மகாதேவன்
படங்கள்: எம்.உசேன், ம.அமுதன்