கருண் சந்தோக் சிறப்புப் பேட்டி

‘‘கனவு பலித்தது!’’

எக்கச்சக்க குஷியில் இருக்கிறது இருங்காட்டுக்கோட்டை! காரணம், இந்தியர் ஒருவருக்கு ரேஸ் உலகின் மிகப் பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது. ‘ரெட் புல் ரேஸிங்’ அணிக்காக 2008-ம் ஆண்டு ஃபார்முலா-1-ல் போட்டியிடப் போகும் பந்தய கார்களை டெஸ்ட் டிரைவ் செய்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த கருண் சந்தோக்.

இங்கிலாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடைவிடாமல் பறந்துகொண்டு இருந்தவரை போனில் பிடித்தோம்.

‘‘வ்ர்ர்ரூம்ம்... வீரனே, எப்படி இருக்கீங்க?’’

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் கனவுகள் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும்னு நான் நினைக்கவே இல்லை. உலகின் மிகச் சிறந்த ரேஸ் வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு, எனக்குக் கிடைத்ததில் இரட்டை சந்தோஷம்.

‘2008-ம் ஆண்டு ஃபார்முலா-1 ரேஸில் பங்கேற்கும் காரை, நீங்கள்தான் முதலில் டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும். கார் எப்படி இருக்கிறது, இன்ஜின் ஓகே-வா, ஸ்பீடு எப்படி, வளைவுகளில் திருப்புவது சுலபமாக இருக்கிறதா?

என ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள்தான் ஓட்டிப் பார்த்துச் சொல்லப்போகிறீர்கள்’ என ரெட் புல் ரேஸிங் அணியினர் என்னிடம் சொன்னதும், எனக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.

ஏனென்றால், ரெட் புல் ரேஸிங் அணியின் போட்டி அணியான ஃபெராரி அணியின் காரை டெஸ்ட் டிரைவ் செய்வது, ரேஸ் உலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஷூமேக்கர்!’’

‘‘முதன்முறையாக ஃபார்முலா-1 காரை ஓட்டியபோது கிடைத்த அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் 13.11.2007. இது என் கனவு நனவான தினம். மைக்கேல் ஷூமேக்கருடன் ஒரே மைதானத்தில் போட்டி போட வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிய நாள் அது. ஃபார்முலா-1 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவர், எனக்காகவே திரும்ப வந்ததைப் போல உணர்ந்தேன்.’’

‘‘ஃபார்முலா-1 டெஸ்ட்டில் பத்தாவது இடம் பிடித்தது பற்றி....’’

‘‘பத்தாவது இடம் வந்ததற்கு என்னைவிட ரெட் புல் ரேஸிங் அணியினர்தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். காரணம், மிகவும் வேகமான கார்கள் எனக் கூறப்படும் ஹோண்டாவும் பிஎம்டபிள்யூ-வும் எனக்குப் பின்னால்தான் வந்தன. ஹோண்டா அணியின் ஜென்சன் பட்டன், பிஎம்டபிள்யூ அணியின் ராபர்ட் குபிகா ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளியதை நான் மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன்.’’

‘‘வாராது வந்த வாய்ப்பு எப்படி வந்தது?’’

‘‘ரெட் புல் ரேஸிங் அணியுடன் எனக்கு இரண்டு ஆண்டுகளாகவே தொடர்பு உண்டு. எனக்குப் பல நிலைகளில் உதவிகளைச் செய்துவந்தார்கள். அதுமட்டுமல்ல, அவர்களின் பார்வை என் மீது ஆழமாகப் பதிய காரணம், பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜீபி-2 போட்டியில் நான் பெற்ற வெற்றி என்று நினைக்கிறேன்.’’

‘‘ஜீபி-2, பார்முலா-1 என்ன வித்தியாசம்?’’

‘‘இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஃபார்முலா-1 காரில் ஸ்டீயரிங் வீலில் பல கன்ட்ரோல்கள் இருப்பதே பதட்டத்தை உண்டு பண்ணிவிடும். எந்த பட்டன் எதற்கு என்று புரியாது.

ஃபார்முலா-1 பெரிய பந்தயமாக இருந்தாலும் ஜீபி-2 காரோடு ஒப்பிடும்போது, ஃபார்முலா-1 கார் ரொம்ப சின்னது. அதனால், மனதளவில் இதை ஓட்ட கொஞ்சம் சுலபமாக இருந்தது. அதுமட்டுமல்ல, டெஸ்ட்டிங் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, ரெட் புல் ரேஸ் அணியின் தொழிற்சாலைக்குச் சென்று சிமுலேட்டரில் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.’’

‘‘அடுத்த வருடத்துக்கான உங்கள் திட்டம் என்ன?’’

‘‘அடுத்த ஆண்டு ஃபார்முலா-1 பந்தயங்களில் பங்கேற்க மாட்டேன். ஜீபி-2 பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதே நேரத்தில், இடையிடையே இதுபோல் ஃபார்முலா-1 கார் டெஸ்ட்டும் செய்துகொண்டு இருந்தால் நல்ல பயிற்சி கிடைக்கும் என நினைக்கிறேன். நிச்சயமாக 2009-ம் ஆண்டு ஃபார்முலா-1 பந்தயத்தில் கலந்துகொள்வேன்.’’

‘‘விஜய் மல்லையாவின் ‘ஃபோர்ஸ் இந்தியா’ அணியில் நீங்கள் இடம் பெறுவீர்களா?’’

‘‘தான் வாங்கியிருக்கும் ஸ்பைக்கர் அணிக்கு ‘ஃபோர்ஸ் இந்தியா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் விஜய் மல்லையா. பெயரிலேயே வெற்றியின் வாசம் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இந்திய ரேஸ் உலகில் இது ஒரு திருப்புமுனை. ஆனால், இந்தியர் நடத்தும் அணி என்பதால் அதில் இந்தியர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என நாம் எதிர்பார்ப்பது சரியல்ல.

‘இந்த அணிக்குத் தேர்வாக தகுதியும் திறமையும் மட்டுமே அடிப்படை. ரேஸ் வீரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை’ என விஜய் மல்லையா பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதனால், ஃபோர்ஸ் இந்தியாவில் இந்திய ரேஸ் வீரர்கள் இருப்பார்களா, இல்லையா என்ற விவாதம் இப்போது தேவையற்றது.’’

‘‘ஸ்பைக்கர் அணியை விஜய் மல்லையா வாங்கிய பிறகு அவரிடம் பேசினீர்களா?’’

‘‘ஆமாம். ஜீபி-2 போட்டிகளின் போதும் ஃபார்முலா-1 கார் டெஸ்ட் டிரைவின் போதும் அவர் வந்திருந்தார். என் அப்பாவுக்கு அவர் நெருங்கிய நண்பர். அவரிடம் தொடர்ந்து நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற ஜீபி-2 போட்டிகளின்போது என் வேகத்தை அவர் பாராட்டினார்.

எனக்கு இப்போதுதான் 23 வயதாகிறது. அதனால், இன்னும் ஒரு வருடம் ஜீபி-2 போட்டிகளில் கார் ஓட்டுவேன். ஐரோப்பிய ரேஸ் டிராக்குகளில் நல்ல அனுபவம் கிடைத்தால்தான் ஃபார்முலா-1 சுலபமாக இருக்கும்.’’

‘‘அடுத்த ஆண்டு ஜீபி-2 போட்டிகளில் பங்கேற்க போதுமான ஸ்பான்ஸர்கள் கிடைத்தார்களா?’’

‘‘இல்லை. அடுத்த ஆண்டு ஜீபி-2 போட்டிகளில் பங்கேற்க வேண்டுமானால், நம்மூர் ரூபாய் மதிப்பில் 12 கோடி செலவாகும். இப்போதிருக்கும் ஸ்பான்ஸர்கள் மூலமாக முக்கால் பகுதி பணம் இருக்கிறது. மீதிச் செலவுக்குத்தான் ஸ்பான்ஸர்கள் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், இப்போது இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. நிறைய நேரம் இருக்கிறது. இப்போது என் கவனம் எல்லாம் பயிற்சியில்தான்’’ என்கிறார் கருண் கம்பீரமாக!

கட்சி மாறும் வீரர்களால் காட்சி மாறுகிறது!

ஃபார்முலா-1 ரேஸின் காட்சிகள் மாற ஆரம்பித்துவிட்டன. கூட்டணிகளும் மாறிவிட்டன. கட்சித் தாவல்களும் நடைபெற ஆரம்பித்து விட்டன. 2008-ம் ஆண்டு துவங்கப்போகும் ஃபார்முலா-1 போட்டிகளுக்காக இப்போதே வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.

இரண்டு முறை உலக சாம்பியனான ஃபெர்னாண்டோ அலான்சோ, இந்த ஆண்டு மெக்லாரன் அணி சார்பாக ரேஸில் இறங்கினார். நடுவில், அவருக்கும் மெக்லாரன் அணியின் மற்றொரு

வீரரான லூயிஸ் ஹாமில்டனுக்கும் இடையே ‘ஈகோ’ யுத்தம் மூண்டது. இதனால் இருவரும் மாறி மாறி ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுகளை வீசி வந்தனர்.

இந்த ஆண்டு ஃபார்முலா-1 போட்டிகள் முடிந்ததும் மெக்லாரன் அணியில் இருந்து தனது மூன்று வருட ஒப்பந்தத்தை உடைத்துவிட்டு வெளியேறி இருக்கிறார் அலான்சோ. அடுத்து எந்த அணியில் சேரப்போகிறார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்த நிலையில், அலான்சோவை இரண்டு முறை உலக சாம்பியனாக உருவாக்கிய ரெனோ  (RENAULT  ) அணி மீண்டும் அவரைத் தன் அணிக்கு இழுக்கத் துடிக்கிறது.

அலான்சோ வெளியேறியதால் காலியாக இருக்கும் இடத்தை நிரப்ப, திறமையான வீரரை மெக்லாரன் அணி தீவிரமாகத் தேடி வருகிறது.

வில்லியம்ஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க், ரெனோ அணியின் ஹெய்கி கோவால்னைன் மற்றும் ஸ்பைக்கர் அணியின் ஆட்ரியன் ஸட்டில் ஆகியோர் மெக்லாரன் அணிக்குப் பொருத்தமாக இருப்பார்கள் என்று ஒரு பரிந்துரை கிடைத்திருக்கிறது.

வில்லியம்ஸ் அணியில் டெஸ்ட் டிரைவராக இருக்கும் நரேன் கார்த்திகேயனின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை.

விஜய் மல்லையாவின் ‘ஃபோர்ஸ் இந்தியா’ அணிக்கும் புதிய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. ஹோண்டா அணியின் கிறிஸ்டியன் க்ளின் மற்றும் டோரோ ரோஸோ அணியின் லியூஸி ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஃபோர்ஸ் இந்தியா அணி வீரர்களை வரும் டிசம்பர் 5 அன்று மொனாக்கோவில் அறிவிக்கவுள்ளார் விஜய் மல்லையா.

இதற்கிடையே டொயோட்டா அணி 2008-ம் ஆண்டு ஃபார்முலா-1 போட்டிகளுக்கான அணியை அறிவித்துள்ளது. டிமோ கிளாக்  (TIMO GLOCK  ), ஜார்னோ ட்ரூலி  (JARNO TRULLI)  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மைக்கேல் ஷூமேக்கரின் சகோதரரும் புகழ்பெற்ற வீரருமான ரால்ஃப் ஷூமேக்கரை அணியில் இருந்து நீக்கி, அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது டொயோட்டா!

சார்லஸ்