புயல்கள் மையம் கொண்ட

பிட் ஸ்டாப்!

இந்த ஆண்டின் தேசிய கார் ரேஸ் சாம்பியன்களான அஷ்வின் சுந்தரும் ஆதித்யா பட்டேலும் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ‘பிட் ஸ்டாப்’ ரெஸ்டாரென்ட்டில் சைலன்ட்டாக வந்து நிற்க, வ்ர்ர்ரூம்ம் எனக் காதைக் கிழிக்கும் சத்தத்தோடு தனது ‘இம்போர்டட்’ நிஸான் காரில் வந்திறங்கினார், ஜெமினி ரேஸிங் அணியின் அக்கினேனி ஆனந்த் பிரசாத். மோட்டார் விகடன் ஏற்பாடு செய்த இந்தச் சந்திப்பின் ஃபுல் கவரேஜ் இதோ...

‘‘இந்த வருஷம் ஃபார்முலா-ரோலான் சாம்பியனாயிட்டியே, அடுத்த வருஷம் இன்டர்நேஷனல் ரேஸிங் போயிடுவியா?’’ என அஷ்வின், சிக்கன் சமோஸாவைச் சுவைத்தபடி ஆதித்யாவைக் கேட்டார்.

‘‘அடுத்த வருஷம் ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கப் போறேன். இது மலேசியா, இந்தோனேசியா, சீனாவில் நடக்கும். பிறகு, படிப்படியா ஃபார்முலா 3, ஜீபி2, ஃபார்முலா-1 போகணும்கிறதுதான் கனவு.’’-ஆதித்யாவின் ஆசைகள் சிறகு விரித்த அதேநேரத்தில், ‘‘நான் சாம்பியன்னா, நீ டபுள் சாம்பியனாச்சே! ஃபார்முலா ஸ்விஃப்ட், ஃபார்முலா ஹூண்டாய்னு ரெண்டிலும் தீபாவளி கொண்டாடிட்டே’’ என்று அஷ்வினைப் பாராட்டிவிட்டு, மெனுகார்டில் பார்வையை ஓட்டினார் ஆதித்யா.

‘‘இந்த வருஷம் நடந்த 12 ரேஸ்களில் 11-ல் முதல் மூணு இடங்களுக்குள் வந்து சாம்பியன் ஆகி இருக்கேன்னா அதுக்குக் காரணம், ஐ லவ் ரேஸிங். ஆனா, லவ் பண்ணினா மட்டும் போதாதே. ரேஸுக்குப் பணமும் தைரியமும் வேணுமே. அதுக்காக ஸ்பான்ஸர்களுக்கும் தைரியமும் ஊக்கமும் கொடுத்த அப்பா, அம்மாவுக்கும்....’’ என்று அஷ்வின் சந்தடிசாக்கில் ஒரு சென்டிமென்ட் படம் ஓட்ட முயற்சி செய்துவிட்டு, ‘‘சரி, அடுத்த வருஷம் ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஓட்டப்போறேன்னு சொல்றியே... நிறைய செலவாகுமே?’’ என்று ஆதித்யாவை நோக்கி புருவத்தை வளைத்துக் கேட்டார்.

‘‘இந்த ரேஸ்ல கலந்துக்க எனக்கு 60 லட்ச ரூபாய் செலவாகும். இதுக்கான முழுச் செலவையும் நரேன் கார்த்திகேயனே ஏத்துக்கிறேன்னு சொல்லிட்டாரு. அவரோட என்கே ரேஸிங் டீம்தான் எனக்கு ஸ்பான்ஸர். அதனால், இப்போதைக்குக் கவலைப்படத் தேவையில்லை. ஏதாவது பிரச்னைன்னாகூட நம்ம ஜெமினி ரேஸிங் இருக்கு’’ என்று ஆனந்த் பிரசாத்தைக் கைகாட்டினார் ஆதித்யா.

‘‘என்னது, உனக்கு ஸ்பான்ஸரா? என்னால முடியாதுப்பா’’ என்று சிரித்தவர், ‘‘மொத்தம் ஏழு பேர் எங்க டீம் மூலமா ஸ்பான்ஸர்ஷிப் வாங்கி இந்த வருடம் ரேஸ்ல கலந்துக்கிட்டாங்க. ‘ஃபார்முலா ஹூண்டாய்’ போட்டியில் ரெண்டாவது இடமும், ஃபார்முலா ஸ்விஃப்ட்டில் மூன்றாவது இடமும் பிடித்தோம். அடுத்த வருஷம் மூன்று பேர் ரேஸ் ஓட்டப் போறோம். என்னைத் தவிர, ரேமண்ட் பானர்ஜி அடுத்த சீஸன்ல ஜெமினி ரேஸிங் சார்பா ரேஸ் ஓட்டுவார்’’ என்ற ஆனந்த் பிரசாத்திடம், ‘‘அந்த மூன்றாவது நபர் யார்?’’ என்று கேட்டபோது, ‘‘அது சஸ்பென்ஸ்’’ என்றார்.

‘‘இந்த வருஷம் என் அணிக்காக நான் போட்டிருந்த பட்ஜெட் மொத்தம் 25 லட்சம். ஆனால், செலவு எக்கச்சக்கமாகப் பிச்சுக்கிட்டுப் போனதால் 37 லட்ச ரூபாய் வரை ஆகிவிட்டது. பரவாயில்லை, டீம் ஜெயிக்கணும். நல்ல பேர் வாங்கணும். இப்போதைக்கு இதுதான் முக்கியம்’’ என்றார் ஆனந்த்!

சார்லஸ்
படங்கள்: கே. கார்த்திகேயன்