‘‘எனது அப்பா, அசோக் லேலண்டில் வேலை பார்த்தவர்.
விண்டேஜ் பைக் பிரியராக... இல்லை, வெறியராகவே இருந்தார்
என் அப்பா!
காலை, மாலை, ராத்திரி என எந்த நேரமும் விண்டேஜ் பைக்
பின்னால் அலையும் அப்பாவைப் பார்த்து, எரிச்சல் அடைந்த நானே
இப்போது அவரைப் போல விண்டேஜ் பைக்குகளுக்கு அடிமையாகிவிட்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் வாங்கிய இந்த நார்ட்டன் பைக்கை,
என் வீட்டை அலங்கரிக்கும் ஒரு தங்க ரதம் என்றே சொல்லலாம்.
என் வீட்டுக்கு வருபவர்கள் என் கார்களைப் பற்றி கேட்பதைவிட
‘இந்த பைக்கை எங்கே வாங்கினீர்கள்? விலை எவ்வளவு’ என்றுதான்
கேட்கிறார்கள்’’ - தன் பைக் பற்றி சிலிர்க்கும் சுதாகரின் வீட்டில்
டொயோட்டா லாண்ட் குரூஸர் பராடோ, மெர்சிடீஸ் பென்ஸ்,
பிஎம்டபிள்யூ, ஸ்கோடா என்று வெளிநாட்டு கார்கள் வரிசைக்
கட்டி நிற்கின்றன. காரணம், சுதாகர் வெளிநாட்டு கார்களை
இந்தியாவில் விற்பனை செய்யும் டீலர்.
‘‘ஜப்பானில் தயாரிக்கப்படும் ஹோண்டா, யமஹா, சூஸுகி
பைக்குகளைவிட எனக்கு இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் பைக்குகள்தான்
ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், இந்த பைக்குகளின் பாரம்பரியம்,
சொகுசான உணர்வு, ஸ்டைல், பர்ஃபாமென்ஸ், தரம் என அடுக்கிக்கொண்டே
போகலாம். மேலும், இந்த பைக்கில் இருக்கும் நுணுக்கமான,
உபயோகமான ஒவ்வொரு விஷயமும் என்னை காந்தமாக ஈர்க்கின்றன’’
என்று பைக் பெருமையை அடுக்கினார்.
‘‘1950-ம் ஆண்டு வெளிவந்த இந்த நார்ட்டன் டாமினேட்டர்
மோட்டார் சைக்கிளில் டிரிப் |