Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

வருமா பஜாஜின் சின்ன கார்?

2008-ம் ஆண்டு உலகின் சின்ன காரான நானோவை, டாடா அறிமுகப்படுத்துவதற்கு இரண்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் நியூஸ்

நாட்களுக்கு முன்பே தனது சின்ன காரை அறிமுகம் செய்தது பஜாஜ். ரெனோ - நிஸானுடன் இணைந்து இந்த காரைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தது பஜாஜ். 2010-ம் ஆண்டு முதல் இந்த கார் விற்பனைக்கு வரும் என அப்போது பெருமை பொங்க அறிவித்தார் ராஜீவ் பஜாஜ். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்த கார் வெளிவருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பதோடு, கார் இன்னும் கான்செப்ட் நிலையிலேயேதான் இருக்கிறது!

2009-ம் ஆண்டு, 'மிகவும் சின்ன கார் மார்க்கெட்டில் இறங்குவது லாபம் தரும் பிசினஸ் ஆக இருக்காது’ என கருத்து தெரிவித்திருந்தார் ரெனோ-நிஸான் நிறுவனத்தின் தலைவரான கார்லோஸ் கோன். இதனால், அப்போதே ரெனோ-நிஸான் இந்த புராஜெக்ட்டில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் அடிப்பட்டன. ஆனால், இதுவரை ரெனோ-நிஸான் நிறுவனம் பஜாஜ் உடனான கூட்டணி குறித்து தெளிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

இதற்கிடையே, 'பஜாஜின் சின்ன கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டது’ என்று மீடியாக்கள் செய்தி வெளியிட ஆரம்பித்தவுடன், குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ராவில்  பஜாஜ் நிறுவனம் கார் தொழிற்சாலை அமைக்கப்போவதாக  பஜாஜ் நிறுவனமே செய்திகளைக் கசிய விடுவதாகப் பரபரக்கிறது ஆட்டோமொபைல் மார்க்கெட். குஜராத்தில் பஜாஜ் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும், ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இந்தச் செய்தி உண்மையாக இருந்தாலும்கூட, குஜராத்தில் கார் தொழிற்சாலையை அமைத்து, அங்கே கார்களைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வர, குறைந்தபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும். அப்போது கார் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை இன்னும் எகிறியிருக்கும்.

பஜாஜின் சின்ன கார் விற்பனைக்கு வந்தாலும், அது முன்பு பஜாஜ் சொன்னது போல 2 லட்ச ரூபாய் காராக இருக்காது என்பது மட்டும் உறுதி!

தொடர்ந்து ஹீரோ ஹோண்டா முதலிடம்!

மோட்டார் நியூஸ்

உலகின் நம்பர் ஒன் மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹீரோ ஹோண்டா, ஜூன் மாதம் 5,12,244 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. பஜாஜ் நிறுவனம் 3,22,827 பைக்குகளை விற்பனை செய்து, இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் 1,55,296 பைக்குகளை விற்பனை செய்து மூன்றாம் இடம் பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் 1,48,937 பைக்குகளையும், யமஹா 27,263 பைக்குகளையும் விற்பனை செய்துள்ளன. சுஸ¨கி நிறுவனம் 25,367 பைக்குகளை விற்பனை செய்துள்ளது!

ஆகஸ்ட் முதல் புத்தம் புது ஸ்விஃப்ட்!

மாருதி சுஸ¨கி நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரின் தயாரிப்பை நிறுத்தி விட்டது. புதிய ஸ்விஃப்ட் ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால், பழைய ஸ்விஃப்ட்டை எந்த டீலரிடமும் இப்போது பார்க்க முடியாது. புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டாலும் புதிய ஸ்விஃப்ட்டுக்கும், பழைய ஸ்விஃப்ட்டுக்கும் வெளித் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், காரின் உள்பக்கத்தை, குறிப்பாக சென்டர் கன்ஸோலை மாற்றியிருக்கிறது மாருதி. பெட்ரோல் மாடலுக்கு 1.2 லிட்டர் கே சீரிஸ் இன்ஜினும், டீசல் மாடலுக்கு 1.3 மல்டிஜெட் இன்ஜினும் பழையபடியே எந்த மாற்றமும் பெறாமல் இடம் பிடித்திருக்கின்றன!

மீண்டும் மாருதி 800

நானோ மற்றும் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் ஹூண்டாயின் 800 சிசி சின்ன கார்

மோட்டார் நியூஸ்

ஆகியவற்றுக்குப் போட்டியாக, மீண்டும் மாருதி 800 காரை களம் இறக்குகிறது மாருதி சுஸ¨கி. 25 ஆண்டுகளாக தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் காணாமல் இருக்கும் 800 காருக்கு, புத்தம் புது வடிவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாரத் ஸ்டேஜ்-4 எமிஷன் அளவுகோலுடன் தற்போது ஆல்ட்டோவில் இருக்கும் 796 சிசி இன்ஜின்தான் புதிய 800 காரிலும் பொருத்தப்பட இருக்கிறது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த காரை, முதலில் 'சர்வோ’ என்ற பெயரில் வெளியிடத் திட்டமிட்டிருந்தது மாருதி. ஆனால், மாருதி-800 கார் இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது என்பதால், புறநகர் மற்றும் கிராமங்களை மையமாகக் கொண்டு களமிறங்கும் இந்த காருக்கு, மீண்டும் 'மாருதி 800’ என்றே பெயரிட முடிவு செய்துவிட்டதாம் மாருதி சுஸ¨கி.

புதிய 800 காரை 2 லட்ச ரூபாய்க்குள் அறிமுகப்படுத்த இருக்கிறது மாருதி. புதிய 800 அடுத்த ஆண்டு 2012-ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின்போது அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது!  வருகிறது நானோ டீசல்!

டீசல் கார்களுக்கான 'டிமாண்ட்’ அதிகரித்துக்கொண்டே போவதால், நானோ டீசல் காரை அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருக்கிறது டாடா. டர்போ சார்ஜ்டு, 2 சிலிண்டர் 700 சிசி இன்ஜின் கொண்ட இந்த டீசல் நானோ, எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்குடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. நானோ டீசல் அதிகபட்சமாக 40 தீலீஜீ சக்தியை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். மிகவும் சின்ன காருக்குள் இடம் பிடித்திருக்கும் இந்த சிறிய டீசல் இன்ஜின் அதிக மைலேஜைத் தரும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும். நானோ டீசலின் ஆரம்ப மாடல் விலை 2 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது!

விரைவில் புதிய ஆர் 15

மோட்டார் நியூஸ்

ஸ்டைலில் பல மாற்றங்களைக் கண்டிருக்கும் புதிய ஆர்-15 பைக், செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய முன் பக்க ஃபேரிங், ஸ்பிளிட் சீட்ஸ், நீண்டிருக்கும் பைக்கின் பின் பக்கம், டயரை இறுக்கி அணைக்கும் டயர் ஜக்கர், ஸ்டைலான பின் பக்க நம்பர் பிளேட் என புதிய ஆர்-15 பல மாற்றங்களைக் கண்டுள்ளது. புதிய ஆர்-15 பைக்கின் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 149.8 சிசி இன்ஜின்தான். ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் ஆர்-15 பைக்கின் விலையைவிட, புதிய ஆர்-15 பைக்கின் விலை கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் குறைவாக இருக்கும் என்பதுதான் ஆர்-15 ரசிகர்களுக்கான நற்செய்தி!

சென்னையில் கவாஸாகி 650!

மோட்டார் நியூஸ்

50 வயதான சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் தான் கவாஸாகி நின்ஜா-650 பைக்கின் முதல் வாடிக்கையாளர். ''என்கிட்ட பைக்குகள் நெறைய இருந்தாலும் அதை ஓட்டாமலேயே இருந்தேன். எப்போதும் கார்தான். ஒரு நாள், 'ஏன் நாம பைக் ஓட்டாமலே இருக்கோம்’னு தோணுச்சு. அப்போ பைக் எடுத்தவன்தான். இன்னைக்கு வரை விடவே இல்லை. என்கிட்ட கவாஸாகி நின்ஜா 250-ஆர் பைக்கும் இருக்கு. ஆனா, டூர் போகும்போது அதை யூஸ் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதனால, இப்போ 650-ஆர் நின்ஜாவும் எனக்குச் சொந்தம்!'' என்று சிரிக்கிறார் சீனிவாசன்!

- அ.இராமநாதன்

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism