Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சந்துரு,  பொன்னமராவதி.

எஸ்யூவி வாங்க வேண்டும். டாடா சஃபாரி, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ - இரண்டில் எதை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஸ்கார்ப்பியோவைவிட சொகுசான இருக்கைகளையும், அதிக இட வசதியையும் கொண்டிருக்கிறது டாடா சஃபாரி. டிக்கியில் பொருட்கள் வைக்கவும் சஃபாரியில் அதிக இடவசதி இருக்கிறது. புதிய டாடா சஃபாரி 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்தால், புதிய டாடா சஃபாரியை வாங்கலாம்!

சுமேஷ், சென்னை-89.

நான் 2010 மாடல் அப்பாச்சி ஆர்.டி.ஆர்-180 பைக் வைத்திருக்கிறேன். அப்பாச்சியில் புதிதாக வெளிவந்திருக்கும் ஏபிஎஸ் பிரேக்ஸை மட்டும் எடுத்து, என்னுடைய பைக்கில் பொருத்த முடியுமா? சாதாரண அப்பாச்சியைவிட அப்பாச்சி ஏபிஎஸ் பைக்கின் விலை 8,000 ரூபாய்தான் அதிகம். இந்தச் செலவு செய்ய நான் தயார்!

பழைய பைக்கில் ஏபிஎஸ் சிஸ்டத்தைப் பொருத்த நிறைய செலவாகும். ஏபிஎஸ் சிஸ்டத்தைப் பொருத்த, பைக்கில் பல்வேறு பாகங்களை மாற்றி மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும். இது வீண் செலவு!

கார்த்திக், திருச்சி-18.

முதன்முறையாக கார் வாங்குகிறேன். என்னுடைய பட்ஜெட் 5-6 லட்சம். நான் தினமும் நகருக்குள் 10-15 கி.மீ-யும், மாதத்தில் சுமார் 200 கி.மீ நெடுஞ்சாலையிலும் பயணம் செய்வேன். பெட்ரோல், டீசல், எல்பிஜி - இந்த மூன்றில் எந்த மாடலை வாங்கலாம்?

மாதத்துக்கு 600 கி.மீ-தான் பயணம் செய்வீர்கள் என்பதாலும், எல்பிஜி எரிபொருளை நீங்கள் தேடி அலைய வேண்டும் என்பதாலும், பெட்ரோல் காரை வாங்குவதே நல்லது. எல்பிஜிக்காக நீங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பட்ஜெட்டுக்குச் சரியான கார் மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல். ஆகஸ்ட் மாதம் புதிய ஸ்விஃப்ட் வெளிவர இருக்கிறது. டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்!

பரத், காரைக்குடி.

என்னுடைய பட்ஜெட் இரண்டு லட்சம். பழைய கார்தான் வாங்க இருக்கிறேன். நான்கு பேர் பயணிக்கக் கூடிய சின்ன கார் வேண்டும். மாருதி ஜென் டீசல், டாடா இண்டிகா டீசல், மாருதி எஸ்டீம், ஃபோர்டு ஐகான் டீசல், மாருதி ஆல்ட்டோ ஆகிய கார்கள் 2 லட்ச ரூபாய் பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன. இதில் எந்த காரை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

மாருதி ஜென் டீசல், டாடா இண்டிகா டீசல், ஃபோர்டு ஐகான் டீசல் ஆகிய கார்களை வாங்காமல் தவிர்ப்பதே நல்லது. விலை குறைவாக இருக்கிறது என்று நீங்கள் வாங்கிவிட்டு, அதிக பராமரிப்புச் செலவால் அவதிப்பட வேண்டியதுஇருக்கும். 2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் பழைய வேகன்-ஆர் மற்றும் சான்ட்ரோ கார்களும் கிடைக்கும். வேகன்-ஆர், சான்ட்ரோ ஆகிய இரண்டு கார்களின் பராமரிப்புச் செலவுகளுமே குறைவு. இரண்டையும் ஓட்டிப் பார்த்துவிட்டு உங்கள் டிரைவிங் ஸ்டைலுக்கு சரியாக இருக்கும் காரை வாங்குங்கள்!

அருண்குமார், தஞ்சாவூர்.

ஹீரோ ஹோண்டா ஹங்க், ஹோண்டா யூனிகார்ன் டேஸ்லர் - இரண்டு பைக்குகளில் எந்த பைக்கை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

இரண்டு பைக்குகளிலும் இருப்பது ஒரே இன்ஜின்தான். இருப்பினும், நீங்கள் ஹோண்டா டேஸ்லரை வாங்குவதே நல்ல சாய்ஸ். மார்க்கெட்டில் புதிய பைக் என்பதோடு, பில்டு குவாலிட்டியிலும் ஹங்கைவிட சிறந்த பைக் டேஸ்லர்!

வாசு, புதுக்கோட்டை.

நான் பஜாஜ் பல்ஸர் 220 பைக் வாங்கப் போகிறேன். ஆனால், மோட்டார் விகடனில் புதிய பல்ஸர் வர இருப்பதாகப் படித்தேன். புதிய பல்ஸர் எப்போது வரும். அதற்காகக் காத்திருக்கலாமா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

புதிய பஜாஜ் பல்ஸர் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய பல்ஸர், கேடிஎம் பைக்கின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட இருக்கிறது. இந்த பைக்குக்காக நிச்சயம் நீங்கள் காத்திருக்கலாம்!

உத்தமகுமார், ஊத்தங்கரை

பழைய மாருதி ஆல்ட்டோ வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். திருச்சியில் உள்ள பழைய கார் டீலர் 58 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிய 2000-ம் ஆண்டு ஆல்ட்டோ எல்.எக்ஸ் மாடலின் விலை 1.3 லட்சம் என்கிறார். விலை ஓ.கே.தானா?

டீலர் சொல்லும் விலை மிகவும் அதிகம். 58,000 கி.மீ. ஓடிய, 10 ஆண்டுகள் பழைய ஆல்ட்டோவை 70-80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவதுதான் சரியாக இருக்கும்!