Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

நான் யமஹா FZ-16 வைத்திருக்கிறேன். இதுவரை 72,000 கி.மீ ஓட்டியிருக்கிறேன். இப்போது, திடீர் திடீர் என இன்ஜின் அடைத்து பைக் ஆஃப் ஆகிவிடுகிறது. மெக்கானிக்குகளிடம் கொடுத்தபோது, கார்புரேட்டரை கிளீன் செய்துகொடுத்தார்கள். அப்படி இருந்தும் பிரச்னை தீரவில்லை. என்ன செய்யலாம்?

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

இந்தப் பிரச்னைக்கு கார்புரேட்டர் காரணம் அல்ல. இன்ஜின் போர் மற்றும் பிஸ்டனில் பிரச்னை இருக்கும். யமஹா சர்வீஸ் சென்டரில் கொடுத்து, இன்ஜின் மற்றும் போர்-ஐ மாற்றச் சொல்லுங்கள். தனியார் மெக்கானிக்குகள் சிலர், ரீ-போர் செய்து பொருத்தலாம் என்று சொல்வார்கள். ஆனால், ரீ-போர் செய்தால், மீண்டும் பிரச்னைகள் தொடர வாய்ப்பு உண்டு. மேலும் பைக் 70,000 கி.மீ வரை ஓடிவிட்டது என்பதால், போர் மற்றும் பிஸ்டனைப் புதிதாக மாற்றிவிடுவதுதான் நல்லது. இதற்கு 8-10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

மோட்டார் கிளினிக்

என்னுடைய பட்ஜெட் 6 லட்சம். நான் மாதத்துக்கு அதிகபட்சம் 500 கி.மீ தூரம்தான் பயணம் செய்வேன். மாருதி ஸ்விஃப்ட் டிசையர் அல்லது ஹூண்டாய் ஐ20 இரண்டு கார்களை இறுதி செய்துவைத்திருக்கிறேன். மெயின்டனன்ஸ் செலவுகள் குறைவாக இருக்க வேண்டும். இரண்டில் எதை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

மாதத்துக்கு 500 கி.மீ தூரம்தான் பயணம் செய்வீர்கள் என்றால், பெட்ரோல் காரே போதுமானது. மாருதி டிசையரின் விலை உயர்ந்த பெட்ரோல் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 7.53 லட்சம். இதுவே, விலை உயர்ந்த ஹூண்டாய் ஐ20 (பெட்ரோல் மாடல்) விலை 7.89 லட்சம். டிசையரைவிட ஹூண்டாய் ஐ20 விலை அதிகம் என்பதோடு, ஐ20 வெறும் ஹேட்ச்பேக் கார் மட்டுமே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டிசையரில் பொருட்கள் வைக்க அதிக இடம் உண்டு என்பதோடு... சர்வீஸ் தரத்திலும், குறைந்த மெயின்டனன்ஸ் செலவிலும் மாருதியே சிறந்த கார் என்பதால், நீங்கள் டிசையரையே வாங்கலாம்.

மோட்டார் கிளினிக்

ஹோண்டா ஜாஸ் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதாகப் படித்தேன். இது எப்போது விற்பனைக்கு வரும்? டீசல் இன்ஜின் உண்டா?

மோட்டார் கிளினிக்

ஹோண்டா ஜாஸ் அடுத்த ஆண்டு துவக்கத்தில், அதாவது பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின்போது விற்பனைக்கு வரவிருக்கிறது. இதில், பெட்ரோல் இன்ஜினோடு அமேஸில் இருக்கும் டீசல் இன்ஜின்கொண்ட மாடலும் விற்பனைக்கு வரும். இதன் விலை 5 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும்.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் முதன்முறையாக கார் வாங்கும் திட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வீட்டில் இருந்து அலுவலகம் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால், தினமும் குறைந்தது 50 கி.மீ தூரம் பயணிப்பேன். மாதத்துக்கு ஒருமுறை நிச்சயம் வெளியூருக்கு குடும்பத்தினருடன் சென்றுவருவேன். அதனால், டீசல் கார்தான் எனக்குச் சரியாக வரும் எனத் தோன்றுகிறது. ஆனால், என்னுடைய பட்ஜெட் அதிகபட்சம் 7 லட்சம் ரூபாய்தான். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 டீசல் வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்

ஹூண்டாயின் புதிய டீசல் காரான கிராண்ட் ஐ10 நல்ல சாய்ஸ்தான். இதன் வசதிகள் அதிகம் நிறைந்த மாடலின் சென்னை ஆன்ரோடு விலை 7,54,000 ரூபாய். கிராண்ட் ஐ10 காருக்குப் போட்டியான ஃபோர்டு ஃபிகோ காரின் சென்னை விலை 7.39 லட்சம். கிராண்ட் ஐ10 காரில், ஃபோர்டு ஃபிகோவைவிட சிறப்பம்சங்கள் அதிகம் என்றாலும், பெர்ஃபாமென்ஸிலும் தரத்திலும் ஃபிகோவே சிறந்த கார். ஃபோர்டு ஃபிகோவில் முக்கிய வசதியாக, பவர் விண்டோ வசதி, பின் பக்கக் கண்ணாடிகளில் இல்லை என்பதைத் தாண்டி பெரிய வசதிக் குறைபாடுகள் இல்லை. இட வசதியிலும் குறைவு இல்லை. மைலேஜும் லிட்டருக்கு 15 கி.மீ வரை தரும் என்பதால், போர்டு ஃபிகோவை வாங்கலாம்.

மோட்டார் கிளினிக்

நான் தற்போது நிஸான் மைக்ரா கார் வைத்திருக்கிறேன். இதைக் கொடுத்துவிட்டு புதிதாக வேறு கார் வாங்கலாம் என திட்டம். ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ வாங்கலாமா அல்லது ஃபோர்டு எக்கோஸ்போர்ட் வாங்கலாமா எனக் குழப்பமாக இருக்கிறது. நான் செடான் காரையும், மினி எஸ்யூவி காரையும் ஒப்பிடுகிறேன் என்பது புரிகிறது. ஆனால், என் குழப்பத்தைத் தீர்த்துவையுங்கள்?

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

தற்போது இந்திய ஆட்டோமொபைல் டிரெண்ட்டே மினி எஸ்யூவி/எம்யூவி கார்கள்தான். சில வருடங்களுக்கு முன்பு ஹேட்ச்பேக் கார்களுக்கு இருந்த மவுசு, இப்போது மினி எஸ்யூவிக்களுக்கு வந்துவிட்டது. ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஸ்டைலான எஸ்யூவி கார். டீசல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருப்பதோடு, மைலேஜும் அதிகம். எக்கோஸ்போர்ட் டீசல், நகருக்குள் 13.3 கி.மீ, நெடுஞ்சாலையில் 18.6 கி.மீ மைலேஜ் தருகிறது. ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவோடு ஒப்பிடும்போது, எக்கோஸ்போர்ட்டைவிட 15bhp சக்தி அதிகம்கொண்ட கார் வென்ட்டோ. இரண்டு கார்களிலுமே 2,000 ஆர்பிஎம் வரை டர்போ லேக் உண்டு. ஆனால், பெர்ஃபாமென்ஸில் அதிரடியான கார் வென்ட்டோதான். 0-100 கி.மீ வேகத்தைத் தொட எக்கோஸ்போர்ட்டைவிட இது 2 விநாடிகள் குறைவாகவே எடுத்துக் கொள்கிறது. ஆனால், எக்கோ ஸ்போர்ட்டைவிட 1 கி.மீ குறைவாக மைலேஜ் தருகிறது வென்ட்டோ. இரண்டு கார்களிலுமே பின் பக்க இருக்கைகளில் இரண்டு பேர்தான் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். இங்கே எந்த கார் வாங்குவது என்கிற முடிவு, வெறும் தோற்றத்தைப் பொருத்ததுதான். அதிரடியான ரோடு பிரெசன்ஸ் கொண்ட எஸ்யூவி வேண்டுமா? அல்லது சிம்பிளான, அதே சமயம் ஸ்டைலான செடான் கார் வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மோட்டார் கிளினிக்

தற்போது விற்பனைக்கு வரும் 250சிசி பைக்குகளில் இரிடியம் ஸபார்க் பிளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இரிடியம் ஸ்பார்க் பிளக்குகள் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

சாதாரண ஸ்பார்க் பிளக்குகள் நிக்கல் ஐயான் அல்லது க்ரோமியத்தால் செய்யப்பட்டிருக்கும். இரிடியம் என்பது, இயற்கையிலேயே மிகவும் வலுவான தாது. இது, அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடியது. இரிடியம் ஸ்பார்க் பிளக், சீக்கிரத்தில் மின்சாரத்தைக் கடத்தி இன்ஜினை ஆன் செய்வதோடு, குறைந்த வோல்ட்டிலேயே சட்டென இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் வல்லமை படைத்தது. மேலும், இரிடியம் ஸ்பார்க் பிளக்குகளில் மிஸ் ஃபையர் ஆவது மிகவும் அரிது. இரிடியம் ஸ்பார்க் பிளக்தான் சிறந்தது என்பதற்காக, ஸ்பௌண்டர் பைக்கில் எல்லாம் இதைப் பொருத்துவதால், எந்தப் பயனும் இல்லை. அதிக சிசி திறன்கொண்ட பவர்ஃபுல் பைக்குகளுக்கு இரிடியம் ஸ்பார்க் பிளக் பொருத்துவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.