Published:Updated:

மயக்குமா மைலேஜ்?

டெஸ்ட் ரிப்போர்ட் - பஜாஜ் டிஸ்கவர் 100எம்

பஜாஜின் டிஸ்கவர் பைக் வரிசையில், புதிதாகச் சேர்ந்திருக்கிறது டிஸ்கவர் 100 எம். இதில் 'எம்’ என்ற எழுத்து மைலேஜைக் குறிக்கிறது. டிஸ்கவர் பைக்குகள் கம்யூட்டர் செக்மென்ட்டில் நல்ல பெயர் எடுத்தவை. ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ் மற்றும் மதிக்கத்தக்க மைலேஜ் என ஒரு ஆல் ரவுண்டர் கம்யூட்டர் பைக்குக்கான அத்தனை அம்சங்களும் டிஸ்கவர் பைக்குகளில் உள்ளன. 100 சிசி செக்மென்ட், போட்டி நிறைந்தது. 100 சிசி வாங்குபவர்கள் பெரும்பாலும் மைலேஜை எதிர்பார்த்துத்தான் வாங்குகின்றனர். இப்போது பஜாஜ் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய '100-எம்’ பைக்கின் பெயரிலேயே 'மைலேஜ்’ இருக்கிறது.

மயக்குமா மைலேஜ்?

 டிசைன் - இன்ஜினீயரிங்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 ##~##

ஏற்கெனவே டிஸ்கவர் குடும்பத்தில் உள்ள மற்ற பைக்குகள் போலத்தான் 100 எம் பைக்கும் இருக்கிறது. மற்ற டிஸ்கவர் பைக்குகளுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பதே சிரமம்தான். அதனால், மற்ற டிஸ்கவர் பைக்குகளைப் போலவே இதுவும் பார்க்க ஸ்டைலாக உள்ளது. இன்னொரு டிஸ்கவர் பைக்கான 100T பைக்கைப் போலவே இதிலும் பைலட் லைட்ஸ் கொண்ட ஹெட்லைட் உண்டு. ஸ்பீடோ மீட்டர் அனலாக் முறையில் தான் இயங்குகிறது. ஃப்யூல் மீட்டர், வார்னிங் லைட்டுகள் வழக்கமான அமைப்பிலேயே உள்ளன. ஸ்விட்சுகள் பஜாஜ் பைக்குகளுக்கே உரிய ஃபீலுடன் உள்ளன. பாஸ் லைட் ஃபளாஷர் வசதியும் உள்ளது. ஹேண்டில்பாரில் மாட்டப்பட்டு இருக்கும் ரியர்வியூ மிரர்கள் பின் பக்கம் சாலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. 9.5 லிட்டர் ஃப்யூல் டேங்க் ஸ்டைலாக உள்ளது. தொடைகளுக்கும் நல்ல சப்போர்ட் கொடுக்கிறது. 100T மற்றும் 125 ST பைக்குகளில் இருப்பதுபோல இல்லாமல் மிகவும் தட்டையான சீட்டை 100 எம் பைக்கில் கொடுத்துள்ளது பஜாஜ். மற்றபடி, பைக்கின் ஒட்டுமொத்தத் தரத்திலும், பில்டு குவாலிட்டியிலும் பெரிய குறைகள் எதுவும் இல்லை.

இன்ஜின், கியர்பாக்ஸ், பெர்ஃபாமென்ஸ்

100 எம் பைக்கில் 102 சிசி, ட்வின் ஸ்பார்க், 4 வால்வ் இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜினை உயிர்பெற வைக்க, பைக்கில் கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என இரண்டுமே உண்டு. கோல்டு ஸ்டார்ட் பிரச்னை அதிகமாக இல்லை. கார்புரேட்டர் மூலமாக எரிபொருளை எடுத்துக்கொள்ளும் இந்த இன்ஜின் நன்றாகக் குளிர்வதற்காக, காருகேட்டட்(Corrugated Fins)ஃபின்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 9.3 bhp சக்தியை 8,000 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யும் இந்த இன்ஜின், 6,000 ஆர்பிஎம்-ல் 0.92 kgm டார்க்கை அளிக்கிறது.

மயக்குமா மைலேஜ்?

சிட்டி டிராஃபிக்கில் இதன் லைட்டான கிளட்ச் வசதியாக இருக்கிறது. ஆனால், இதன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆல்-அப் முறையில் ஷிஃப்ட் ஆவது சற்று சிரமமாக உள்ளது. 1-டவுன், ரெஸ்ட்-அப் முறையில் கொடுத்திருக்கலாம்.

குறைந்த ஆர்பிஎம்-ல் சிறப்பாக இயங்குவதுதான் இந்த இன்ஜினின் பலமே! நகர டிராஃபிக்குக்கு டியூன் செய்யப்பட்டு இருக்கும் இந்த இன்ஜின், டாப் கியரிலும் குறைந்த ஆர்பிஎம்-ல் நன்றாக இழுக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தை 7.45 விநாடிகளில் கடந்து, மணிக்கு 97 கி.மீ டாப் வேகத்தை எட்டுகிறது பஜாஜ் 100எம்.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

பஜாஜ் டிஸ்கவர் 100 எம் பைக்கின் எடை 115 கிலோ. பைக்கின் ரைடிங் பொசிஷன் நேராக உட்காரும் வகையில் இருந்தாலும், மணிக்கட்டில் அழுத்தம் தெரியவில்லை. ஆனால், பஜாஜ் இந்த பைக்குக்குக் கொடுத்திருக்கும் இருக்கையின் சப்போர்ட் போதுமானதாக இல்லை. மற்ற டிஸ்கவர் பைக்குகள் போல உட்கார இதன் இருக்கை வசதியாகவே இல்லை.

பைக்கின் காம்பேக்ட்டான டிசைன் நகர டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. பைக்கின் கையாளுமை ஓகே. முன் பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின் பக்கம் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்ஸார்பரும் உள்ளது. ஈரமான சாலைகளிலும் இந்த பைக்கின் டயர்கள் நல்ல கிரிப்பைத் தருகின்றன. பிரேக்குகள் நல்லவிதத்தில் இயங்குகின்றன. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் இருந்து பூஜ்யத்துக்கு 19.35 விநாடிகளில் வந்து நிற்கிறது பஜாஜ் 100எம்.

மயக்குமா மைலேஜ்?

மைலேஜ்

பஜாஜின் டிஸ்கவர் பைக்குகள் திருப்திகரமான மைலேஜுக்குப் பெயர் பெற்றவை. லிட்டருக்கு 84 கி.மீ மைலேஜ் கொடுக்கும் என்று பஜாஜ் சொன்னாலும், நமது ரோடு டெஸ்ட்டில் டிஸ்கவர் 100 எம், சிட்டி டிராஃபிக்கில் 57 கி.மீ மைலேஜ் கொடுத்தது. நெடுஞ்சாலையில் இது கொடுத்த மைலேஜ் லிட்டருக்கு 61 கி.மீ.

மயக்குமா மைலேஜ்?
மயக்குமா மைலேஜ்?
மயக்குமா மைலேஜ்?

100 சிசி செக்மென்ட்டில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் பைக்காக இருக்கிறது பஜாஜ் டிஸ்கவர் 100 எம். பைக்கின் டிசைன், கட்டுமானத் தரம், வசதிகள் எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. இன்ஜின், சிட்டி டிராஃபிக்குக்கு ஏற்ப நன்றாக டியூன் செய்யப்பட்டுள்ளது. மைலேஜும் குறை சொல்லும் அளவுக்குக் குறைவாக இல்லை. பைக்கின் பெரிய மைனஸ், இதன் இருக்கைதான். இதில் அதிக நேரம் அமர்ந்து ஓட்டுவது சிரமமாக உள்ளது. மற்றபடி பைக்கில் எந்தக் குறையும் இல்லை என்றாலும், பஜாஜ் டிஸ்கவர் 100 எம் மாடலைவிட, இந்த செக்மென்ட்டில் சில நல்ல பைக்குகள் இருக்கின்றன என்பதே உண்மை!

மயக்குமா மைலேஜ்?
மயக்குமா மைலேஜ்?