Published:Updated:

ஷுமேக்கரை முந்திய வெட்டல்!

ஷுமேக்கரை முந்திய வெட்டல்!

 ##~##

மைக்கேல் ஷூமேக்கருக்கு அடுத்து, ஃபார்முலா-1 ரேஸ் உலகம் கண்டெடுத்திருக்கும் சாதனை மன்னன், செபாஸ்ட்டியன் வெட்டல். 26 வயதே ஆன வெட்டல், தொடர்ந்து நான்காவது முறையாக ஃபார்முலா-1 சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த ஆண்டு, தொடர்ந்து எட்டு ரேஸ்களில் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறார்.

 ஃபார்முலா-1 ரேஸின் 64-வது ஆண்டு இது. இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய ஃபார்முலா-1 சீஸன், மொத்தம் 20 நாடுகளில் 20 சுற்றுகளாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 11 அணிகள், 22 ரேஸ் வீரர்கள் மோதிய உலகின் உச்சபட்ச கார் ரேஸ் திருவிழா இது. இதில், நம் நாட்டில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற 17-வது ரேஸ் போட்டியில் வெற்றிபெற்று, இந்த ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை 'சீல்’ செய்தார் வெட்டல். ஜெர்மனியைச் சேர்ந்த செபாஸ்ட்டியன் வெட்டலை, மைக்கேல் ஷூமேக்கரின் வாரிசு என்றே சொல்லலாம். 2007-ம் ஆண்டு உலகின் இளம் ரேஸ் வீரராக ஃபார்முலா-1 போட்டிக்குள் நுழைந்த வெட்டல், முதலில் பிஎம்டபிள்யூ அணியில் இருந்தார். அதன் பிறகு, ரெட்புல் அணிக்குள் நுழைந்த வெட்டல் ஃபெராரி, பென்ஸ், ரெனோ அணிகளை எல்லாம் தனது வேகத்தால் அதிரவைத்தார். கத்துக்குட்டி அணியாக இருந்த ரெட்புல் அணிக்கு, 2009-ம் ஆண்டு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தார் வெட்டல். சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாம் இடமும் பிடித்தார். 2010-ம் ஆண்டு முதல், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுவரும் வெட்டல், ஃபார்முலா-1 அரங்கில் இன்னும் பல சாதனைகளைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஷுமேக்கரை முந்திய வெட்டல்!

இந்த ஆண்டு, இதுவரை நடைபெற்ற 19 ரேஸ்களில் 12 ரேஸ்களில் வெற்றிபெற்றிருக்கிறார் வெட்டல். ஒரே ஆண்டில் தொடர்ந்து ஏழு வெற்றிகள் பெற்ற மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையையும் முறியடித்திருக்கிறார் வெட்டல். ஃபெர்னாண்டோ அலான்சோ, கிமி ராய்க்கோனன், லூயிஸ் ஹாமில்ட்டன் ஆகிய முன்னாள் சாம்பியன்கள் மூவரையுமே விரக்தியின் உச்சத்துக்குத் தள்ளியுள்ளார் வெட்டல். எவ்வளவு முயன்றும் இவர்களால் வெட்டலிடம் இருந்து சாம்பியன் பட்டத்தைத் தட்ட முடியவில்லை. தகுதிச் சுற்றுப் போட்டிகளில் மற்ற வீரர்கள் வெற்றிபெற்றாலும், ரேஸின் இறுதியில் வெட்டல் பக்கமே வெற்றி இருந்தது.

ஷுமேக்கரை முந்திய வெட்டல்!

வெட்டலின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, அவரது ரெனோ இன்ஜின். வெட்டல் ஓட்டும் ரெட்புல் அணியின் காருக்குள் இருப்பது ரெனோவின் 2.4 லிட்டர் ஆர்பி-9 இன்ஜின். அதிகபட்சம் 750 தீலீஜீ சக்தியை வெளிப்படுத்தும் இதன் மொத்த எடை, 95 கிலோ மட்டுமே. எல்லா ரேஸ்களிலுமே ஃபெராரி, பென்ஸ் இன்ஜின்களைவிட இந்த இன்ஜினின் வேகம் 1 விநாடிக்கும் மேல் வேகமாக இருந்ததால், வெட்டலுடன் யாராலும் போட்டி போட முடியவில்லை.

வெட்டலுக்குக் காத்திருக்கின்றன இன்னும் பல மணி மகுடங்கள்!

சார்லஸ்