Published:Updated:

MADE IN இந்தியா!

MADE IN இந்தியா!

 ##~##

லகம் முழுக்க, மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த பைக், ஹார்லி டேவிட்சன். இதன் ஸ்டைலுக்கும், சத்தத்துக்கும் இணையான வேறொரு பைக் இதுவரை வரவில்லை. 2009-ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்த ஹார்லி டேவிட்சன், மெள்ள மெள்ள தனது விற்பனையையும் உயர்த்திக் கொண்டே வருகிறது. 

ஹரியானா மாநிலத்தில் தொழிற்சாலை அமைத்திருக்கும் ஹார்லி, முதன்முறையாக இங்கே மோட்டார் சைக்கிள்களை முழுவதுமாகத் தயாரிக்கத் துவங்கியிருக்கிறது. அதில், முதல் பைக்காக ஹார்லி டேவிட்சன் 'ஸ்ட்ரீட் 750’ பைக் விற்பனைக்கு வர இருக்கிறது. முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட இருப்பதால், இதன் விலையும் குறைவாக இருக்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த பைக்கின் விலை 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
MADE IN இந்தியா!

இந்தியாவில் இதற்கு முன்பு, இது போன்ற க்ரூஸர் ஸ்ட்ரீட் பைக்கை யாரும் தயாரித்தது இல்லை. ஃபேரிங் இல்லாத ஒற்றை ஹெட்லைட், ஹார்லி டேவிட்சனுக்கான தனித்துவத்தைக் கொடுக்கிறது. வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் டயலில் அனலாக் ஸ்பீடோ மீட்டரோடு, டிஜிட்டல் ட்ரிப் மீட்டரும் உண்டு. இரட்டை சைலன்ஸர்கள் பைக்கின் பின் பக்கத்துக்குப் பிரம்மாண்டம் சேர்க்கின்றன. ஹார்லி 750 பைக் 218 கிலோ எடைகொண்டது என்பதால், கொஞ்சம் 'கன’வானாக இருந்தால் மட்டுமே இதை ஹேண்டில் செய்ய முடியும்.

MADE IN இந்தியா!

1,511 மிமீ நீள வீல்பேஸ் கொண்ட இந்த பைக்கின் இருக்கை, சொகுசு குஷன்போல இருக்கிறது. கால்களை முன்னால் நீட்டிவைத்து ஓட்டும் வகையில் ஃபுட் ரெஸ்ட், பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்கள் முன்னால் தள்ளிவைக்கப்பட்டு இருக்கின்றன. வெளிநாடுகளில் விற்கப்படும் பைக்குகளைவிட இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹார்லி 750 பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 2 மிமீ உயர்த்தப்பட்டிருக்கிறது. முன் பக்கம் 100/80 செக்ஷன் டயர்களும், பின் பக்கம் அகலமான 140/75 செக்ஷன் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. க்ரூஸர் பைக் என்றாலும் அலாய் வீல் கொண்ட இந்த பைக்கில், இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

MADE IN இந்தியா!

இந்த பைக் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இதைச் செலுத்துவது வி-ட்வின், 749 சிசி, ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜின். இன்ஜின் பவரை பின் பக்க வீலுக்கு எடுத்துச் செல்லும் டிரைவ் செயினுக்குப் பதிலாக, ஹார்லியின் வழக்கமான 'டிரைவ் பெல்ட்’ மூலம் கடத்தப்படுகிறது. இது, அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தைத் தொடும். 750 சிசி திறன்கொண்ட இந்த பைக், லிட்டருக்கு 20 கி.மீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம்.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் பைக்கான ஸ்ட்ரீட் 750, விற்பனையில் தடதடக்கும்!

MADE IN இந்தியா!
MADE IN இந்தியா!