Published:Updated:

ஜாஸ் பாஸ்?

புதிய ஹோண்டா ஜாஸ் - புது வரவு

 ##~##

ஹோண்டா, ஜாஸ் காரை அறிமுகப்படுத்தியபோது... அனைவரிடமும் 'நல்ல கார்’ எனப் பெயர் வாங்கியது. ஆனால், இது எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை. இந்திய கார் வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தை மிகச் சரியாக வெளிப்படுத்திய கார் என்றால், அது ஹோண்டா ஜாஸ்தான்.

 எவ்வளவு நல்ல காராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், விலை அதிகமாக இருந்தால், வாங்க முன்வருபவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். இதை உணர்ந்த ஹோண்டா, பின்னர் ஜாஸ் காரின் விலையைக் குறைத்தும் விற்பனை குறைவாகவே இருந்தது. மேலும், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது அமேஸில் இருக்கும் டீசல் இன்ஜினோடும், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினோடும் புதிய ஜாஸ் காரை, நம் நாட்டில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஹோண்டா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜாஸ் பாஸ்?

ராஜஸ்தானில் உள்ள தனது தபுகாரா தொழிற்சாலையில், புதிய ஜாஸ் தயாரிக்கப்பட இருக்கிறது. மேலும், இப்போது அறிமுகமாகியிருக்கும் புதிய சிட்டி காரின் பிளாட்ஃபார்ம்தான் ஜாஸுக்கும். புதிய ஜாஸின் அடிப்படை வடிவம் பழைய ஜாஸ் காரைப் போலத்தான் உள்ளது. எம்பிவியும், ஹேட்ச்பேக்கும் கலந்த மாதிரி இருக்கும் இதன் டிசைன், நம் ஊர் மக்கள் மனதில் நன்றாகவே பதிந்த டிசைன். ஸ்டைலிங் விஷயத்தில் புதிய ஜாஸ் இப்போது மேலும் ஸ்போர்ட்டியாக உள்ளது. ஹோண்டாவின் புதிய 'பி’ டிசைன் கொள்கை, ஜாஸ் காரில் சிறப்பாக இழைந்தோடியிருக்கிறது. காரின் பக்கவாட்டில் இருக்கும் திடமான கேரக்டர் லைன், காருக்கு நல்ல ஸ்போர்ட்டியான உருவத்தைத் தருகிறது. கதவின் கைப்பிடிகள் இப்போது புல்-டைப் முறையில் இயங்குகின்றன. காரின் கேபினில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், முற்றிலும் புதிது. முன் பக்க இருக்கைகள் வசதியாகவும் சொகுசாகவும் இருக்கின்றன. ஜப்பானில் விற்கப்படும் ஜாஸில் பெரிய மல்ட்டி மீடியா ஸ்க்ரீனும் டிஜிட்டல் கிளைமேட் கன்ட்ரோலும் இருந்தாலும், நம் ஊரில் இந்த வசதிகள் வர வாய்ப்பு இல்லை. காரின் உள்பக்கம் பயன்படுத்தியிருந்த பிளாஸ்டிக்குகள், சற்று சுமாராக இருப்பதுபோல இருந்தது. ஒருவேளை இந்த விஷயத்தில் சற்று விலைக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கலாமே என ஹோண்டா நினைத்திருக்கலாம். பழைய ஜாஸில் இருந்ததுபோலவே இதிலும் பின் பக்க இருக்கை மிக வசதியாக இருக்கிறது. கால் வைக்க இட வசதி தாராளம். தொடைகளுக்கு இருக்கும் சப்போர்ட்டைக் குறை சொல்ல முடியவில்லை. மூன்று நபர்கள் அமரலாம் என்றாலும், நீண்ட தூரப் பயணங்களில் நடுவே உட்காருபவருக்குக் கடினமாக இருக்கலாம். டிக்கியிலும் பொருட்கள் வைக்க நிறைய இடம் இருக்கிறது.

ஜாஸ் பாஸ்?
ஜாஸ் பாஸ்?

ஜப்பானில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை, சிவிடி கியர்பாக்ஸுடன் ஹைபிரிட் வேரியன்ட்டாக அளித்தாலும், நம் நாட்டுக்கு 87 bhp சக்தியை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் 98 bhp சக்தியை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினையும் அளிக்க இருக்கிறது ஹோண்டா. மேலும், புதிய ஜாஸ் காரை 2014-ம் ஆண்டு இறுதியில், அதிரடியான விலையில் நம் நாட்டில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஹோண்டா நிறுவனம். புதிய ஜாஸ் காரின் விலை வாடிக்கையாளர்களை அதிரவைக்கும் 'அடி’யாக இல்லாதவரை ஒரு பிரச்னையும் இல்லை!

ஜாஸ் பாஸ்?
ஜாஸ் பாஸ்?