Published:Updated:

ஹோண்டா மொபிலியோ - புது வரவு

ஹோண்டா மொபிலியோ - புது வரவு

 ##~##

2014- ஹோண்டாவின் கலர்ஃபுல் சீஸனாக மலரவிருக்கிறது. டீசல் இன்ஜின் இல்லாமல் திணறிக் கொண்டிருந்த ஹோண்டா, அமேஸ் எனும் கார் மூலம் 1.5 லிட்டர் அளவுகொண்ட பவர்ஃபுல் டீசல் இன்ஜினைக் கொண்டுவந்தது. இப்போது இந்த டீசல் இன்ஜினின் துணையுடன், அடுத்த ஆண்டு தொடர்ந்து புதிய கார்களை விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஹோண்டா. புதிய சிட்டி, ஜாஸ் கார்களைத் தொடர்ந்து, விற்பனைக்கு வருகிறது மொபிலியோ.

 மாருதியின் எர்டிகா காருடன் நேரடியாகப் போட்டி போட இருக்கும் மொபிலியோ, ஹோண்டாவின் சின்ன காரான பிரியோவின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கிறது. அதனால், முன் பக்கம் இருந்து பார்க்கும்போது, பிரியோ - அமேஸ் போன்றே இருக்கிறது மொபிலியோ. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, வேன் போன்ற தோற்றம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, வளைவு நெளிவுகளைக் கலந்து டிசைன் செய்திருக்கிறது ஹோண்டா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹோண்டா மொபிலியோ - புது வரவு

15 இன்ச் வீல் மற்றும் பெரிய வீல் ஆர்ச்சுகள் காருக்குப் பிரமாண்டமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அகலமான பின் பக்க விளக்குகள், பெரிய விண்ட் ஸ்கிரீன், காரின் அடிப்பகுதியில் கலர்ஃபுல் விளக்குகள் என காரின் பின் பக்கத்துக்கு புதிய டிசனைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா.

இட வசதி

எம்பிவி கார்களைப் பொறுத்தவரை, டிசைனைவிட இட வசதி முக்கியம். எப்போதுமே, 'மேன் மேக்ஸிமம். மிஷின் மினிமம்’ என்ற கொள்கையுடன் இயங்கும் ஹோண்டா, எம்பிவி காரில் இட வசதிக்கு இன்னும் கூடுதலாகவே கவனம் செலுத்தியிருக்கிறது. மொபிலியோ, 2,650 மிமீ வீல்பேஸைக்கொண்டிருக்கிறது. இது, ஹோண்டா அமேஸைவிட 245 மிமீ அதிகம். ஆனால், மாருதி எர்டிகாவைவிட 90 மிமீ குறைவு. பிரியோ பிளாட்ஃபார்ம் என்பதால், பிரியோ - அமேஸ் கார்களில் இருக்கும் அதே டேஷ்போர்டுதான். டேஷ்போர்டு கறுப்பு வண்ணத்திலும் இருக்கைகள் பழுப்பு வண்ணத்திலும் இருக்கின்றன. முன் பக்க இருக்கைகளில் இட வசதி அதிகமாக இருப்பதோடு, இரண்டாவது வரிசை இருக்கைகளை முன்னும் பின்னும் ஸ்லைட் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளில் உட்காருபவர்களுக்கு வசதியாக, பின் இருக்கைகளில் தலைக்கு மேல் ஏ.சி வென்ட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா மொபிலியோ - புது வரவு

7 சீட்டர் என்று பெயருக்கு இல்லாமல், ஏழு இருக்கைகளிலும் வசதியாக உட்கார முடியுமா என்பதுதான் முக்கியம். இதனால், கடைசி வரிசை இருக்கைகளில்தான் கவனம் இருந்தது. ஆனால், உண்மையிலேயே மூன்றாவது வரிசை இருக்கையில் உயரமானவர்களும் வசதியாக உட்காரும் அளவுக்கு இடம் இருக்கிறது. மூன்று வரிசையிலும் ஆட்கள் உட்கார்ந்தாலும் டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் இருக்கிறது.

அமேஸில் இருக்கும் டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது மொபிலியோ. 1.5 லிட்டர் திறன்கொண்ட இந்த இன்ஜின், அதிகபட்சம் 100 தீலீஜீ சக்தியை வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் இன்ஜின்கொண்ட பெட்ரோல் மாடலும் உண்டு.

மாருதி எர்டிகாவைவிட சுமார் 30,000 ரூபாய் விலை அதிகமாக விற்பனைக்கு வரவிருக்கிறது மொபிலியோ. போட்டியே இல்லாமல், மாதத்துக்கு 7,200 கார்கள் வரை விற்பனை செய்யும் மாருதி எர்டிகாவுக்கு, மொபிலியோ கடுமையான போட்டியாக இருக்கும்!

ஹோண்டா மொபிலியோ - புது வரவு
ஹோண்டா மொபிலியோ - புது வரவு