Published:Updated:

ரோரிங் ரைடர்ஸ்!

ரோரிங் ரைடர்ஸ்!

 ##~##

ஜாவா பைக்கை நம்பி நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என்று நினைக்கிறோம். ஆனால், அதைத் தகர்த்திருக்கிறார்கள் ஜாவா பைக் கிளப்பைச் சேர்ந்தவர்கள். எவ்வளவு தூரம் என்றாலும் ஜாவா தாங்கும் என்பதை, தங்களுடைய வெற்றிகரமான 5-ஆவது ரைடின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த ரோரிங் ரைடர்ஸ் குழுவினர். முதல் ஆண்டு ஏலகிரி சென்றவர்கள், கொடைக்கானல், கோழிக்கோடு, மூணாறு என ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோர் ஊருக்குப் பயணித்தவர்கள், இந்த 5-வது ஆண்டில் ஏற்காடுக்கு ரைடு சென்றுவந்திருக்கிறார்கள்.

 இந்தக் குழுவைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் உற்சாகமாகப் பேசினார். ''எங்களுடைய இந்த ரைடுகளின் நோக்கமே ஜாவா பைக்கின் தனித் தன்மை மற்றும் உரிமையாளர்களின் ஒற்றுமையைக் காண்பிக்கத்தான். ஒரே இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஜாவா பைக்குகளை எங்களுடைய ரைடின் போது மட்டும்தான் பார்க்க முடியும். இந்த முறை ஏற்காடு ரைடுக்கு மொத்தம் 87 பேர் சென்னையில் இருந்து சென்றோம். சேலத்தில் இருந்து 15 பேர் வந்தார்கள். 1954-ம் ஆண்டு பெராக் மாடல் ஜாவா பைக் ஒன்றை பெங்களூருவில் இருந்து எடுத்து வந்திருந்தார் ஒருவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரோரிங் ரைடர்ஸ்!

ஜாவா பைக்குகளுக்கு மெக்கானிக்குகள் குறைவுதான். ஆனால், இப்போது இருப்பவர்கள் நன்றாகவே சர்வீஸ் செய்கிறார்கள். கிடைக்கும் ஸ்பேர் பார்ட்ஸ்களை வைத்து திருப்திகரமாக வேலை பார்த்துத் தருகிறார்கள். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை செந்தில், பட்டாபிராம் மணி, கீழ்பாக்கம் சாலமன் போன்ற ஜாவா மெக்கானிக்குகள் நன்றாக சர்வீஸ் செய்கிறார்கள்.

தொலைதூரப் பயணங்களுக்கு, கூடவே ஒரு மெக்கானிக்கையும் அழைத்துச் செல்வோம். எல்லா ஊர்களில் இருந்தும் ரைடு வருபவர்கள் அவர்களுடைய ஊரில் இருந்து ஒரு மெக்கானிக்கை அழைத்து வருவார்கள். வழியில் ஏதாவது பிரச்னை என்றால், இவர்கள் சரி செய்துகொடுப்பார்கள். அவர்களுக்கும் இதுபோல ரைடு வருவதனால், ஒரே இடத்தில் பல ஜாவா பைக்குகளைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ள முடியும்.

ரோரிங் ரைடர்ஸ்!

தொலைதூரப் பயணங்களில் ஜாவா பைக் சிறப்பாக இருக்காது என ஒரு கருத்து உள்ளது. அது நூறு சதவிகிதம் உண்மை என்று சொல்ல முடியாது. மூணாறு ரைடின்போது, மூணாறில் இருந்து காலை 5 மணிக்குக் கிளம்பி மாலை 6 மணிக்குள் சென்னை வந்துவிட்டோம். 600 கிமீ தூரத்துக்கும் மேல் எந்தப் பிரச்னையும் கொடுக்காமல் அத்தனை பைக்குகளும் வந்து சேர்ந்தன.

ரோரிங் ரைடர்ஸ்!

அலுவலகம். பிசினஸ் என ஒவ்வொருவருக்கும் பல வேலைகள் இருந்தாலும் முன்கூட்டியே தெளிவான பயணத் திட்டத்தைத் தீர்மானித்து விடுவோம். அடுத்த அக்டோபரில் செல்ல இருக்கும் ரெய்டுக்கு, மார்ச் மாதத்தில் இருந்தே திட்டமிட ஆரம்பித்துவிடுவோம். தேதியும் ஊரும் முடிவான உடன், எல்லாரும் அதற்குத் தகுந்தது போல மற்ற வேலைகளைத் திட்டமிட்டுக் கொள்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறைதான் நடக்கிறது என்பதால், எல்லோரும் ரைடுக்கு வந்துவிடுவார்கள்!''- வெற்றியின் ரகசியம் சொல்லி  முடித்தார் ஸ்ரீநிவாசன்!

ரோரிங் ரைடர்ஸ்!