Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

ரொமான்ஸ் ரோட்ஸ்டர்!

மோட்டார் நியூஸ்

பிஎம்டபிள்யூவின் புதிய ஆயுதம் Z4. 2 சீட்டர் ரோட்ஸ்டர் வகை காரான Z4ஐ இதுவரை இந்தியாவுக்குக் கொண்டுவராமல் இருந்தது பிஎம்டபிள்யூ. தற்போது பல புதிய மாற்றங்களுடன் இந்தியாவுக்கு வந்திருக்கிறது Z4. முழுமையாக இறக்குமதிசெய்து விற்பனை செய்யப்படும் இந்த கார், அட்டகாசமான டிசைனைக்கொண்டது. படகு போலத் தோற்றமளிக்கும் இதன் வடிவம், தனித்துவம்கொண்டது. நீளமான பானட்டில் அழகான மூன்று க்ரீஸ் கோடுகள் இணையும் விதம் அபாரம். இந்த காரில் பாதுகாப்புக்காக காற்றுப் பைகள், ஏபிஎஸ், கனெக்டிங் பிரேக் கன்ட்ரோல், டயனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உடன் டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் வெஹிக்கல் இம்மொபலைஸர் அண்டு க்ராஷ் சென்ஸார் என அத்தனை தொழில்நுட்பங்களையும் சேர்த்திருக்கிறது பிஎம்டபிள்யூ.  2979 சிசி, 6 சிலிண்டர் இன்லைன் ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜினைக்கொண்ட இது, 306bhp சக்தியை அளிக்கும். 0 - 100 வேகத்தை 5.1 விநாடிகளில் எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 230 கி.மீ. இரண்டு வேரியன்ட்டுகளில் வரும் இதன் சென்னை ஆன் ரோடு விலை, 84,50,711 ரூபாய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யமஹா ஆர்-25 கான்செப்ட்!

மோட்டார் நியூஸ்

நவம்பர் மாதம் நடந்த டோக்கியோ மோட்டார் ஷோவில், யமஹா ஆர்-25 கான்செப்ட்டை காட்சிக்கு வைத்தது யமஹா. யமஹா ஆர்-1 போல டிசைன் செய்யப்பட்டிருக்கிறது ஆர்-25. 250 சிசி பேரலல் ட்வின் இன்ஜினுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கான்செப்ட் பைக்கின் பவர் விபரங்களை யமஹா வெளியிடவில்லை. பைக்கின் ஃப்ரேம் முழுக்க முழுக்கப் புதியது. இன்னும் ஒரு வருடத்துக்குள் இந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் டிரைவிங் அகாடமி!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் மற்றும் சாலைப் போக்குவரத்து இன்ஸ்டிட்யூட் இணைந்து, 'ஹூண்டாய் டிரைவிங் அகாடமி’ என்ற பயிற்சி மையத்தைத் துவக்கி இருக்கின்றன.

இந்தப் பயிற்சி மையத்தின் முக்கிய நோக்கம், சாலைப் பாதுகாப்புதான். பயிற்சியில் சேர விரும்புபவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி, கார் பராமரிப்பு ஆகியவற்றுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ், யோகா போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

மோட்டார் நியூஸ்

ஹூண்டாய் இந்தியாவின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் போ சின் சியோ பேசும்போது, ''இந்த அகாடமி, புதிதாக கார் வாங்குபவர், ஏற்கெனவே கார் உபயோகித்து வருபவர், சமுகத்தில் பின்தங்கிய பிரிவினர் ஆகியோருக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். மேலும், பல்வேறுபட்ட சாலை மற்றும் காலநிலைகளில் கார் ஓட்டுவதற்கான நுணுக்கங்களைக் கற்றுத் தரவும் இந்தப் பயிற்சி மையம் உதவி செய்யும். இந்த அகாடமி துவங்கப்பட்டதற்கான முக்கியக் காரணம்.

ஏற்கெனவே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் இயங்கிவரும் ஹூண்டாய் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி, கிராமப்புற இளைஞர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியளிக்கும்!'' என்று கூறினார்.

பயிற்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள, சதீஷ்: 99437 98775.

- புகழ்.திலீபன்

கிராண்ட் ஐ10 ஆட்டோமேட்டிக்!

மோட்டார் நியூஸ்

கிராண்ட் ஐ10 காரின் லைன்-அப்பில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட மாடலையும் சேர்த்துள்ளது ஹூண்டாய். 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட மாடலில், இந்த 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா வேரியன்டுகளில் இந்த ஆட்டோமோட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கும். கிராண்ட் ஐ10 ஆட்டோமேட்டிக் சென்னை ஆன் ரோடு விலை: ஸ்போர்ட்ஸ் - 6,63,740 ரூபாய், ஆஸ்டா - 6,95,042 ரூபாய்.

சென்னையில் ஃப்ரூசியாவின் இரண்டாவது தொழிற்சாலை!

மோட்டார் நியூஸ்

சென்னை அருகே மறைமலை நகரில் அமைந்திருக்கிறது ஃப்ரூசியா இன்டீரியர் சிஸ்டம்ஸ். ''ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காருக்கான இன்ஸ்ட்ருமென்ட் பேனல், டோர் பேனல் மற்றும் சென்டர் கன்ஸோல்களைத் தயாரித்து, ஃபோர்டு தொழிற்சாலைக்கு சப்ளை செய்கிறோம். இதுத் தவிர, 80,000 கார் இருக்கைகளைத் தயாரிக்கும் வசதியும் எங்கள் தொழிற்சாலையில் உள்ளது. கூடுதலாக மேலும் ஒரு தொழிற்சாலையை சென்னையில் அமைக்க இருக்கிறோம்'' என்று தெரிவித்தனர், ஃப்ரூசியா நிர்வாகிகள்.

DZC 2013 சாம்பியன்கள்!

மோட்டார் நியூஸ்

'டெஸ்டினேஷன் ஜீரோ கார்பன்’ என்று அழைக்கப்படுகிற பசுமைத் தொழில்நுட்பங்கள் தொடர்பான போட்டிக்கு, இந்தியா சார்பாகச் சென்று 'ஒட்டுமொத்த சாம்பியன்’களாக வெற்றி பெற்றுத் திரும்பியிருக்கின்றனர் - சென்னை மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் படிக்கும் அபிஷேக் முரளி மற்றும் ரெஹான் ஹனீஃப். ''ரொபாடிக் லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடத்திய DZC 2012 போட்டியில் வெற்றி பெற்று, சிங்கப்பூரில் நடந்த DZC 2013 போட்டியில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றோம். சிங்கப்பூரில் நடந்த போட்டிக்காக ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக்கூடிய ஒரு சின்ன காரை வடிவமைத்தோம். சிங்கப்பூர் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுடைய காரின் செயல்திறனைவிட எங்களுடைய கார் சிறந்த செயல்திறனை வெளிக்காட்டியது. இதனால்,DZC 2013-யின் ஒட்டுமொத்த சாம்பியன்களாகவும், சிறந்த வீடியோ க்ளிப் மற்றும் சிறந்த ப்ரசென்டேஷன் ஆகிய பிரிவுகளிலும் வெற்றிபெற்றோம்'' என்கிறது அபிஷேக் முரளி-ரெஹான் ஹனீஃப் வெற்றிக் கூட்டணி.

டாப் 10 கார்கள்!

மோட்டார் நியூஸ்

தீபாவளிக்கு கார் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்தால், அக்டோபர் மாத கார் விற்பனை 4.5 சதவிகிதம் குறைந்திருக்கிறது. மார்க்கெட் ராஜாக்களான மாருதி மற்றும் ஹூண்டாய் கார்களின் விற்பனை அதிகரிக்கவும் இல்லை; குறையவும் இல்லை. ஆல்ட்டோ 22,574 கார்களும், ஸ்விஃப்ட் 19,047 கார்களும், டிசையர் 17,211 கார்களும் விற்பனையாகி முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. கிராண்ட் ஐ10 கடந்த அக்டோபர் மாதம் 11,519 கார்கள் விற்பனையாகி இருக்கிறது என்பதுதான் ஹூண்டாய்க்கு நல்ல செய்தி. எப்போதுமே ஹூண்டாயின் ஐ20 காரும் டாப் 10 லிஸ்டில் இடம்பெறும். ஆனால், இந்த முறை மாருதியின் எர்டிகா மற்றும் ஆம்னி கொடுத்த போட்டி காரணமாக ஐ20 அவுட்.

மஹிந்திரா W4 எக்ஸ்யூவி 500 - விலை குறைந்த மாடல் அறிமுகம்!

மோட்டார் நியூஸ்

மஹிந்திரா தனது வெற்றிகரமான கார்களில் ஒன்றான எக்ஸ்யூவி 500 காரில் குறைந்த விலை வேரியன்ட்டாக W4 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற மாடல்களுக்கும் இதற்கும் மெக்கானிக்கலாக பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மற்ற எக்ஸ்யூவி 500 மாடல்களில் இருக்கும் அதே 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின்தான் இதிலும்.  விலையைக் குறைப்பதற்காக சாதாரண ஆடியோ சிஸ்டம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ரெயின் சென்ஸிங் வைப்பர், லைட் சென்ஸிங் ஹெட்லைட்ஸ், கூடுதலாக இருந்த சார்ஜிங் போர்ட்டுகள், உள்பக்கம் இருந்த விளக்குகள் ஆகியவற்றை எடுத்துவிட்டார்கள். இரண்டு காற்றுப் பைகள், இபிடி, ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இந்த குறைந்த விலை மாடலிலும் உண்டு. இதன் சென்னை ஆன் ரோடு விலை 13,24,731 ரூபாய்.

விற்பனைப் பயிற்சி அளிக்கும் டொயோட்டா!

மோட்டார் நியூஸ்

சிறந்த விற்பனை அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனமும் சென்னை இந்துஸ்தான் பல்கலைக் கழகமும் இணைந்துள்ளது. 'டொயோட்டா சேல்ஸ் எஜுகேஷன் ஃபவுண்டேஷன்’ மூலம் ஆட்டோமோட்டிவ் விற்பனை தொடர்பான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குவதுடன், அவர்களை டொயோட்டா நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாகப் பணியில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளது. ''விற்பனைத் துறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு, ஆட்டோமோட்டிவ் விற்பனையில் முழுமையான பயிற்சியை எங்கள் பல்கலைக்கழகம் வழங்கும்'' என்று தெரிவித்தனர், பல்கலைக்கழக நிர்வாகிகள்.

- புகழ்.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism