Published:Updated:

முதல்வன் மார்க்யூஸ்!

முதல்வன் மார்க்யூஸ்!

 ##~##

சுள்ளான் என முதலில் ஓரங்கட்டப்பட்ட மார்க் மார்க்யூஸ்தான், இப்போது உலகின் அதிவேக பைக் ரேஸ் போட்டியான மோட்டோ ஜீபியின் சாம்பியன். 20 வயதே நிரம்பிய மார்க் மார்க்யூஸ், கடந்த 35 ஆண்டுகளில் முதல் சீஸனிலேயே சாம்பியன் பட்டம் வென்றவர்.

 கடந்த ஆண்டு இறுதியில், முன்னாள் உலக சாம்பியன் கேஸி ஸ்டோனர் ஓய்வை அறிவிக்க... அவருக்கு மாற்றாக யாரைக் கொண்டுவருவது எனக் குழப்பத்தில் இருந்தது ஹோண்டா. ஏற்கெனவே, டேனி பெட்ரோஸா அணிக்குள் இருக்கும் நிலையில், இன்னொரு சீனியர் வீரரைக் கொண்டுவர முடியாது என்பதால், 20 வயதான மார்க்யூஸுக்கு வாய்ப்பு கிடைத்தது. மோட்டோ ஜீபி பைக்குகள் பேய் வேகத்தில் பறக்கும் என்பதால், இந்த பைக்குகளை கன்ட்ரோல் செய்யவே மிகவும் அனுபவம் தேவை. வாலன்டினோ ராஸி முதல் லாரன்சோ வரை எல்லோருமே முதல் சீஸனில் பல விபத்துகளில் சிக்கித் தப்பிப் பிழைத்துக் கற்றுக்கொண்டவர்கள்தான். அதனால், முதல் சீஸனில் மார்க்யூஸை, 'நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொள்’ என, டேனி பெட்ரோஸாவுக்கு சப்போர்ட் ரேஸராகவே நடத்தியது ஹோண்டா அணி. ஆனால், ரேஸ் டிராக்கில் நடந்ததோ... வரலாறு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதல்வன் மார்க்யூஸ்!

கத்தாரில் துவங்கிய 2013 சீஸனின் முதல் ரேஸில், வெற்றிபெற்றார் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ. இரண்டாம் இடம் பிடித்தவர் வாலன்டினோ ராஸி. மூன்றாவதாக வந்தவர் இளம் புயல் மார்க்யூஸ். முதல் ரேஸிலேயே லாரன்சோ, ராஸி என இரண்டு ரேஸ் ராக்கெட்டுகளுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்திய மார்க்யூஸ், அடுத்த ரேஸில் வெற்றிபெற்றார். தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்துகொண்டிருந்த மார்க்யூஸுக்கும், 2012-ம் ஆண்டின் சாம்பியன் லாரன்சோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதி ரேஸாக, நவம்பர் 10-ம் தேதி வாலன்சியாவில் நடந்த ரேஸ், சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் போட்டியாக அமைந்தது. 13 புள்ளிகள் முன்னிலையில் இருந்த மார்க்யூஸ், முதல் நான்கு இடங்களுக்குள் வந்தால், லாரன்சோவிடம் இருந்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிவிடலாம் என்ற நிலையில் ரேஸ் துவங்கியது.

முதல்வன் மார்க்யூஸ்!

தகுதிச் சுற்றில் வெற்றிபெற்ற மார்க்யூஸ், முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். பதற்றத்தில் இருந்த மார்க்யூஸ், முதல் லேப்பிலேயே மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கினார். ஆனால், நான்காவது இடத்துக்குள் வந்தால்தான் சாம்பியன் பட்டம் என்பதால், மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்; அதே சமயம், எந்த விபத்திலும் சிக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து ரேஸ் ஓட்டினார். அதனால், இறுதியில் லாரன்சோ வெற்றி பெற்றாலும், மார்க்யூஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், புள்ளிகளின் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் மார்க்யூஸ்.

மோட்டோ ஜீபியில் மார்க்யூஸின் ஆட்டம் ஆரம்பம்!

சார்லஸ்