Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

ஜாவித், கடலூர்.

மோட்டார் கிளினிக்

புதிதாக கார் வாங்க இருக்கிறேன். என்னுடைய லிஸ்ட்டில் ஃபோக்ஸ்வாகன் போலோ மற்றும் மாருதி ஸ்விஃப்ட் ஆகிய கார்களை இறுதி செய்துள்ளேன். இரண்டில் எந்த காரை வாங்கலாம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மோட்டார் கிளினிக்

பில்டு குவாலிட்டியில் சிறந்த கார் ஃபோக்ஸ்வாகன் போலோ. ஆனால், இது பெர்ஃபாமென்ஸிலும் ஓட்டுதல் தரத்திலும் மாருதி ஸ்விஃப்ட்டைவிட சிறந்த கார் இல்லை. ஸ்போர்ட்டியான பெர்ஃபாமென்ஸ் இல்லை என்பதோடு, அதிர்வுகளும் சத்தமும் அதிகம். மாருதியின் 'கே-சீரிஸ்’ இன்ஜின் நன்றாக ட்யூன் செய்யப்பட்டிருப்பதோடு, பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜிலும் சிறந்த இன்ஜின். போலோவுடன் ஒப்பிடும்போது, ஸ்விஃப்ட்டில் சிறப்பம்சங்களும் அதிகம்.

ரகுவரன், கோவை.

மோட்டார் கிளினிக்

நான் கோவையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். என் வீட்டில் இருந்து அலுவலகம் 20 கி.மீ தூரம். தினமும் அலுவலகத்துக்குச் சென்றுவர ஸ்போர்ட்டியான பைக் வாங்கத் திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய டார்கெட், பெர்ஃபாமென்ஸ் பைக். கவாஸாகி நின்ஜா 300 அல்லது ஹோண்டா சிபிஆர் 250ஆர் - இந்த இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருப்பதோடு, விலையும் நின்ஜாவைவிட கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் குறைவு. ஆனால், கவாஸாகி நின்ஜாவின் பில்டு குவாலிட்டிக்கு முன் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பின்தங்கிவிடுகிறது. பெர்ஃபாமென்ஸிலும் நின்ஜா குறை சொல்லமுடியாத பைக். பட்ஜெட் பிரச்னை இல்லை என்றால், நீங்கள் நின்ஜாவையே வாங்கலாம்.

முத்துமாணிக்கம், புதுக்கோட்டை.

மோட்டார் கிளினிக்

என் நண்பரின் நண்பர், மாருதி கியாஷி காரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். கார் 10 ஆயிரம் கி.மீ-தான் ஓடியிருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல். வாங்கும்போது இதன் விலை 19 லட்சம். இப்போது 10 லட்ச ரூபாய்க்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். ஆனால், இந்த கார் அதிகம் விற்பனையாகாத ஃபெயிலியர் மாடல் என்பதால் வாங்கலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.

மோட்டார் கிளினிக்

மாருதி கியாஷியை வாங்குவது நல்ல முடிவாக இருக்காது. கியாஷி காரை முழுவதுமாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை செய்துவந்தது மாருதி சுஸ¨கி நிறுவனம். 2.4 லிட்டர் கொண்ட பவர்ஃபுல் இன்ஜினைக் கொண்டிருந்தாலும் காரின் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் ஐரோப்பிய கார்களுடன் போட்டி போடும் அளவுக்கு இல்லை. மாதத்துக்கு இரண்டு மூன்று கார்கள் மட்டுமே விற்பனையானது. இதனால், கடந்த ஆண்டு கியாஷிக்கு 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கொடுத்து, இறக்குமதி செய்து வைத்திருந்த கார்கள் அனைத்தையும் விற்பனை செய்து முடித்தது மாருதி. இப்போது, கிட்டத்தட்ட இந்த காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுவிட்டது. கார் முழுமையாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டதால், இந்த காரின் ஸ்பேர் பார்ட்ஸ் இந்தியாவில் உடனடியாகக் கிடைக்காது. ஏதாவது பிரச்னை என்று சர்வீஸ் சென்டர் போனால், இரண்டு அல்லது மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். மேலும், இந்த காரை அடுத்து நீங்கள் விற்க வேண்டும் என்று விரும்பினால், வாங்க ஆட்கள் கிடைப்பார்களா என்பது சந்தேகம். அதனால், நீங்கள் 10 லட்சம் ரூபாய் கொடுத்து கியாஷி வாங்குவதற்குப் பதில் ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கரோலா போன்ற கார்களை வாங்கலாம்.

கிரிதரன், சென்னை.

மோட்டார் கிளினிக்

என்னுடைய தம்பி புதிதாக யமஹா ஆர்-15 பைக் வாங்கியிருக்கிறான். அவனுக்குப் பரிசாக ஒரு நல்ல ஹெல்மெட் வாங்கித் தர முடிவெடுத்திருக்கிறேன். என்ன ஹெல்மெட் வாங்கலாம், எவ்வளவு ரூபாய் செலவாகும்?

உங்கள் தம்பிக்கு நீங்கள் ஹெல்மெட் வாங்கித் தருவது மிகவும் நல்ல முடிவு. ஹெல்மெட் வாங்கும்போது அவரையும் கூடவே அழைத்துச் செல்லுங்கள். அவருடைய தலைக்கு ஹெல்மெட் சரியாக ஃபிட் ஆக வேண்டும். மேலும், அதிக வென்ட்கள் (காற்று உள்ளே வர) கொண்ட ஹெல்மெட் வாங்குவது நல்லது. கறுப்பு, வெள்ளை என ஒரே கலரில் வாங்காமல், கொஞ்சம் கலர் ஸ்டிக்கர்களைக் கொண்ட ஹெல்மெட் வாங்குவது நல்லது. இரவில் பயணிக்கும் போது இது மிகவும் உதவிகரமாக இருக்கும். உலகம் முழுவதும் சிறந்த ஹெல்மெட்டுக்குப் பெயர் பெற்ற எஸ்ஓஎல் ஹெல்மெட்கள் இப்போது சென்னையிலேயே கிடைக்கின்றன. இதன் விலை 4,000 ரூபாயில் இருந்து ஆரம்பம். 1 லட்சம் ரூபாய் கொடுத்து பைக் வாங்கி விட்டு, 5,000 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்க யோசிக்கக் கூடாது. அதுவும் ஆர்-15 போன்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு சிறந்த ஹெல்மெட் அவசியம்!

வசந்த், திண்டுக்கல்.

மோட்டார் கிளினிக்

ஹோண்டா ஜாஸ் எனக்கு மிகவும் பிடித்த கார். இதன் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த காரை வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். நல்ல கண்டிஷனில் உள்ள காரை எவ்வளவு விலைக்கு வாங்கினால் சரியாக இருக்கும்?

மோட்டார் கிளினிக்

ஜாஸ் வாங்கலாம் என்ற உங்களுடைய முடிவு பாராட்டுக்குரியது. நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ற மிகச் சிறந்த கார் ஜாஸ். டிசைன், இட வசதி, பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என எல்லா விஷயங்களிலுமே போட்டியாளர்களை விட சிறந்த கார். ஆனால், விலையை ஏற்றி, இந்த காரை விற்காத கார் என்ற பிம்பத்தைக் கொண்டுவந்துவிட்டது ஹோண்டா. ஆனால், ஜாஸை வாங்கியவர்கள் எல்லோருமே இதன் அருமையை உணர்ந்தவர்கள். அதனால், பழைய கார் மார்க்கெட்டில் அவ்வளவு எளிதாக ஜாஸ் கிடைக்காது. அப்படிக் கிடைத்தாலும் குறைந்தது 4 லட்ச ரூபாய்க்கு மேல்தான் நீங்கள் வாங்க முடியும்.

செல்வக்குமார், கரூர்.

மோட்டார் கிளினிக்

நான் ஹூண்டாய் ஐ10 கார் வைத்திருக்கிறேன். இதில் சில நேரங்களில் ரிவர்ஸ் கியரைப் போட்ட பிறகும் ரிவர்ஸ் எடுக்க முடியவில்லை. இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் ரிவர்ஸ் கியரை அழுத்திய பிறகுதான் ரிவர்ஸ் எடுக்க முடிகிறது. இதற்கு என்ன காரணம்?

மோட்டார் கிளினிக்

தொடர்ந்து இந்தப் பிரச்னை எழுகிறது என்றால், உடனடியாக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுபோய் கியர்பாக்ஸை முழுவதுமாக செக் செய்யச் சொல்லுங்கள். ஷிஃப்ட் செலக்ட்டர் மற்றும் ரிவர்ஸ் கியருக்கான சிங்க்ரனைசரில் எதாவது பிரச்னை இருக்கலாம். இந்த ஸ்பேர்களை மாற்றிவிட்டால் பிரச்னை வராது. காருக்கு வாரன்டி இருந்தால், இதை இலவசமாகவே செய்துகொள்ளலாம்.