Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ஆக்டிவா-i

கொஞ்சும் ஸ்டைல்.. கொஞ்சம் விலை!

 ##~##

ரோடுதான் எனது சொந்த ஊர். ஆனால்,  படிப்பு, தொழில், வீடு என்று எல்லாமே மதுரைதான்.

 கல்லூரியில் படிக்கும்போது, சக மாணவர்கள் பல வகை வாகனங்களில் வருவதைப் பார்த்து, பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதன்முதலில் என் வீட்டில் அடம்பிடித்து நான் வாங்கியது, ஹோண்டா யூனிகார்ன் பைக். ஆனால், அந்த பைக்கில் எனக்குத் திருப்தி இல்லை. நல்ல வசதிகளுடன் இருக்கும் வேறு மாடல் பைக் வாங்கலாம் என முடிவு செய்தபோது வீட்டில், 'பெண்களும் ஓட்டும்படியாக வாங்கினால், அனைவரும் பயன்படுத்தலாமே’ என்றார்கள். நானும் தொழில்ரீதியாக பெரிய பார்சல்களைக் அடிக்கடி கொண்டுசெல்ல வேண்டியது இருக்கும் என்பதால், ஸ்கூட்டர் வாங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

ரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ஆக்டிவா-i
ரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ஆக்டிவா-i

என் நண்பர்களும் வீட்டிலும் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் வாங்கச் சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்குப் பிடித்தமான வெள்ளை நிறம் கிடைக்காது என்பது போன்ற பல காரணங்களைச் சொல்லி அதை நிராகரித்துவிட்டேன். அப்போதுதான் ஹோண்டா ஆக்டிவாவில் 'ஐ’ எனும் மாடல் புதிதாக அறிமுகப்படுத்தினார்கள். 'சரி, வாங்குவதுதான் வாங்குகிறோம்; இதுவரை யாரும் வாங்காத புது மாடல் ஸ்கூட்டரை வாங்கலாமே’ என முடிவெடுத்து, மதுரையில் உள்ள ஷோரூம்களில் விசாரிக்கச் சென்றேன். கல்யாணி ஹோண்டாவில் வயலெட் நிற ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் வைத்திருந்தனர். அதனைப் பற்றி முழு விபரங்களையும் தெளிவாகப் புரியும்படி சொன்னார்கள்.

ஹோண்டா ஆக்டிவா ஐ, முதல் பார்வையிலேயே எனக்குப் பிடித்து விட்டது. கடந்த ஜூலை கடைசியில் புக் செய்தேன். அப்போது, நான் கேட்ட வெள்ளை நிறம் இல்லாததால், கொடுக்க முடியவில்லை. கடந்த அக்டோபர் மாதம்தான் ஸ்கூட்டரை டெலிவரி எடுத்தேன். டெலிவரி எடுத்தவுடன் மதுரையைச் சுற்றிச் சுற்றி வந்தேன். சிட்டிக்குள் ரொம்பவே ஸ்மூத்தாக ஓட்ட முடிகிறது. எடை குறைவாக இருப்பதால், வளைத்து நெளித்து ஓட்ட சுலபமாக இருக்கிறது.

நீண்ட தூரப் பயணத்தின்போது வசதியாக இருக்கிறது. லிட்டருக்கு 55 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது. மற்ற ஸ்கூட்டர்களை ஒப்பிடும்போது ஆக்டிவா ஐ பெஸ்ட் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

என் நண்பர்கள் ஸ்கூட்டரை ஓட்டிப் பார்த்துவிட்டு நல்லவிதமான ஃபீட்பேக் சொன்னார்கள். அதனால், எனக்கு இரட்டை மகிழ்ச்சி. பயன்படுத்த எளிதாக இருப்பதால், என் மனைவியும் அம்மாவும் ஆக்டிவா ஐ ஸ்கூட்டரை ஓட்ட ஆர்வம் காட்டுகின்றனர்.

பிடித்தது

ஆக்டிவா ஐ, குறைவான இன்ஜின் உராய்வு கொண்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னார்கள். இது ப்ளஸ் என்று நினைக்கிறேன். இதில் உள்ள ஸ்டோரேஜ் பாக்ஸ், பெரிதாகவும் உபயோகப்படுத்த வசதியாகவும் இருக்கிறது. தொழில் சம்பந்தமான பேப்பர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் போன்றவைகளை இதில் வைத்துக்கொள்ள முடிகிறது. வேறு ஸ்கூட்டர்களில் இருக்கும் சிறப்பம்சங்களைவிட இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பல அம்சங்கள் பயன்படுத்த சுலபமாக இருக்கின்றன. இன்னொரு முக்கியமான விஷயம், டியூப்லெஸ் டயர்கள். விலையும் குறைவு.

பிடிக்காதது

இதில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் அவ்வளவு கவர்ச்சியாக இல்லை. இன்னும் கொஞ்சம் ஸ்டைலாக வடிவமைத்து இருக்கலாம். மீட்டர்கள் ட்ரெண்டி என்றும் சொல்ல முடியாது. தோற்றத்தில், இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் செய்திருக்கலாம். மேலும், எடை குறைவு என்பதால், அதிக வேகமாகச் செல்ல முடியாது. முக்கியமாக, இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் வசதி ஆப்ஷனாகக்கூட இல்லை. அதேபோல, கால் வைக்கும் இடம் அகலமாக இல்லை. பொருட்களை எடுத்துச் செல்வது அத்தனை சுலபமாக இல்லை.  

ஹோண்டா ஆக்டிவா ஐ, பார்க்க ஸ்டைலாக இல்லாவிட்டாலும் நல்ல ட்ரெண்டியாக இருக்கிறது. மற்றபடி அன்றாடப் பயன்பாட்டுக்கு வசதியாகவும் கையாளச் சுலபமாகவும் இருக்கிறது.

ரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ஆக்டிவா-i