Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் டீசல்

மிரட்டல் வடிவம்... அசத்தும் அழகு!

 ##~##

நான் ஒரு கார் பிரியன். என் சிறு வயதிலேயே வீட்டில் கார்கள் இருந்ததால், அதில் பயணிப்பதும் வாகனத்தின் வகைகள் பற்றி அறிவதிலும் ஆர்வம் அதிகம். அதனால், லைசென்ஸ் வாங்கும் வயதை எட்டுவதற்கு முன்பே கார் ஓட்டப் பழகிவிட்டேன். என்னைப் போலவே என் அப்பாவுக்கும் கார்கள் மீது அலாதிப் பிரியம். புது மாடல் கார் எது வந்தாலும் உடனே அதை டெஸ்ட் டிரைவ் செய்துவிடுவார். அதே பழக்கம் எனக்கும் வழக்கமானது. முதன்முதலில் எனக்கே எனக்கு என வாங்கிய கார் ஃபியட் பத்மினி. இதை என் கல்லூரிக் காலத்தில் பயன்படுத்தினேன். அதன் பிறகு மாருதி, ஃபோர்டு ஐகான், டொயோட்டா இனோவா, மாருதி டிசையர், ஃபோர்டு எண்டேவர், டொயோட்டா பார்ச்சூனர், எட்டியோஸ் என எல்லா வகை கார்களையும் பயன்படுத்திவிட்டேன்.

 ஏன் எக்கோஸ்போர்ட்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமீபத்தில் சென்னையில் இருந்து தேனிக்கு காரில் வந்துகொண்டு இருந்தேன். அப்போது என் காரை முந்திக்கொண்டு படுவேகமாக ஒரு கார் சென்றது. சட்டெனப் பார்ப்பதற்கு பார்ச்சூனர் போல இருந்தது. ஆனால், குட்டியாகவும் க்யூட்டாகவும் இருந்தது அந்த கார். அது என்ன கார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், காரை விரட்டினேன். அந்த காரை ஓவர்டேக் செய்யவே 20 கிலோ மீட்டருக்கு மேல் ஆகிவிட்டது. அதற்கு முன்பு, ஃபோர்டு எக்கோஸ்போர்ட் பற்றி விளம்பரங்கள் மூலம் அறிந்திருந்தாலும், காரை முதன்முதலாகப் பார்த்தது அப்போதுதான். அந்த இடத்தில் இருந்தே போன் செய்து, மதுரையில் இருக்கும் அக்ஷயா ஷோரூமுக்கு ஆள் அனுப்பி எக்கோஸ்போர்ட்டை புக் செய்துவிட்டேன்.

ரீடர்ஸ் ரிவியூ - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் டீசல்

ஊர் திரும்பியதும் காரின் விலையில் பாதியை முன் பணமாகச் செலுத்திவிட்டு, 'கார் எப்போது கிடைக்கும்’ என்று கேட்டேன். ஒரு மாதம் ஆகும் என்றார்கள். ஆனால், ஷோரூம் அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு மாதம் ஆகும் எனச் சொன்னவர்களை, ஒரே வாரத்தில் டெலிவரி கொடுக்க வைத்துவிட்டேன். அதாவது, எனக்கு முன்பாகப் பதிவுசெய்தவருடன் பேசி, அவருக்குக் கிடைக்க வேண்டிய காரை நான் வாங்கிவிட்டேன். அந்த அளவுக்கு இந்த கார் எனக்குப் பிடித்திருந்தது.

ஃபர்ஸ்ட் டிரைவ்

மதுரையில் இருக்கும் அக்ஷயா  ஷோரூமில் குடும்பத்துடன் சென்று காரை டெலிவரி எடுத்தேன். காரில் ஏறி அமர்ந்ததுமே பிரம்மாண்டமான காருக்குள் அமர்ந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது. ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட்டில் முதன்முதலாக என் குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்றேன். ஒரு லக்ஸ¨ரி ஸ்போர்ட்ஸ் காரில் செல்வதைப் போல உணர்ந்தோம். தற்போது எங்களிடம் நான்கு கார்கள் இருந்தாலும், பெரும்பாலும் இந்த காரைத்தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவுக்கு என் குடும்பத்தில் அனைவரையும் கவர்ந்துவிட்டது ஃபோர்டு எக்கோஸ்போர்ட்.

ரீடர்ஸ் ரிவியூ - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் டீசல்

பிடித்தது

காரின் உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், மேடு பள்ளங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஓட்ட வைக்கிறது. பவர் ஸ்டீயரிங், பிரேக் ஆகியவை ஓட்டுவதற்கு நம்பகமான உணர்வைக் கொடுக்கின்றன. இதன் கனமான கதவுகள், இதன் கட்டுமான உறுதியைச் சொல்கிறது. ஹெட்லைட், இண்டிகேட்டர், சைடு வியூ மிரர், முன் பக்கத் தோற்றம் ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருக்கிறார்கள்.

பிடிக்காதது

நான் எதிர்பார்த்த இன்ஜின் பிக்-அப் இதில் இல்லை. டீசல் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்கிறது. பின் இருக்கைகளில் ஹெட்ரெஸ்ட் வசதி இல்லாதது நீண்ட தூரப் பயணங்களின்போது எரிச்சலைக் கொடுக்கிறது. என்னைப் பொறுத்த வரை, முன் இருக்கையில் இட வசதி அவ்வளவு தாராளம் இல்லை. பின்னிருக்கை இட வசதியும் அப்படித்தான்.

போதுமான மைலேஜ் கிடைக்கிறது. மற்ற எஸ்யூவி மாடல் கார்களோடு ஒப்பிட்டால், விலையும் குறைவு. அளவான உயரம் அகலம் இருப்பதால், பார்ப்பதற்குக் கம்பீரமாக இருக்கிறது. மேலும், குறுகலான இடங்களிலும் சுலபமாக ஓட்ட முடிகிறது.

டிக்கி வசதி 350 லிட்டர். டேஷ்போர்டு, ஸ்டீயரிங் சிஸ்டம், ஏ.சி என்று அனைத்தும் நன்றாக இருக்கின்றன. இன்னும் முதல் சர்வீஸுக்கு விடவில்லை. அதனால், எவ்வளவு செலவு வரும் என்பது தெரியவில்லை. பெரிய அளவில் செலவு வராது என்று சொல்கிறார்கள்; பார்க்கலாம். நான் எத்தனையோ கார்கள் வாங்கி இருந்தாலும் என் மனைவி மங்காவுக்கு வாங்கித் தந்த முதல் கார் இதுதான். இந்த காரை அவரது பெயரிலேயே பதிவுசெய்து பரிசாகக் கொடுத்துவிட்டேன்.

ரீடர்ஸ் ரிவியூ - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் டீசல்