Published:Updated:

ஜிபிஎஸ் + கால் சென்டர் = ரூட்ஸ்டார்

ஜிபிஎஸ் + கால் சென்டர் = ரூட்ஸ்டார்

 ##~##

கூகுள் மேப்ஸுக்குப் போட்டி போடும் அளவுக்கு, சென்னையில் புதிய மேப் அப்ளிக்கேஷன் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 'ரூட்ஸ்டார்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இதுதான், உலகிலேயே முதன்முறையாக மனித அறிவையும் பயன்படுத்தும் நேவிகேஷன் அப்ளிக்கேஷன். இந்த அப்ளிக்கேஷனுக்கென ஸ்பெஷலாக சென்னையிலும், கும்பகோணத்திலும் இரண்டு கால் சென்டர்கள் இயங்குகின்றன. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த அப்ளிக்கேஷனைப் பார்த்ததும் ஆர்வம் பற்றிக்கொண்டது. இதை உருவாக்கியவரான டாக்டர் ராஜா சின்னத்தம்பியைச் சந்தித்துப் பேசினேன்.

 '' 'ரூட்ஸ்டார்’ அப்ளிக்கேஷனை நீங்கள் ஒரு சாதாரண அப்ளிக்கேஷனைப் போல அணுக முடியாது. எளிதாகச் சொல்ல வேண்டுமானால், மற்ற நேவிகேஷன் அப்ளிக்கேஷன்கள் வெறும் இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக்கொண்டு இயங்குபவை. ஆனால், 'ரூட்ஸ்டார்’ அப்படிக் கிடையாது. இதற்கென பிரத்யேகமாக இரண்டு கால் சென்டர்களை அமைத்திருக்கிறோம். 'ரூட்ஸ்டார்’ அப்ளிக்கேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாகவே டவுன்லோடு செய்து பயன்படுத்த ஆரம்பித்தவுடன் முதலில் தெரிவது, 'இந்த அப்ளிக்கேஷனில் கார் ஓட்டும்போது டைப் அடிப்பதோ, ப்ரவுஸ் செய்வதோ கூடாது’ என்பதுதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜிபிஎஸ் + கால் சென்டர் = ரூட்ஸ்டார்

மற்ற நேவிகேஷன் அப்ளிக்கேஷன்களைப் பயன்படுத்தும்போது, அடிக்கடி அதைத் தொட்டு ஏதாவது செய்யவேண்டியிருக்கும். அதனால், கவனச் சிதறல் ஏற்படும். 'ரூட்ஸ்டாரி’ல் இதைத் தவிர்க்க நாங்கள் தீவிரமாக உழைத்திருக்கிறோம். இப்போதைக்கு கூகுள் மேப்ஸை அடிப்படையாக வைத்து இயங்கினாலும், கூடிய விரைவில் 'ஓப்பன் ஸ்ட்ரீட்’ மேப்ஸ் மூலம் இயங்க ஆரம்பித்துவிடும்.

அப்ளிக்கேஷனைத் திறந்ததும் ரூட், அசிஸ்ட், பிளேசஸ், ஃபைண்ட் என நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் 'ரூட்’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பது மூலம் 'கால், கால்பேக், மெசேஜ்’ என மூன்று முறைகளில் நீங்கள் உங்கள் பயணத்தை அமைக்கலாம். 'கால்’ ஆப்ஷன் மூலம் கால் சென்டரை அழைக்க முடியும். 'கால்பேக்’ ஆப்ஷன் மூலம் கால் சென்டரை உங்களுக்கு அழைக்கச் சொல்லி சமிக்ஞை செய்ய முடியும்.

'எதற்கு கால் சென்டரை அழைக்க வேண்டும்?’ என்ற கேள்வி எழலாம். இங்குதான் ரூட்ஸ்டார் அப்ளிக்கேஷனின் தனித்துவம் இருக்கிறது. உதாரணத்துக்கு, நீங்கள் கூகுள் மேப்ஸில் ஓர் இடத்தைத் தேட வேண்டுமானால்... ஒன்று, மேப்பிலேயே நீங்கள் தேட வேண்டியிருக்கும். அல்லது 'சர்ச்’ ஆப்ஷன் மூலம் டைப் செய்துவிட்டு, சரியான இடத்தை கூகுள் பாயின்ட் செய்யும் வரை காத்திருக்க வேண்டும்.

ஜிபிஎஸ் + கால் சென்டர் = ரூட்ஸ்டார்

ஆனால், ரூட்ஸ்டார் அப்ளிக்கேஷனில் நீங்கள் டைப் செய்யவோ அல்லது மேப்பில் தேடவோ வேண்டியது இல்லை. கால் சென்டரில் இருந்து பேசுபவரிடம் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை மட்டும் சொல்லி விட்டால் போதும்; அந்த இடம் அண்ணா சாலையில் இருக்கும் ஒரு துணிக் கடையாக இருந்தாலும் சரி; அம்பாசமுத்திரத்தில் இருக்கும் ஸ்வீட் கடையாக இருந்தாலும் சரி; சில நொடிகளில் உங்கள் போனுக்கே மெசேஜ் போல ரூட் அனுப்பி வைக்கப்படும். அதைத் தொட்டவுடன் நேவிகேஷன் தானாக இயங்க ஆரம்பித்து விடும். இதில் நீங்கள் கால் சென்டர் வசதியைப் பயன்படுத்துவதற்கு மட்டும் கட்டணம் உண்டு. ஆனால், 'ஃபைண்ட்’ ஆப்ஷன் மூலம் இடத்தை நீங்களே கண்டுபிடித்துச் செல்ல விரும்பினால், கட்டணம் கிடையாது. ஏதாவது மருத்துவ உதவியோ, வாகனம் பழுதடைந்து விட்டாலோ, 'அசிஸ்ட்’ ஆப்ஷன், மிகவும் பயன்படும்!'' என்றார் ராஜா சின்னத்தம்பி.

ரூட்ஸ்டார் அப்ளிக்கேஷனின் பிசினஸ் டெவலப்பரான திலீப்குமார், ''இன்னொரு பெரிய வசதி, நீங்கள் இருக்கும் இடத்தையோ அல்லது நீங்கள் செல்ல விரும்பும் இடத்தையோ, நீங்கள் விரும்பியவரிடம் இந்த 'ஆப்’ மூலமாகக் காண்பிக்க முடியும். உதாரணத்துக்கு, உங்கள் நண்பரும் இந்த அப்ளிக்கேஷனை வைத்திருக்கும் பட்சத்தில், நீங்கள் 'மார்க் பிளேஸ்’ ஆப்ஷன் மூலம் மேப்பில் ஒரு இடத்தைத் தேர்வு செய்துவிட்டு, 'ஷேர்’ ஆப்ஷன் மூலம் அவருடைய போன் நம்பரைக் கொடுத்தால்போதும்; நாங்கள் உங்களுக்கு ரூட் அனுப்பியதுபோல நீங்கள் அவருக்கு நீங்கள் இருக்கும் இடத்தை மேப்பிலேயே காட்டிவிடலாம்!'' என ஆச்சரியப்படுத்தினார்.

ரூட்ஸ்டார் அப்ளிக்கேஷனைப் பயன்படுத்திப் பார்த்தேன். திருப்திகரமான வகையில் இயங்கினாலும், அடிக்கடி புதிய இடங்களுக்குப் பயணத்தில் இருப்பவர்களுக்குத்தான் இந்த ஆப் அதிகம் உதவியாக இருக்கும். அதற்கும் 'லிமிடெட்’ மற்றும் 'அன்லிமிடெட்’ என இரண்டு பிளான்கள் உள்ளன. தெரியாத இடங்களுக்கு ஒருமுறை செல்லப்போகிறீர்கள் என்றால், 'லிமிடெட்’ பிளான் மட்டும் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். வாழ்க்கையே பயணங்கள்தான் என்பவர்களுக்கு... இருக்கிறது 'அன்லிமிடெட்’ பிளான்!

ஜிபிஎஸ் + கால் சென்டர் = ரூட்ஸ்டார்