Published:Updated:

சச்சின் 0 to 100...

சச்சின் 0 to 100...

 ##~##

''24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு, விடை கொடுத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு, இனிமேல் கார்களின் மீதுதான் அதிகக் கவனம் இருக்கும்'' என்கிறார்கள் அவரது நண்பர்கள். கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக சச்சின் நேசிப்பது, கார்கள்தான். மாருதி 800 காருடன் துவங்கிய சச்சினின் கார் மோகம், இப்போது பலப் பல ஸ்போர்ட்ஸ் கார்களுடன் பறக்கிறது. 

சச்சினுக்கு வேகமான கார்கள்தான் மிகவும் பிடிக்கும். அதனால், சச்சினின் கராஜில் இருக்கும் எல்லா கார்களுமே வேகப் புயல்கள்தான். அவரிடம் இருக்கும் வேகம் குறைவான காரே 0 - 100 கி.மீ வேகத்தை 6 விநாடிகளுக்குள் கடந்துவிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செடான், எஸ்யூவி என எந்த காரை வாங்கினாலும் அதில் பவர்ஃபுல் மாடலையே தேடிப் பிடித்து வாங்கியிருக்கிறார் சச்சின். அவரது வீட்டில் இருக்கும் வேகம் குறைவான காரே இந்தியாவின் வேகமான எஸ்யூவிதான். பிஎம்டபிள்யூவின் எக்ஸ்-5 எம்50டி எஸ்யூவி வைத்திருக்கிறார் சச்சின். எம்50டி ஜெர்மனியில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட கார். இந்தியாவிலேயே இந்த மாடல் சச்சினிடம் மட்டும்தான் இருக்கிறது. 2,993 சிசி திறன்கொண்ட இந்த கார், 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 5.3 விநாடிகளில் தொட்டுவிடும்.

சச்சின் 0 to 100...

குடும்பத்தினருடன் செல்ல சச்சினுடைய சாய்ஸ் பிஎம்டபிள்யூ 760 எல்ஐ. சச்சினுக்கு என ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட இந்த காரின் கதவுகளிலும் ஹெட் ரெஸ்ட்டிலும் கிரிக்கெட் பந்தின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருக்கின்றன. 5,972 சிசி இன்ஜின்கொண்ட இந்த கார், 0 - 100 கி.மீ வேகத்தை, வெறும் 4.6 விநாடிகளில் தொட்டுவிடும்.

பிஎம்டபிள்யூ எம்-6 கிராண்ட் கூபே காரும் சச்சினிடம் உண்டு. இந்த ட்வின் டர்போ, க்ஷி8, 4,395 சிசி காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. இது 0 - 100 கி.மீ வேகத்தை 4.2 விநாடிகளில் கடக்கும்.

சச்சின் 0 to 100...

டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்கள் அடித்திருந்த பிராட்மேனின் சாதனையை சமன் செய்தபோது, ஃபியட் நிறுவனம் பரிசாக வழங்கிய ஃபெராரி மொடீனா 360 காரை விற்பனை செய்துவிட்டார் சச்சின். ஃபெராரியைப் பார்த்தாலே, சச்சின் கார் என எல்லோரும் அடையாளம் கண்டுபிடித்துவிடுவதுதான் விற்பனை செய்யக் காரணம். ஃபெராரிக்குப் பதிலாக நிஸான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியிருக்கிறார். ஃபெராரிக்குக் கொஞ்சமும் குறைந்தது அல்ல நிஸான் ஜிடிஆர். இது 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் கடந்துவிடும்.

சச்சினிடம் இருக்கும் இந்த கார்கள் இதுவரை குறைவான கிலோ மீட்டர்களே ஓடியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இனி, மனதுக்குப் பிடித்த காரில், மனதுக்குப் பிடித்த சாலையில் சச்சின் ரிலாக்ஸாகப் பறக்கலாம்!

சார்லஸ்