Published:Updated:

டோக்கியோ மோட்டார் ஷோ

டோக்கியோ மோட்டார் ஷோ

ஒரே சமயத்தில் இரண்டு ஆட்டோ   ஷோக்கள் நடந்து, உலக ஆட்டோமொபைல் பத்திரிகையாளர்களையும் ஆர்வலர்களையும் திக்குமுக்காடச் செய்துள்ளது ஆட்டொமொபைல் துறை. ஒரே நாளில் அமெரிக்க நகரமான லாஸ் ஏஞ்சல்ஸிலும், ஜப்பான் தலைநகரமான டோக்கியோவிலும் கோலாகலமாக நடந்து முடிந்த இந்த ஆட்டோ ஷோக்களில், டோக்கியோவில்தான் இந்தியாவுக்கான முக்கிய கார்கள் அறிமுகமாகி உள்ளன.

 1.ஹோண்டா ஜாஸ்

டோக்கியோ மோட்டார் ஷோ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 ##~##

புதிய ஹோண்டா ஜாஸ் காரை 2013 டோக்கியோ மோட்டார் ஷோ-வில் அறிமுகப்படுத்தியது ஹோண்டா. வெளிநாடுகளில் 'ஃபிட்’ என் அழைக்கப்படும் இந்த கார், தற்போது ஜப்பானில் பெஸ்ட் செல்லர். டிசைனில் ஸ்டைலாகவும், அதே சமயம் மிரட்டலான தோற்றத்துடன் இருக்கிறது புதிய ஜாஸ். நம் நாட்டில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கும் ஜாஸ், ஹோண்டாவின் தபுகாரா தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். நம் நாட்டில் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜினுடனும், ஹோண்டா அமேஸில் இருக்கும் 1.5 லிட்டர் 'எர்த் ட்ரீம்ஸ்’ டீசல் இன்ஜினுடனும் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில், புதிய ஜாஸ் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

2.ஹோண்டா வெஸெல் காம்பேக்ட் எஸ்யூவி

ஹோண்டா அர்பன் எஸ்யூவி கான்செப்ட்டாக அறிமுகமாகி, தற்போது தயாரிப்பு மாடலாக வந்திருக்கிறது, புதிய காம்பேக்ட் க்ராஸ் ஓவர் எஸ்யூவி வெஸெல். ஸ்டைலிங்கில் படுமிரட்டலாக இருக்கிறது. பின் கதவுகளுக்கான கைப்பிடி கண்ணுக்குத் தெரியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஹோண்டாவின் புதிய ஜாஸ் பிளாட்ஃபார்மில்தான் வெஸெல் எஸ்யூவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஜப்பானில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடனும், ஹைபிரிட் மாடலாகவும் இது அறிமுகமாகியுள்ளது. நம் நாட்டில் வெஸெல் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும், இப்போதைக்கு இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது ஹோண்டா!

டோக்கியோ மோட்டார் ஷோ

3.ஜாகுவார் எஃப் டைப் கூபே

ஜாகுவாரின் புதிய ஸ்போர்ட்ஸ் காரான எஃப் டைப் காரின் கூபே மாடல், டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. காரின் டிசைன் எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது. குறிப்பாக, காருடைய வழுக்கலான ரூஃப்லைன் செம ஸ்டைலிஷ். மூன்று மாடல்களில் அறிமுகமாகியுள்ளது எஃப் டைப் கூபே. 335 bhp சக்திகொண்ட எஃப் டைப் கூபே, 375bhpசக்தி கொண்ட எஃப் டைப் எஸ் கூபே என இரண்டு 3.0 லிட்டர் V6 இன்ஜின்கொண்ட மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. எஃப் டைப் ஆர் கூபேவில் 542bhpசக்தியை அளிக்கும் 5.0 லிட்டர் V8 சூப்பர் சார்ஜ்டு இன்ஜின் உள்ளது. இந்த மாடலில், ஜாகுவார் நிறுவனத்தின் டார்க் வெக்டரிங்குடன் (Torque Vectoring)  இணைந்து செயல்படும் எலெக்ட்ரானிக் ஆக்டிவ் டிஃப்ரன்ஷியல் உள்ளது. இதிலும் எஃப் டைப் எஸ் கூபே மாடலிலும் புதிய கார்பன் செராமிக் மேட்ரிக்ஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது!

4.நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ

டோக்கியோ மோட்டார் ஷோ

நிஸான் நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் பிராண்ட் நிஸ்மோ. 'தி காட்ஸில்லா’ என்று அழைக்கப்படும் நிஸான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரை மேலும் டியூன் செய்து வெளியிட்டு இருக்கிறது. இதுதான் தயாரிப்பு மாடல் ஜிடி-ஆர் கார்களிலேயே மிக வேகமானது. புகழ்பெற்ற நர்பர்கிரிங் ரேஸ் டிராக்கை 7 நிமிடங்கள், 8 விநாடிகளில் லேப் செய்து, இந்த டிராக்கிலேயே வேகமான வால்யூம் ப்ரொடக்ஷன் காருக்கான சாதனையைச் செய்து இருக்கிறது. ஏரோடைனமிக்ஸ், சஸ்பென்ஷன், எடை குறைத்தல், டர்போ சார்ஜர் மற்றும் எக்ஸாஸ்ட் என பல இடங்களில் டியூன் செய்யப்பட்டுள்ளது. காரின் இதயமான 3.6 லிட்டர் V6 இன்ஜின் மேலும் டியூன் செய்யப்பட்டு இப்போது 600 bhp சக்தியை அளிக்கிறது. மேலும், இந்த இன்ஜினை டியூன் செய்திருக்க முடியுமாம். ஆனால், அவ்வளவு சக்தியை இதன் கியர்பாக்ஸ் தாங்காது என்பதால், இதற்கு மேல் நிஸ்மோ நிறுவனம் டியூன் செய்யவில்லை!

5.போர்ஷே மக்கான் எஸ்யூவி

டோக்கியோ மோட்டார் ஷோ

'ஸ்போர்ட்ஸ் கார் ஆஃப் தி காம்பேக்ட் எஸ்யூவிஸ்’ என போர்ஷே தனது லேட்டஸ்ட் எஸ்யூவியான மக்கான் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே போர்ஷேவிடம் 'கெய்ன்’ என்ற ஒரு எஸ்யூவி இருந்தாலும், அதைவிட காம்பேக்ட்டான, ஸ்போர்ட்டியான டைனமிக்ஸ் கொண்ட ஒரு எஸ்யூவி வேண்டும் என்பதை போர்ஷே நிறுவனம் உணர்ந்ததால் பிறந்த கார்தான் போர்ஷே மக்கான். வடிவமைப்பில் தனது அண்ணனான 'கெய்ன்’ காரை அதிகம் நினைவூட்டுகிறது.

6.ஃபோக்ஸ்வாகன் ட்வின் அப்

டோக்கியோ மோட்டார் ஷோ

ஃபோக்ஸ்வாகன் ஏற்கெனவே ‘XL1’ என்ற காருடன் ஆட்டோமொபைல் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது அதே காரின் ஹைபிரிட் சிஸ்டத்தை, 'அப்’ ஹேட்ச்பேக் காருக்குப் பொருத்தியுள்ளது. வெறும் கான்ப்செட்டாக மட்டுமே இந்த காரைக் காண்பித்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இதன் மைலேஜ் ஒரு லிட்டர் டீசலுக்கு 91 கி.மீ. இந்த கார் தயாரிப்புக்கு வருகிறதா என்பதைப் பற்றி ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. அப்படியே தயாரித்து விற்பனைக்கு வந்தாலும் இதன் விலை யாராலுமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்!

7.2014 மினி

டோக்கியோ மோட்டார் ஷோ

உலகின் மிகப் பிரபலமான கார்களில் ஒன்றான மினி காரின் 2014 மாடல், டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதற்கு முதல் நாள்தான் முதன்முதல் மினி காரை வடிவமைத்த சர் அலெக் இஸிக்னாஸில் பிறந்தநாள். அதனால், அன்றைக்கு (நவம்பர் 18) மினியின் ஆக்ஸ்ஃபோர்டு தொழிற்சாலையில் வைத்துதான் கார் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய மினி காரின் டிசைன் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இதுநாள் வரை மினியின் டிசைனில் இருந்த ஒரு கிக் இப்போது இல்லை. மேலும், பிஎம்டபிள்யூ குழுமத்தின் புத்தம் புதிய UKL1 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரும் இதே ஃப்ரன்ட் வீல் டிரைவ் பிளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்பட உள்ளது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வந்திருக்கிறது புதிய மினி. அடுத்த அண்டு நம் நாட்டில் புதிய மினி விற்பனைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது!

8.மெர்சிடீஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஜிடி ஃபைனல் எடிஷன்

டோக்கியோ மோட்டார் ஷோ

இந்த ஃபைனல் எடிஷன் காருடன் இரண்டு விஷயங்களுக்கு முடிவு கட்டுகிறது மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம். ஒன்று, எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் கார். மற்றொன்று, இதில் இருக்கும் 6.3 லிட்டர் V8 இன்ஜின். இனி, இந்த இன்ஜின் பென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படாது. அதேபோல்தான் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் காரும். இது, வெறும் 350 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. கூபே மற்றும் கன்வெர்டிபிள் பாடி ஆப்ஷன்களுடன் கிடைக்கும் இந்த கார், வெறும் ஜிடி மாடலில் மட்டுமே கிடைக்கும். இதில் இருக்கும் 6.3 லிட்டர் V8 இன்ஜின் 591 bhp சக்தியை 6,800 ஆர்பிஎம்-லும் 66.26kgmடார்க்கை 4,750 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காருக்கு மாற்றாக, இன்னொரு ஸ்போர்ட்ஸ் காரை பென்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதில்லை. ஆனால், 'எஸ்எல்சி’ என்று அழைக்கப்படும், போர்ஷே 911 போன்ற கார்களுடன் போட்டி போடும் ஒரு சின்ன ஸ்போர்ட்ஸ் காரை, பென்ஸ் நிறுவனம் ஐரோப்பில் தீவிரமாக டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது!