Election bannerElection banner
Published:Updated:

'போர்' வெல்! கமர்ஷியல் வாகனம்

'போர்' வெல்! கமர்ஷியல் வாகனம்

 ##~##

நம் நாட்டில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடிய சமயத்தில், அதை ஓரளவு தீர்க்க வந்தவைதான் போர்வெல் இயந்திரங்கள். மேனுவல் மோட்டார், கம்ப்ரஷர் மெஷின் என ஆழம், அளவுக்குத் தகுந்தவாறு இருக்கின்றன. இதில், லாரியுடன் இணைந்த போர்வெல் இயந்திரம் பற்றி, திண்டுக்கல் மாவட்ட போர்வெல் சங்கத் தலைவர் நடராஜிடம் பேசினோம்.

 ''போர்வெல் தொழில் முன்பு இருந்ததைப் போல சிறப்பாக இல்லை. நிறைய முதலீடு தேவைப்படும் இந்தத் தொழிலில், லாபம் அதற்கு ஏற்றதுபோலக் கிடைப்பது இல்லை. பெரிய போர்வெல் இயந்திரத்தில், 6.5 இன்ச், 4.5 இன்ச் என இரண்டு அளவுகள் உள்ளன. இதில் 6.5 இன்ச் போர்வெல், பெரும்பாலும் தொழிற்சாலைகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் ஏற்றவை. 4.5 இன்ச் போர்வெல், வீட்டுக்குப் பயன்படுத்துவது. போர்வெல் இயந்திரத்துக்கு எனத் தனியாக வாகனம் கிடையாது. சாதாரண லாரி சேஸி மட்டும் வாங்கி, அதில் போர்வெல் இயந்திரத்தைப் பொருத்த வேண்டும். அசோக் லேலாண்ட், மஹிந்திரா, ஏஎம்டபிள்யூ, மான் போன்ற லாரிகளில், கம்ப்ரஷர் வாங்கிப் பொருத்த வேண்டும்.

அடுத்து போர்வெல் போடத் தேவையான பைப், மாஸ்டர், பெட், ரிக் மெஷின், கியர்பாக்ஸ் போன்றவற்றை வாங்கி செட்  செய்ய வேண்டும். 6.5 இன்ச் போர்வெல்லுக்குத் தேவையான பைப்புகளின் எடை அதிகம் என்பதால், அதை எடுத்துச் செல்ல, தனியே ஒரு லாரி தேவைப்படும்.

'போர்' வெல்! கமர்ஷியல் வாகனம்

லாரி சேஸியின் விலை சுமார் 20 லட்சம். இதை போர்வெல் மெஷினுக்கு ஏற்ற வகையில் பாடி கட்டி முடிக்கும்போது, 30 லட்சம் ஆகிவிடும். கம்ப்ரஷரின் விலை மட்டுமே 30 லட்சம். பின்பு, பைப்புகள், தேவையான உபகரணங்கள், இன்னொரு லாரி என எல்லாம் சேர்த்து ஒரு கோடி ரூபாய் வரை ஆகிவிடும். இதுவே, 4.5 இன்ச் மெஷின் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை ஆகும்.

போர்வெல் தோண்ட, முதல் 300 அடிகள் தோண்ட அடிக்கு 60 ரூபாய் வீதமும், 300 அடிக்கு மேல் 65 ரூபாயில் இருந்து 75 ரூபாய் வரை கட்டணம் வாங்குகிறோம். பூமியைத் தோண்டும் கருவியான ஹேமரை 10,000 அடிக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஹேமரில் இருக்கும் ட்ரில்லிங் பிட் 2,000 அடிக்கு ஒரு முறை தீட்ட வேண்டும். நல்ல முறையில் பராமரித்துவந்தால், கம்ப்ரஷர் 25 ஆண்டுகள்கூட உழைக்கும்.

ஆனால், இந்தத் தொழில் சில பிரச்னைகளும் உள்ளன. ராடு உடைவது, ஹேமர் சிக்கிக்கொள்வது என நடந்தால், செலவு பழுத்துவிடும். ஒரு போர்வெல் போட்டு முடித்தால், 10,000 ரூபாயில் இருந்து 25,000 வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தொடர்ந்து வேலைக் கிடைத்தால்தான், பணம் மிச்சம் ஆகும். இல்லாவிட்டால் வட்டி கட்டி மாளாது'' என்கிறார் நடராஜ்.

   உ.சிவராமன்  வீ.சிவக்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு