Published:Updated:

நியூட்ரல்!

நியூட்ரல்!

 ##~##

ரு பக்கா 100 சிசி பைக்கின் பெஞ்ச் மார்க், மைலேஜ்தான். இதைத் தெளிவாக உணர்ந்துகொண்ட பஜாஜ், பைக்கின் பெயரிலேயே மைலேஜை வைத்து 'டிஸ்கவர் 100M’ என வைத்து கோதாவில் இறங்கியிருக்கிறது. 'டிஸ்கவர் பிராண்ட் பெயரில் பஜாஜ் நிறுவனம் இன்னும் எத்தனை பைக்குகளைத்தான் களம் இறக்குமோ?’ என்ற கேள்வியை ஒரு பக்கம் வைத்துவிட்டு, 'இந்த 100 எம்’ எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்!

 மற்ற டிஸ்கவர் பைக்குகளுக்கும் இதற்கும் டிசைன் அளவில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. 100 டி பைக்கின் அலுமினியம் சைடு பேனல்கள் பார்க்கச் சாதாரணமாக இருக்கும். இதில் வித்தியாசமான கொடுக்கப்பட்டுள்ளதுடன் கிராஃபிக்ஸும் சேர்த்திருக்கிறார்கள். அதேசமயம், இதில் 100டி பைக்கைவிட சின்ன கொள்ளளவுகொண்ட பெட்ரோல் டேங்க்கைக் கொடுத்துள்ளது பஜாஜ். 100 எம்-ல் இருப்பது 9.5 லிட்டர் டேங்க். 100டி-ல் இருப்பதோ 10 லிட்டர் டேங்க்.

நியூட்ரல்!

100 எம் பைக்கின் மிகப் பெரிய மைனஸ், இதன் இருக்கை. ரொம்பவே தட்டையாக, குஷன் ஏதும் இல்லாமல் படுமோசமாக இருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து இந்த பைக்கை ஓட்ட முடியவில்லை. இருக்கை சொதப்பலாக இருந்தாலும் ஆறுதல் தரும் விஷயம் இதன் சஸ்பென்ஷன். பின் பக்கம் இருக்கும் நைட்ராக்ஸ் ட்வின் சஸ்பென்ஷன் சிறப்பாகவே இருக்கிறது. உயரமாக இருப்பவர்கள் இந்த பைக்கை டிராஃபிக்கில் சமாளிப்பது சிரமம். யு டர்ன் எடுக்கும்போது முட்டியில் இடிக்கிறது ஹேண்டில்பார். மற்றபடி ரைடிங் பொசிஷன் வசதியாக உள்ளது.

டிஸ்கவர் 100எம் பைக்கில் இருப்பது 4 வால்வ் DTS-i ட்வின் ஸ்பார்க் இன்ஜின். 102 சிசி கொள்ளளவுகொண்ட இந்த இன்ஜின் 9.17 bhp சக்தியை 8,000 ஆர்பிஎம்-மிலும் 0.92 kgm டார்க்கையும் அளிக்கிறது. இந்த இன்ஜின் 'லாங் ஸ்ட்ரோக்’ டைப் என்பதால், ஹை கியரிலும், குறைந்த வேகங்களில் இருந்து இழுக்கும் என்று பஜாஜ் சொல்கிறது. ஆனால், ரியல்-லைஃப் டிராஃபிக்கில் இது பெரிதாகத் தெரியவில்லை. காரணம், சொதப்பல் கியர்பாக்ஸ்தான். நாம் ஓட்டிய பைக்கில், சில சமயம் மூன்றாவது கியரில் இருந்து இரண்டாவது கியருக்கு மாற்றும் போது, கியர் விழாமல் டிராஃபிக்கில் பல்ஸ் ஏற்றியது இந்த கியர்பாக்ஸ். மேலும், ஆல்-அப் ஷிஃப்ட்டிங் முறை வசதியாக இல்லை.

நியூட்ரல்!

இன்ஜின் சத்தம் செம ஸ்போர்ட்டி. இன்ஜின் சத்தத்தின் காரணமாக, 'ஆஹா, 100 சிசி பைக் இவ்வளவு வேகமாகப் போகிறதே!’ என ஃபீல் பண்ணிக்கொண்டே ஸ்பீடோ மீட்டரைப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். காரணம், மணிக்கு 40 கி.மீ வேகத்தில் சென்றால்கூட ஸ்போர்ட்டி ஃபீல் கிடைக்கிறது. இதன் மிட்-ரேஞ்ச் பவர் சுமாராகத்தான் இருக்கிறது. அதிர்வுகளைப் பொறுத்துக்கொண்டால், இன்ஜினின் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸை அனுபவிக்கலாம். டிஸ்கவர் 100 எம் பைக்கின் மைலேஜ், ஓட்டும் விதத்தைப் பொறுத்து லிட்டருக்கு 55 கி.மீ-யில் இருந்து 62 கிமீ வரை கிடைக்கிறது.

முன்பக்க டிஸ்க் பிரேக் நன்றாக இயங்குகிறது. ஆனால், பின்பக்க டிரம் பிரேக் சுமார்தான். ஈரமான சாலைகளில் டயர்கள் நல்ல கிரிப்பை அளித்தாலும், பதற்றத்தில் பிரேக் போடும்போது, கொஞ்சம் ஸ்கிட் ஆகிறது.

டிஸ்கவர் பைக்குகளின் முக்கிய அம்சம் ஸ்டைலிங். ஆனால், ஸ்டைல்தான் முக்கியம் என்றால், 100 சிசி பைக் செக்மென்ட்டில் ஸ்ப்ளெண்டர் ஹிட் ஆகியிருக்க முடியாது. 100 சிசி பைக் செக்மென்ட்டின் முக்கியமான செல்லிங் பாயின்ட், மைலேஜ் மற்றும் கையாளுமைதான். மைலேஜில் திருப்திப்படுத்தும் 100 எம், கியர்பாக்ஸ் மற்றும் இருக்கை விஷயங்களில் சொதப்பிவிடுகிறது. ஆனால், பைக்கின் ஒட்டுமொத்தத் தரம் சிறப்பாகவே உள்ளது. உண்மையில் பஜாஜ் டிஸ்கவர் 100எம், கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடலாம் என்று சொல்லக்கூடிய பைக்கும் இல்லை; வேண்டவே வேண்டாம் என்று நிராகரிக்கக்கூடிய பைக்கும் இல்லை!

ர.ராஜா ராமமூர்த்தி >> ப.சரணக்குமார்