Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

கவிமுருகன், கள்ளக்குறிச்சி.

மோட்டார் கிளினிக்

டொயோட்டா இனோவாவுக்குப் போட்டியாக ஹோண்டாவும் பெரிய எம்யூவி காரை விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக மோட்டார் விகடனில் படித்தேன். அந்த கார் எப்போது விற்பனைக்கு வரும்?

மோட்டார் கிளினிக்
 ##~##

இனோவாவுக்குப் போட்டியாக, ஹோண்டா களம் இறக்கப்போகும் எம்யூவி-யின் பெயர் ஃப்ரீட் (Freed).  பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கார், இந்தியாவில் 2016-ம் ஆண்டுதான் விற்பனைக்கு வரும். இதன் விலை இனோவாவைவிட கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் குறைவாக இருக்கும்.

செ.பிரபாகரன், கரூர்.

மோட்டார் கிளினிக்

என் மனைவி முதுகு வலியால் அவதிப்படுகிறாள். அவளுக்கு கார் பரிசளிக்க விரும்புகிறேன். அவளுடைய அலுவலகம் வீட்டில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 15 கி.மீட்டருக்கு மேல் கார் சவாரி  இருக்காது. சொகுசாக உட்கார்ந்து ஓட்டும் வகையில் டிரைவர் சீட் இருக்க வேண்டும். என்னுடைய பட்ஜெட் 7 லட்சம். எந்த கார் வாங்கலாம்?

 சொகுசான இருக்கைகள் மற்றும் டிரைவிங் பொசிஷன் கொண்ட 7 லட்சம் ரூபாய் கார் என்றால், நீங்கள் ஸ்கோடா ஃபேபியா வாங்கலாம். தினமும் 15 கி.மீ-க்குள்தான் பயணம் இருக்கும் என்பதால், பெட்ரோல் மாடலையே தேர்ந்தெடுக்கலாம். ஃபேபியாவின் தயாரிப்பை ஸ்கோடா நிறுத்திவிட்டதால், அதிக தள்ளுபடிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது ஃபேபியா. கொடுக்கும் பணத்துக்குச் சிறந்த, சொகுசான கார்!

ஜான் வெஸ்லி, நாகப்பட்டினம்.

மோட்டார் கிளினிக்

கேடிஎம், 200 மற்றும் 390 பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்கிறது. ஆனால், கேடிஎம் 125சிசி பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக ஆன்லைனில் படித்தேன். இது உண்மையா?

 புனேவில் உள்ள தொழிற்சாலையில்தான் டியூக் 125, 200 மற்றும் 390 பைக்குகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது பஜாஜ். ஆனால், 125சிசி மட்டும் இந்தியாவில் விற்பனைக்கு வராது. அதற்குப் பதில், ஹுஸ்க்குவானா  மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை வாங்கியிருக்கும் பஜாஜ், அந்த பிராண்டின் பெயரில் 125 உட்பட 400 சிசி வரையிலான பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது.

அறிவுமதி, காரமடை.

மோட்டார் கிளினிக்

என்னுடைய நண்பர் ஹூண்டாய் ஐ20 பெட்ரோல் கார் வைத்திருக்கிறார். 2009-ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த கார், இதுவரை 65,000 கி.மீ ஓடியிருக்கிறது. இதை என்ன விலைக்கு வாங்கலாம்?

ஹூண்டாய் ஐ20 காரைப் பொறுத்தவரை டீசலைவிட, பெட்ரோல் கார்களுக்கு ரீ-சேல் மதிப்பு குறைவு. நான்கு ஆண்டுகள் பழைய மாடல் என்பதோடு, 65,000 கி.மீ வரை ஓடியிருப்பதால், 3 லட்சம் ரூபாய்க்குள் இந்த காரை வாங்கலாம்.

இக்பால் முகமது, விருதுநகர்.

மோட்டார் கிளினிக்

என் மனைவி, மகள் இருவருக்குமே காருக்குள் ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரம் பயணம் செய்தாலே வாந்தி, தலைசுற்றல் வந்துவிடுகிறது. இதனாலேயே கார் வாங்கத் தயங்குகிறேன். இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

டாக்டர் பிரபாகரன்,

நுரையீரல் நோய்கள் சிறப்பு மருத்துவர், மதுரை.

மோட்டார் கிளினிக்

கார் அல்லது வாகனங்களில் பயணிக்கும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு, 'மோஷன் சிக்னெஸ்’ என்று பெயர். அதாவது, வாகனம் வேகமாக நகர்ந்துகொண்டே இருக்கும்போது, நகரும் பிம்பங்களின் மீது நம் கண் பார்வை திரும்புகிறது. தொடர்ந்து அது ஓர் இடத்தில் நிலைக்காமல், அடுத்தடுத்த காட்சிகளைப் பார்த்தபடியே கண்களும் பயணிக்கிறது. ஃபோகஸ் மாறிக்கொண்டே இருப்பதை மூளை கிரகித்து அடுத்தடுத்த காட்சிகளுக்கு நம்மை அனுமதிக்கும். ஆனால், 'மோஷன் சிக்னெஸ்’ உள்ளவர்களுக்கு, காட்சிகளை பேலன்ஸ் செய்ய முடியாமல் மூளை திணறும். இதனால் தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் ஏற்படும். மேலும், காரில் இருக்கும் பெர்ஃப்யூம், கவர், பிளாஸ்டிக், ரப்பர் ஷீட், பிளாஸ்டிக் இவற்றின் வாசனையும் சேர்ந்து குமட்டல், வாந்தியை ஏற்படுத்தும். சுவாசிக்கும் ஏ.சி காற்றால், மூச்சுவிடுவதிலும் சிரமம் ஏற்படும்போது, எல்லா பாதிப்புகளும் சேர்ந்துகொள்ளும். இந்த அலர்ஜிக்கு மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால், வாந்தி, தலைசுற்றலில் இருந்துத் தப்பிக்க ஓர் உபாயம் உண்டு.

டிரைவர் சீட்டுக்கு அருகில் இருக்கும் சீட்டில் உட்கார்ந்து பக்கவாட்டில் பார்வையைத் திருப்பாமல், நேராக ரோட்டைப் பார்த்தபடி பயணிப்பது இந்த அலர்ஜி உள்ளவர்களுக்குச் சரியான தீர்வாக இருக்கும். பிளாஸ்டிக், ரெக்ஸின் அல்லது தோல் சீட் கவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, காட்டன் துணியில் சீட் கவர்களைப் போடலாம். காருக்குள் அதிக நெடியுள்ள பெர்ஃப்யூம்களைத் தவிர்த்து, யாருக்கு அலர்ஜியோ அவருக்குப் பிடித்த பெர்ஃப்யூம்களைப் அளவாகப் பயன்படுத்தலாம். அடிக்கடி காரின் ஃப்ளோர் மேட்டை உதறி, வெயிலில் காயவைத்துப் பயன்படுத்தினால், ரப்பர் வாசனை குறையும். நெடுந்தூரம் பயணம் முடிந்து வந்தவுடன், சிறிது நேரம் காரின் கதவுகளைத் திறந்துவையுங்கள். முடிந்தவரை ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது, இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு நல்லது.