Published:Updated:

வணக்கம்!

வணக்கம்!

வணக்கம்!

விழும்போது மடி தந்து, எழும்போது தோள் தந்து உற்சாகப்படுத்துவதுதான் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மற்றும் இதழ்களின் கடமை. அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான், மோட்டார் விகடன் விருதுகள்.

இந்த ஆண்டு, கார் மற்றும் பைக் மார்க்கெட்டுக்கு செம சவாலான காலகட்டம். என்றாலும், ஃபோர்டு எக்கோஸ்போர்ட், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என ஒவ்வொரு செக்மென்ட்டிலும் பல புதிய வரவுகளை இந்த ஆண்டு பார்த்தது.

'இந்த ஆண்டின் சிறந்த கார்’ விருதை வெல்ல, 13 கார்கள் போட்டி போட்டன. அதேபோல, 'சிறந்த பைக்’ விருதுக்காக, 10 பைக்குகள் களத்தில் நின்றன.

விலைக்கேற்ற மதிப்பு, சுற்றுச்சூழலோடு இயைந்த இன்ஜின் தொழில்நுட்பம், பாதுகாப்பு, சௌகரியம், வடிவமைப்பில் புதுமை, மைலேஜ், புதிய அம்சங்கள், பெர்ஃபாமென்ஸ், கையாளுமை, சஸ்பென்ஷன், பிரேக்கிங், கியர் என எண்ணற்ற அளவுகோள்களை வைத்தே, எது இந்த ஆண்டின் சிறந்த கார் மற்றும் பைக் என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதற்கு, மோட்டார் விகடனின் நடுவர் குழுவோடு, வாசகர்களாகிய நீங்களும் இணைந்து பெரிதும் உதவினீர்கள். மனமார்ந்த நன்றிகள்.

சிறந்த கார் மற்றும் பைக்; சிறந்த ஹேட்ச்பேக் கார்; சிறந்த சொகுசு ஹேட்ச்பேக் கார்; சிறந்த மிட் சைஸ் கார்; சிறந்த எஸ்யூவி; சிறந்த எம்பிவி; சிறந்த சொகுசு கார்; விலைக்கேற்ற மதிப்புள்ள கார் ஆகியவற்றுடன் சிறந்த பைக், சிறந்த வெளிநாட்டு பைக், சிறந்த கார் இன்ஜின், சிறந்த பைக் ரேஸர், சிறந்த கார் ரேஸர், சிறந்த கார் நிறுவனம் ஆகிய பல்வேறு விருதுகளுக்குத் தகுதியான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து, இந்த இதழில் உங்கள் முன்பு நிறுத்தியிருக்கிறோம்.

தங்களின் அடுத்த கார் மற்றும் பைக் எது என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கும் இந்த விருதுகள் வாசகர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

வணக்கம்!