Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

வருகிறது கிராண்ட் ஐ10 செடான்!  டிசையர், அமேஸ¨டன் போட்டி!

 ##~##

ஹூண்டாய் சில மாதங்களுக்கு முன்பு, விற்பனைக்குக் கொண்டுவந்த கிராண்ட் ஐ10 காரின் செடான் மாடலை, பிப்ரவரி மாத டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடவிருக்கிறது. சென்னை அருகே டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு வரும் இந்த காரைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகர் ஜி.ஆர்.சோழன். 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செடான் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின்கள் இடம் பிடிக்கும். 1.1 லிட்டர் டீசல் இன்ஜின் இந்த காரில் இல்லை. 6 லட்சம் ரூபாய்க்குள் இந்த காரை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது ஹூண்டாய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்கார்டு விற்பனை நிறுத்தம்!

விற்பனையில் தேய்ந்துகொண்டு போன அக்கார்டு காரின் விற்பனை, புதிய ஸ்கோடா ஆக்டேவியாவின் வருகையால், அதள பாதாளத்துக்குப் போய்விட்டது. 2013 ஜூன் முதல் நவம்பர் வரை வெறும் 215 அக்கார்டு கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. அதனால், ஹோண்டா நிறுவனம் அக்கார்டு காரின் விற்பனையை நிறுத்துவது என முடிவு செய்துள்ளது.

விற்பனைக்கு வந்தது Z1000 மற்றும் நின்ஜா 1000

மோட்டார் நியூஸ்

கவாஸாகி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களான 2014 Z1000 மற்றும் நின்ஜா 1000 பைக்குகள் புனேவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டு பைக்குகளின் விலையுமே 12.5 லட்சம் ரூபாய் (எக்ஸ்ஷோரூம், புனே). இதில், Z1000 பைக் கவாஸாகியின் லேட்டஸ்ட் 'சுகோமி’ டிசைன் கொள்கையின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இருப்பது 1,043 சிசி, 140 php சக்திகொண்ட இன்ஜின். மற்றொரு பைக்கான நின்ஜா 1000-ல் இருப்பதும் இதே இன்ஜின்தான். இரண்டிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கின்றன. புனேவில் இருப்பதுபோல விரைவில் டெல்லியில் பிரத்யேக ஷோரூம் திறக்க இருக்கும் கவஸாகி நிறுவனம், சென்னை அல்லது பெங்களூருவில் டீலர்ஷிப் திறக்க இருக்கிறது.

சும்மா அதிருதில்ல...!

2013 தேசிய பைக் ரேஸ் போட்டிகளின் இறுதிச் சுற்று, சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் மைதானத்தில், டிசம்பர் 15-ம் தேதி நடைபெற்றது. இறுதி ரேஸில் பல அதிரடித் திருப்பங்கள் அரங்கேறின. முதலில் நடந்த யமஹா ஆர்-15 'ஒன் மேக்’ ரேஸ் போட்டியில், முதல் லேப் துவங்கி இறுதி வரை ஆனந்த் ராஜின் விஸ்வரூபம்தான். கடைசி வரை இவர் யாரையும் முந்த விடவில்லை. அவரிடம் இருந்து வெற்றியைத் தட்டிப் பறிக்க, கிடைத்த கேப்பில் எல்லாம் முண்டியடித்த சுதாகரால், இரண்டாம் இடம்தான் பிடிக்க முடிந்தது.

மோட்டார் நியூஸ்

ஹோண்டா சிபிஆர் 250ஆர் ரேஸ் போட்டியில், இரண்டு பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி வானத்தில் பறக்க... ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு பற்றிக்கொண்டது. மோதிக்கொண்ட இரண்டு ரேஸர்களுக்குமே பலத்த காயங்கள். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஹோண்டா ரேஸில் ரஜினி முதல் இடம் பிடிக்க, தினேஷ் குமார் இரண்டாம் இடம் பிடித்தார்.

கோவை ஆட்டோ ஷோ!

ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் சொர்க்கபுரியாக விளங்கும் கோவையில், அவர்களின் ஆர்வத்திற்கு விருந்தளிப்பது போல அமைந்திருந்தது கடந்த டிசம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மூன்றாம் ஆண்டாக இந்த ஆண்டும் வெற்றிகரமாக நடைபெற்றது.

மோட்டார் நியூஸ்

கோவை ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் - டீலர்ஸ் அசோசியேஷன் சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், மொத்தம் 166 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. 135 வாகன உதிரிபாக அரங்குகளும், 31 வாகன ஷோரூம் அரங்குகளும் இருந்தன. இது பற்றி கோவை ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ்- டீலர்ஸ் அசோசியேஷன் தலைவர் சிவக்குமார் கூறியதாவது, 'இங்கு தமிழக டீலர்கள் மட்டுமின்றி, வட இந்திய டீலர்கள்கூட தங்கள் அரங்குகளை அமைத்தனர். அத்தோடு இரு கொரிய நிறுவங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றன. இம்முறை சுமார் 50,000 பார்வையாளர்கள் கண்காட்சிக்கு வருகை புரிந்தனர். இதில் கல்லூரி, பள்ளி மாணவர்களும் அடக்கம்' என்றார்.

-   ஞா.சுதாகர்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ

உலக ஆட்டோமொபைல் ஷோக்களில் முக்கிய இடத்தை, இந்திய ஆட்டோ ஷோவும் பிடித்துவிட்டது. 1986-ம் ஆண்டில் இருந்து நடந்துவரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, முதன்முறையாக டெல்லி ப்ரகதி மைதானத்தில் இருந்து 30 கி.மீ தாண்டி, கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் 'இந்தியா எக்ஸ்போ’ சென்டரில் நடக்க இருக்கிறது.

2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், உள்கட்டமைப்பு வசதிகள் சரியாகச் செய்யப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக நாட்களிலும் பொதுமக்கள் கூட்டம் உள்ளே புகுந்தது; டெல்லி டிராஃபிக் நெருக்கடியால் பல முக்கிய விருந்தினர்கள் வரமுடியாமல் போனது. கடந்த ஆண்டு இதுபோல குளறுபடிகள் நடந்ததால்தான் இந்த முறை இடமாற்றம் நடத்திருக்கிறது.

மோட்டார் நியூஸ்

2014 ஆட்டோ எக்ஸ்போ நடக்கும் இடமான இந்தியா எக்ஸ்போ சென்டர், டெல்லி- நொய்டா 6 வழிச் சாலையில் அமைந்துள்ளது. புதிய இடம் 58 ஏக்கர் பரப்பளவுகொண்டது. ப்ரகதி மைதானத்தைவிட இது சின்ன இடம்தான் என்றாலும் இந்த முறை கார், பைக் என வாகனக் கண்காட்சி மட்டுமே இங்கே நடைபெற இருக்கிறது. உதிரிபாகங்கள் கண்காட்சி, ப்ரகதி மைதானத்திலேயே நடைபெற இருப்பதால், நெரிசல் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

வழக்கமாக ஜனவரி மாதம் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ, இந்த முறை பிப்ரவரி மாதம் நடப்பதால், டெல்லியின் கடுங்குளிரில் இருந்தும் தப்பிக்கலாம். பொதுமக்களின் பார்வைக்காக, பிப்ரவரி 7 முதல் 11 வரை நடக்க இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கான டிக்கெட்டுகளை 'புக்மைஷோ.காம்’ தளத்தின் மூலம் வாங்கலாம்.

உலக ஆட்டோமொபைல் ஷோக்களில் முக்கிய இடத்தை, இந்திய ஆட்டோ ஷோவும் பிடித்துவிட்டது. 1986-ம் ஆண்டில் இருந்து நடந்துவரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, முதன்முறையாக டெல்லி ப்ரகதி மைதானத்தில் இருந்து 30 கி.மீ தாண்டி, கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் 'இந்தியா எக்ஸ்போ’ சென்டரில் நடக்க இருக்கிறது.

2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், உள்கட்டமைப்பு வசதிகள் சரியாகச் செய்யப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக நாட்களிலும் பொதுமக்கள் கூட்டம் உள்ளே புகுந்தது; டெல்லி டிராஃபிக் நெருக்கடியால் பல முக்கிய விருந்தினர்கள் வரமுடியாமல் போனது. கடந்த ஆண்டு இதுபோல குளறுபடிகள் நடந்ததால்தான் இந்த முறை இடமாற்றம் நடத்திருக்கிறது.

2014 ஆட்டோ எக்ஸ்போ நடக்கும் இடமான இந்தியா எக்ஸ்போ சென்டர், டெல்லி- நொய்டா 6 வழிச் சாலையில் அமைந்துள்ளது. புதிய இடம் 58 ஏக்கர் பரப்பளவுகொண்டது. ப்ரகதி மைதானத்தைவிட இது சின்ன இடம்தான் என்றாலும் இந்த முறை கார், பைக் என வாகனக் கண்காட்சி மட்டுமே இங்கே நடைபெற இருக்கிறது. உதிரிபாகங்கள் கண்காட்சி, ப்ரகதி மைதானத்திலேயே நடைபெற இருப்பதால், நெரிசல் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

வழக்கமாக ஜனவரி மாதம் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ, இந்த முறை பிப்ரவரி மாதம் நடப்பதால், டெல்லியின் கடுங்குளிரில் இருந்தும் தப்பிக்கலாம். பொதுமக்களின் பார்வைக்காக, பிப்ரவரி 7 முதல் 11 வரை நடக்க இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கான டிக்கெட்டுகளை 'புக்மைஷோ.காம்’ தளத்தின் மூலம் வாங்கலாம்.

விற்பனைக்கு வந்தது டிரையம்ப்!

மோட்டார் நியூஸ்

இங்கிலாந்தின் புகழ்பெற்ற பைக் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் நிறுவனம், 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தனது பைக்குகளை அறிமுகப்படுத்தியது. உடனடியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த பைக்குகள், கிட்டத்தட்ட இரண்டு ஆன்டுகள் தாமதத்துக்குப் பிறகு, கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. டிரையம்ப், 10 பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இதில், 6 பைக்குகள் மானேசரில் உள்ள டிரையம்ப் தொழிற்சாலையில் CKD முறையில் அசெம்பிள் செய்யப்படும். மற்ற 4 பைக்குகளும் CBU முறையில் இறக்குமதி செய்து விற்கப்படும். டிரையம்ப் பைக்குகள் 5.7 லட்சத்தில் துவங்கி, 13 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் இசுஸ¨!

மோட்டார் நியூஸ்

ஜப்பானைச் சேர்ந்த இசுஸ¨ நிறுவனத்தின் டீசல் இன்ஜின்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்தியாவில் தற்போது தனியாகக் களம் இறங்கியிருக்கும் இசுஸ¨ நிறுவனம் எம்யூ-7 எனும் எஸ்யூவி கார் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. சென்னை திருவள்ளூர் அருகே உள்ள மிட்சுபிஷி தொழிற்சாலையில்தான் தற்போது எம்யூ-7 கார்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. சென்னை அருகே நெல்லூரில் அமைந்திருக்கும் ஸ்ரீசிட்டியில் தொழிற்சாலை அமைத்துவரும் இசுஸ¨ நிறுவனம், இன்னும் இரண்டு ஆண்டுங்களில் அங்கே தயாரிப்புப் பணிகளைத் துவக்கிவிடும்.

கோ ப்ரோ - ஐஷர்!

கமர்ஷியல் வாகனச் சந்தையில் தனக்கென தனித் தடம் பதித்துள்ள ஐஷர் நிறுவனம், ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, மத்தியப் பிரதேச மாநிலம் பிதாம்பூரில் உள்ள தொழிற்சாலையில், கமர்ஷியல் வாகனங்களைத் தயாரிக்கிறது. பாதுகாப்பு தொழில் நுட்பத்துக்குப் பெயர் பெற்ற வால்வோ நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன், கார்களைத் தயாரிப்பதுபோல பிளாட்பார்ம் அமைப்பில் கனரக வாகனங்களை நவீன முறையில் இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

மோட்டார் நியூஸ்

கடந்த டிசம்பர் 2 அன்று, பீதாம்பூர் தொழிற்சாலையில் நடந்த நிகழ்ச்சியில், 'கோ ப்ரோ’ சீரிஸ் எனும் அடுத்த தலைமுறை வாகனங்களை அறிமுகப்படுத்தியது ஐஷர். ''இந்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரவிருக்கும் 25 டன் முதல் 49 டன் இழுவைத் திறன்கொண்ட கோ ப்ரோ சீரிஸ் ட்ரக்குகள் மற்றும் பேருந்துகள் அனைத்தும், முற்றிலும் புதிய பாடி அமைப்பைக்கொண்டவை. நவீனத் தொழில்நுட்பம்கொண்ட இதன் இன்ஜின்கள் எரிபொருள் சிக்கனம், பெர்ஃபாமென்ஸ், பராமரிப்புச் செலவு குறைவு என வாடிக்கையாளர்களின் நண்பனாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது ஐஷர்.

ஐஷர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்தார்த் லால் பேசும்போது, ''ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வால்வோ குழுமமும் ஐஷர் நிறுவனமும் இணைந்தபோது, இந்திய டிரக் சந்தையை நவீனமயத்துக்கு மாற்றுவது என்பதில் உறுதிபூண்டது. அது, இப்போது கோ ப்ரோ ட்ரக்குகள் மூலம் சாத்தியமாக்கியுள்ளோம். வாடிக்கையாளர் நலன், சிக்கனம், பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் ஐஷரின் கோ ப்ரோ தயாரிப்புகள் முன்னிலையில் நிற்கும்'' என்றார். நிகழ்ச்சியில் வால்வோ நிறுவனத்தின் ஆசிய பிராந்திய துணைத் தலைவர் ஜோசிம் ரோஸன்பெர்க் கலந்துகொண்டார்.

இந்தியாவில் 'பாரத் ஸ்டேஜ்-6’ தரம்கொண்ட இன்ஜினைத் தயாரிக்கும்  முதல் நிறுவனம் ஐஷர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism