Published:Updated:

ஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா

ஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா

 ##~##

20 லட்சம் ரூபாய்க்கு மேலான கார்களாக இருந்தால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட வேரியன்ட்களுக்கு கணிசமான டிமாண்ட் உண்டு. அதனால், ஆக்டேவியாவில் பெட்ரோல், டீசல் ஆகிய இருவகையிலுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளன. அதிக மைலேஜ் வேண்டும் என்பவர்களின் சாய்ஸ், டீசல் ஆட்டோமேட்டிக்தான். இதன் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கிறது?

 டிசைன்

ஆக்டேவியாவை டிசைன் செய்யும்போது, லாராவையும் நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் ஸ்கோடாவுக்கு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் லாராவின் வசதிகளையும் அதன் கம்பீரத்தையும் ஆக்டேவியாவில் சேர்த்து, புத்தம் புது காராக ஆக்டேவியாவை டிசைன் செய்திருக்கிறார்கள் ஸ்கோடா இன்ஜீனியர்கள்.

ஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா

பழைய ஆக்டேவியாவைவிட பெரிய, எடை குறைந்தது புதிய ஆக்டேவியா. பை-ஸெனான் ஹெட்லைட்ஸ், அத்துடன் சேர்ந்துள்ள எல்இடி 'டே டைம் ரன்னிங் லைட்ஸ்’ காரின் முன்பக்கத் தோற்றத்தை மிகவும் ஸ்டைலாக மாற்றியிருக்கிறது. பின் பக்க விளக்குகள் 'சி’ வடிவத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளன. 5 - ஸ்போக் மற்றும் 10 ஸ்போக் அலாய் வீல் ஆகிய இரு ஆப்ஷன்களின் விற்பனை செய்யப்படுகிறது ஆக்டேவியா.

உள்ளே

ஆச்சரியப்படும் அளவுக்கு காருக்குள் இட வசதி தாராளம். காரினுள் செல்வதும் வெளியே வருவதும் செம ஈஸி. ஜிகினா அம்சங்கள் எதுவும் இல்லாமல் செம ராயலாக உள்பக்கத்தை வடிவமைத்துள்ளனர். லெதர் சீட், சன் ரூஃப், ஸ்டீயரிங் கன்ட்ரோல், டச் ஸ்க்ரீன், அடாப்டிவ் ஹெட்லைட்ஸ், டோர் ஓப்பன் இண்டிகேட்டர், பின்பக்க ஏ.சி வென்ட், ஏபிஎஸ், காற்றுப் பைகள் என ஏராளமான வசதிகள். ஆனால், பெரிய டச் ஸ்க்ரீன் கொடுத்தவர்கள், ரிவர்ஸ் கேமரா கொடுக்கவில்லை. வெறும் ரிவர்ஸ் சென்ஸார் மட்டுமே! எஸ்டி கார்டு செலுத்த காருக்குள் வசதி உண்டு. பென் டிரைவ், ஐபாட் கனெக்ட்டிவிட்டி இல்லை. இதற்குத் தனியாக இன்னொரு அடாப்டர் வாங்க வேண்டும் என்பது எரிச்சல்.

ஒரு வீட்டைக் காலி செய்து எடுத்துச் செல்லும் அளவுக்கு, 590 லிட்டர் கொள்ளளவுகொண்ட ஆக்டேவியாவின் டிக்கி விசாலமாக இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா

இன்ஜின்

ஆக்டேவியாவின் பலமே டீசல் இன்ஜின்தான். இந்த காரிலும் 2 லிட்டர் பவர்ஃபுல் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நாம் இம்முறை டெஸ்ட் செய்த டீசல் கார் ஆட்டோமேட்டிக் 6-ஸ்பீடு, ட்வின் கிளட்ச் கியர்பாக்ஸைக் கொண்டது. 2 லிட்டர் டீசல் இன்ஜின் 141 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 1,500 ஆர்பிஎம் வரை மந்தமாக இருக்கிறது இன்ஜின். அதன் பிறகு டர்போ சுழல ஆரம்பித்ததும் 'விர்ரூரூம்’ என வீறுகொண்டு பறக்க ஆரம்பிக்கிறது. வேகம் குறைத்து, மீண்டும் வேகம் பிடிக்கும் போது, சரியான ரேஷியோவில் கியர்கள் மாறுவதால், கியர்பாக்ஸில் எந்தப் பிரச்னையும் இல்லை. 0-100 கி.மீ வேகத்தை 9.3 விநாடிகளில் கடந்து விடுகிறது. அதிகபட்சம் ஆக்டேவியாவில் 170 கி.மீ வேகத்தைத் தொட்டோம். இதற்கு மேலும் வேகம் இருந்தது என்றாலும் டாப் ஸ்பீடை டெஸ்ட் செய்ய, சென்னையைச் சுற்றிலும் எங்கும் சாலைகள் இல்லை. வேகம் போகப் போக இன்ஜின் சத்தமும் அதிகமாகக் கேட்கிறது.

ஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா
ஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரத்திலும் கையாளுமையிலும் ஆக்டேவியாக மிகச் சிறப்பாக இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மிமீ என்பதால், ஸ்பீடு பிரேக்கரில் ஈஸியாகத் தாண்டிக் குதித்து விடுகிறது. மேடு பள்ளங்களை மிகவும் திறமையாகச் சமாளிக்கிறது ஸ்கோடாவின் சஸ்பென்ஷன்.

ஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா

மைலேஜ்

டீசல் ஆட்டோமேட்டிக் இன்ஜின், மைலேஜிலும் குறைவில்லாத கார். நகருக்குள் லிட்டருக்கு 12 கி.மீ, நெடுஞ்சாலையில் 17 கி.மீ மைலேஜ் தருகிறது ஆக்டேவியா.

ஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா

ஸ்கோடா ஆக்டேவியாவுடன் போட்டி போட வெளியில் கார்கள் இல்லை. ஆக்டேவியாவுடன் போட்டி போடும் மற்றொரு கார் ஃபோக்ஸ்வாகன் ஜெட்டாதான். ஆனால், அதனைவிட சிறப்பம்சங்களிலும் உள்பக்க இட வசதி, டிக்கி இடவசதியிலும் சிறப்பாக இருப்பதோடு, பெர்ஃபாமென்ஸிலும் முன்னால் நிற்கிறது ஆக்டேவியா ஆட்டோமேட்டிக். சிட்டிக்குள் கியர்களை மாற்றி ஓட்டப் பொறுமையில்லை; கையில் 25 லட்சம் ரூபாய் இருக்கிறது என்பவர்கள், தாராளமாக ஆக்டேவியாவை வாங்கலாம்.

ஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா