Published:Updated:

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
##~##

சுந்தர்பாபு, கள்ளக்குறிச்சி.

மோட்டார் கிளினிக்

நான் யமஹா ஆர்எக்ஸ்-100 பைக்கின் ரசிகன். இந்த பைக்கை வாங்குவதற்காக தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு ரூபாய்க்கு வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

யமஹா ஆர்எக்ஸ்-100, இந்தியாவில் 1987-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை விற்பனயில் இருந்தது. ஆனால் இதில், 1987-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை, இந்த பைக் முழுக்க முழுக்க ஜப்பானில் தயாரித்து இங்கே விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகுதான் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஜப்பான் மாடலுக்கு வின்டேஜ் பைக் என்ற அடையாளம் வந்துவிட்டதால், நல்ல கண்டிஷனில் இருக்கும் பைக்குகள் 40,000 - 50,000 ரூபாய் வரை விலை போகிறது. அதன் பிறகு வந்த ஆர்எக்ஸ்-100 பைக், கண்டிஷனைப் பொறுத்து 10,000 முதல் 20,000 ரூபாய்க்குள் வாங்கலாம்.

மகேஷ் சிவராமன், தஞ்சாவூர்.

மோட்டார் கிளினிக்

நான் ஹூண்டாய் ஐ10 கார் வைத்திருக்கிறேன். புதிதாக 8 லட்சம் ரூபாயில் ஒரு கார் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், செடான் காரான ஹோண்டா அமேஸ் காரை வாங்குவதா அல்லது ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரை வாங்குவதா எனக் குழப்பமாக இருக்கிறது. என்னுடைய உயரம் 6 அடி. உட்கார்ந்து ஓட்டுவதற்கு வசதியான காராகவும், ஓட்டுதல் தரம் மற்றும் மைலேஜில் சிறந்த காராகவும், மெயின்டனன்ஸ் செலவுகள் குறைந்த காராகவும் இருக்க வேண்டும். இரண்டில் எந்த காரை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

இரண்டு கார்களில் ஹோண்டா அமேஸ்தான் சிறந்த கார். 6 அடி உயரமானவர்களும் வசதியாக உட்கார்ந்து ஓட்டக்கூடிய டிரைவிங் பொசிஷன் இருப்பதோடு, மைலேஜிலும் சிறந்த கார் அமேஸ். ஃபோர்டுடன் ஒப்பிடும்போது, ஹோண்டாவின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை குறைவு. மேலும், மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகம் வைக்காத கார் அமேஸ். ஓட்டுதல் தரம், கையாளுமை மற்றும் பில்டு குவாலிட்டியிலும் சிறப்பாக இருக்கிறது அமேஸ்.

சின்னாளப்பட்டி தர்மேஸ்வரன், சேலம்.

மோட்டார் கிளினிக்

நான் கல்லூரி மாணவன். புதிதாக பைக் வாங்கலாம் என இருக்கிறேன். பஜாஜ் பல்ஸர் 200என்எஸ், கரீஸ்மா, கரீஸ்மா ZMR - இந்த மூன்று பைக்குகளில் எதை வாங்கலாம்? ஸ்டைலான, நல்ல பெர்ஃபாமென்ஸ் கொண்ட பைக்காகவும் இருக்க வேண்டும்.

மோட்டார் கிளினிக்

மூன்று பைக்குகளில் சிறந்த பைக் பஜாஜ் பல்ஸர் 200என்எஸ். ஸ்டைலான பைக் என்பதோடு, கரீஸ்மா பைக்குகளை விட பெர்ஃபாமென்ஸிலும் சிறந்த பைக் பல்ஸர் 200என்எஸ். இது லிட்டருக்கு 38.5 கி.மீ வரை மைலேஜ் தரும்.

சர்வானந்த், சிவகாசி.

மோட்டார் கிளினிக்

நான் புதிதாக கார் வாங்கத் திட்டமிட்டிருக்கிறேன். ஆனால், புது கார் வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை என்பதால், யூஸ்டு கார் வாங்கலாம் என்பது திட்டம். பழைய கார் மார்க்கெட்டில் ஃபோர்டு ஃபிகோ, ஸ்விஃப்ட் உள்ளிட்ட டீசல் கார்களின் விலை 4-5 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இவ்வளவு விலை கொடுத்து பழைய காரை வாங்குவதற்கு, புது காரையே வாங்கிவிடலாமே என்ற எண்ணம் வருகிறது. ஹோண்டா சிட்டி உள்ளிட்ட பெரிய செடான் பெட்ரோல் கார்கள், 3 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கின்றன. இதனால், பெரிய காரையே வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். என்னுடைய முடிவு சரியா?

மோட்டார் கிளினிக்

ஃபிகோ, ஸ்விஃப்ட் என நீங்கள் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகச் சொல்லும் கார்கள் அனைத்தும் டீசல் இன்ஜின்கொண்ட கார்களாக இருக்கும். 3 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் ஹோண்டா சிட்டி, குறைந்தது 5 ஆண்டுகளாவது பழைய காராக இருக்கும். உங்கள் பட்ஜெட் 3 லட்சம் வரைதான் என்றால், நீங்கள் தாராளமாக ஹோண்டா சிட்டியை வாங்கலாம். ஆனால், வாங்கும்போதே டயர்கள் சரியான கண்டிஷனில் இருக்கிறதா, டிங்கரிங் வேலைகள் செய்ய வேண்டுமா, கிளட்ச், கியர்பாக்ஸ் எப்படி இருக்கின்றன? ஏ.சி, ஆடியோ சிஸ்டம் வேலை செய்கிறதா என முழுமையாகச் சோதித்துவிட்டு வாங்குங்கள். குறிப்பாக, காருக்கான இன்ஷூரன்ஸ் சரியாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். ஹோண்டா சிட்டியில் 1.5 - 2 லட்சம் கி.மீ வரை இன்ஜினில் பெரிய வேலை எதுவும் வராது. மெயின்டனன்ஸ் செலவுகள் குறைவாக இருக்கும் என்பதோடு, ஸ்பேர் பார்ட்ஸுகளும் எளிதாகக் கிடைக்கும். ஆனால், ஹோண்டா சிட்டி பெட்ரோல் கார் என்பதை மறந்துவிடாதீர்கள். அதிகபட்சம் நகருக்குள் 12 கி.மீ வரைதான் மைலேஜ் கொடுக்கும்.

மோட்டார் கிளினிக்

செய்யது முகமது, நாகப்பட்டினம்.

மோட்டார் கிளினிக்

ஏழு பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய பெரிய எம்யூவி கார் வாங்க வேண்டும். நல்ல கார் என்று நீங்களே பலமுறை டொயோட்டா இனோவைத்தான் கூறியிருக்கிறீர்கள். ஆனால், எனக்கு இனோவாவின் விலை மிகவும் அதிகம் என்பதுபோலத் தோன்றுகிறது. ஹோண்டா, இனோவாவுக்குப் போட்டியாக ஒரு காரை விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக மோட்டார் விகடனில் படித்தேன். அந்த கார் எப்போது விற்பனைக்கு வரும்?

மோட்டார் கிளினிக்

தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டுக்கொண்டே இருப்பதால், இனோவா அதிக விலைகொண்ட பிரீமியம் காராக மாறிவிட்டது. ஹோண்டாவின் மொபிலோ இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதவாக்கில் விற்பனைக்கு வரும். இது, மாருதி எர்டிகாவைவிட அதிக இடவசதி கொண்டதாக காராக இருக்குமே தவிர, இனோவா அளவுக்கு அதிக இட வசதிகொண்ட காராக இருக்காது. ஆனால், இதன் விலை நிச்சயம் இனோவாவைவிட குறைவாகத்தான் இருக்கும்.

மோட்டார் கிளினிக்

தினகரன், அருப்புக்கோட்டை.

மோட்டார் கிளினிக்

எனக்கு வயது 45. கடந்த எட்டு ஆண்டுகளாக பஜாஜ் கேலிபர் பைக் பயன்படுத்திவந்தேன். இப்போது புதிதாக பைக் வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். 50,000 ரூபாய்தான் பட்ஜெட். என்ன பைக் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

ஹோண்டா ட்ரீம் நியோ பைக் வாங்கலாம். 110 சிசி திறன்கொண்ட இந்த பைக்கின் விலை, 50,000 - 53,000 ரூபாய். நீளமான இருக்கை, ஓட்டுவதற்கு வசதியான ரைடிங் பொசிஷன், நல்ல மைலேஜ், நீடித்து உழைக்கக்கூடிய ஹோண்டாவின் தரம் என 100 சிசி பைக்குகளில் சிறந்த பைக்காக இருக்கிறது ட்ரீம் நியோ.