Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

அறிவேந்திரன், கள்ளக்குறிச்சி.

நான்KTM DUKE 200 பைக் வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். ஆனால், மோட்டார் விகடனில் கேடிஎம் 200 பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது, இன்ஜின் ஓவர்ஹீட் ஆகிறது என எழுதியிருக்கிறீர்கள். இந்த பைக்கை வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்

இன்ஜின் ஓவர்ஹீட் ஆவது உண்மைதான். ஆனால், அது பைக்கையே வாங்க வேண்டாம் என்ற அளவுக்கு இல்லை. ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்திலும் நிறைவான நேக்கட் பைக் கேடிஎம் 200.

செல்வகுமார், விருகம்பாக்கம்.

நான் மாருதி ஏ-ஸ்டார் வைத்திருக்கிறேன். இந்த காரை 2012-ல் வாங்கினேன். மாருதி, தற்போது ஏ-ஸ்டாரின் தயாரிப்பை நிறுத்திவிட்டது. அதனால், ஏ-ஸ்டாரை நான் வைத்திருக்கலாமா அல்லது விற்றுவிட்டு வேறு கார் வாங்கிவிடலாமா எனக் குழப்பமாக இருக்கிறது. தயாரிப்பு நின்றுவிட்டதால், ரீ-சேல் மதிப்பு குறைந்துவிடும், ஸ்பேர் பார்ட்ஸும் கிடைக்காது என்கிறார்கள்.

மோட்டார் கிளினிக்

மாருதியைப் பொறுத்தவரை, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காது என்பதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. 1996-ம் ஆண்டு வெளிவந்த 'ஜென்’னுக்குக்கூட இன்றுவரை மாருதியில் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கிறது. ஆனால், ரீ-சேல் மதிப்பு குறையும் என்பது உண்மையே! மேலும், ஏ-ஸ்டார் ஏற்கெனவே அதிகம் விற்பனையாகாத கார் என்பதால், ரீ-சேல் மதிப்பு போகப் போக அதிகமாகக் குறையும். பட்ஜெட் ஒரு பிரச்னை இல்லை என்றால், நீங்கள் இந்த காரை எக்ஸ்சேஞ்சில் கொடுத்துவிட்டு, புதிய கார் வாங்கலாம்.

கோபாலகிருஷ்ணன், அருப்புக்கோட்டை.

புதிதாக பைக் வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். ஹோண்டா ட்ரீம்யுகா வாங்கலாமா அல்லது மஹிந்திரா சென்ட்யூரோ வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்

ட்ரீம்யுகாவைவிட சென்ட்யூரோவின் விலை கிட்டத்தட்ட 7,000 ரூபாய் குறைவு. பட்ஜெட் அதிகம் இல்லை என்றால், சென்ட்யூரோவை வாங்கலாம். பணம் பிரச்னை இல்லை என்றால், ட்ரீம்யுகாதான் பெஸ்ட் சாய்ஸ். தரம், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்திலுமே சிறந்த பைக் ட்ரீம்யுகா.

உமாசங்கர், மேடவாக்கம்.

நான் யமஹா FZ பைக் வைத்திருக்கிறேன். இதில், பின்பக்க டயரை 20,000 கிமீ-க்கு ஒருமுறை மாற்ற வேண்டியிருக்கிறது. வேறு எதாவது டயர் பொருத்தலாமா?

மோட்டார் கிளினிக்

யமஹா FZ பைக்கில் இருப்பது தரமான, கிரிப்பான, எம்.ஆர்.எஃப் ட்யூப்லெஸ் டயர். ஆனால், நீங்கள் சொல்வதுபோல இந்த டயர் நம் ஊர்ச் சாலைகளில் 20,000 கிமீ-க்கு மேல் தாங்காது. ஆனால், ரோடு கிரிப் மற்றும் ஸ்டெபிளிட்டி வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ந்து இந்த டயரை உபயோகப்படுத்துவதுதான் நல்லது. வேறு டயர்களை மாற்றும்போது, மைலேஜிலும் பாதிப்பு ஏற்படலாம்.

ஜா.டார்வின்குமார், நாகர்கோவில்.

நான் தற்போது மாருதி ஆல்ட்டோ வைத்திருக்கிறேன். அடுத்தாக கொஞ்சம் பெரிய கார் வாங்கலாம் என நினைக்கிறேன். மாதம் 500 கி.மீ வரை காரில் பயணம் செய்வேன் என்பதால், பெட்ரோல் காரே போதும். ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஐ20 - இந்த இரண்டு கார்களையும் இறுதி செய்திருக்கிறேன். ஹூண்டாயில் நிறைய டிஸ்கவுன்ட் தருகிறார்கள். இரண்டில் எதை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

காரில் அதிகம் பொருட்களைக் கொண்டுசெல்ல மாட்டேன், டிக்கி தேவையில்லை என்றால், நீங்கள் ஹூண்டாய் ஐ20 காரையே வாங்கலாம். சிறப்பம்சங்கள் அதிகம் என்பதோடு, விலையும் குறைவு. ஹோண்டா அமேஸ் தரமான, அதிக மைலேஜ் தரக்கூடிய, பெர்ஃபாமென்ஸில் சிறந்த பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது. ஓட்டுதல் மற்றும் கையாளுமைத் தரத்திலும் அமேஸ்தான் பெஸ்ட். ஆனால், ஐ20 காருடன் ஒப்பிடும்போது சிறப்பம்சங்கள் குறைவு. பெர்ஃபாமென்ஸும் கையாளுமையும்தான் முக்கியம் என்றால், அமேஸ் காரை வாங்கலாம்.

சுரேஷ்கலை, மேகமலை.

தரமான 125 சிசி பைக் வேண்டும். ஸ்டைல் முக்கியம் இல்லை. அதிக மைலேஜும் குறைந்த மெயின்டனன்ஸ் செலவுகளும் கொண்ட பைக்காக இருக்க வேண்டும். எந்த பைக்கை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

ஹோண்டா ஷைன் உங்களுக்குச் சரியாக இருக்கும். நீடித்து உழைக்கக்கூடிய தரமான பைக் என்பதோடு, மெயின்டனன்ஸ் செலவுகளும் குறைவு. மைலேஜும் கிட்டத்தட்ட லிட்டருக்கு 60 கி.மீ வரை கிடைக்கும்.

யூசுப், சென்னை.

செய்தித் தாள்களில் அடிக்கடி நடுரோட்டில் கார் எரிந்துவிட்டதாகப் படிக்கிறேன். இதனால், கார் வாங்கவே பயமாக இருக்கிறது. எதனால் கார் எரிகிறது?

மோட்டார் கிளினிக்

கார் தீப்பிடிக்க இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். எலெக்ட்ரிகல் ஷார்ட் சர்க்யூட், ஃப்யூல் லைன் லீக். பொதுவாக, ஆடியோ சிஸ்டம் அல்லது புதிய ஹெட்லைட் என எலெக்ட்ரிக்கல் சம்பந்தமாக காரில் எந்த மாடிஃபிகேஷன் செய்தாலும் தரமான, அங்கீகாரம் பெற்ற நம்பிக்கையான ஷோ ரூம்களில் மட்டுமே செய்யுங்கள். தரமற்ற வொயர்கள் மற்றும் ஒழுங்காக ஃபிட் செய்யப்படாத எலெக்ட்ரிகல் லைன்கள் மூலம்தான் பெரும்பாலும் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடிக்கும். சரியான இடைவெளிகளில் சர்வீஸ் செய்யும் போது, ஃப்யூல் லைனைத் தொடர்ந்து செக் செய்வார்கள். அதனால், ஃப்யூல் லைனில் லீக் ஏதும் ஏற்படாமல் முன்கூட்டியே தவிர்த்துவிடலாம்.